ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைA.N.M. முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் - கத்தார்எதையும் பார்க்கும்போதும் அவரவர் அறிவிற்கு ஏற்பவே பார்த்து அதைப் புரிந்து கொள்கிறார்கள்அதற்கு ஏற்பவே செயல்படுகிறார்கள். இப்படி அவரவர் அறிவுக்கு ஏற்பவே பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படும் போது அதனால் ஏற்படும் துன்பங்களுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறதுஒருவன் தன்னை உற்றுப் பார்க்கும்போது, தான் ஒரு மனிதன் என தன் உடம்பை மட்டும் கருதி அதன்படி தன் மனதில் தோன்றும் எண்ணங்களின் படி நடந்து அதன் மூலம் ஏற்படும் இன்ப துன்பங்களைப் பெற்றுக் கொள்கிறான்.இன்னும் சிலர் நான் இந்த உடம்பும் மட்டும் அல்ல; எனக்கு உயிர் இருக்கிறது என தன் உடம்பையும் தன் உயிரையும் இணைத்துச் சிந்திக்கிறான். எனவே உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவை பற்றி அறிந்து அதன் மூலம் உடம்பைப் பாதுகாத்துக் கொள்கிறான்இருப்பினும் ஒரு காலத்தில் உடம்பை விட்டு உயிர் நீங்கும் போது சொல்லொண்ணா துன்பம் கொண்டு தன்னுடைய நிலை எப்படி என அறியாமல் அல்லல் படுகிறான்.தன்னை உடம்பாகக் கருதிக் கொண்டவன் அந்த உடம்பின் நிலையிலேயே பல செயல்களில் ஈடுபட்டு அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை அடைந்து முடிவில் உடம்பில் இருந்து உயிர் பிரியும் நிலையில் என்ன ஏது என அறியாமல் கொடிய நரகத்தில் வீழ நேரிடுகிறதுஎனக்கு உடம்போடு உயிர் இருக்கிறது என்று நினைத்து வாழ்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கள் உயிரைக் காத்து அதன் மூலம் உடம்பையும் காத்து வரும் போது ஒரு நிலையில் உடம்பில் இருந்து உயிர் பிரியும் வேளையில் தன் நிலை என்ன என அறியாமல் பாவப் படுகுழியில் வீழ்கிறான்.ஒரு கல்லினால் ஒரு நாய் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது; அதை  நாம் முதலாவதாகக் கூறியவன்  நாயை மட்டுமே கண்டு அதன் இன்பத்தில் மூழ்குகிறான்இரண்டாமவன் அது கல்லினால் வடிக்கப்பட்ட நாய்ச் சிற்பம் என  அறிந்து அதன் இன்பத்தில் மூழ்குகிறான்இவர்கள் இருவருமே இதன் முழுமையைப் புரிந்து கொண்டவர்கள் அல்லர்இப்படிப்பட்ட நிலையிலேதான்  அதிகமான மக்கள் உலகத்தில் வாழ்கின்றனர்.ஆனால் சிந்தனையின் முழுமை என்பது நாய் உருவம் கல்லிலே வடிக்கப்பட்டது; அந்தக் கல் பல அணுக்களின் தொகுப்பால் ஆனதுஅந்த அணுக்களில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் உள்ளதுஅதையும் பகுத்துப் பார்த்தால் அது சக்தியாகவே உள்ளது என்பது விளங்கும்இதே நிலையில்தான் மனிதனும் தன்னைப் பகுத்து உணரும் போது இறுதி நிலையில் சக்தியால் சங்கமிக்கிறான். சக்தியை  ஆக்க  முடியாத  நிலையும் அழிக்க முடியாத நிலையும் உள்ளதால் மனிதன் தன்னை சக்தி ரூபமாய் உலகில் வாழும்போதே உணரும் போது என்றும் அழியா நிலையை அவனால் உணர முடிகிறது.இப்படி பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பூமி, மேகம், மலை, சூரியன், சந்திரன், கோளங்கள் என எல்லாவற்றையும் சக்தி ரூபமாய் - ஓர் வடிவமாய் உணர்ந்தால் அதுதான் பிரபஞ்ச சக்தியாய் என்றுமே இலங்கி நிற்கும்அதிலிருந்து எல்லாமே வெளிப்படும்ஆதியாய், அரூபமாய் எங்கும் இயங்கி இலங்கி நிற்கும் இறைவனின் இருப்புத்தன்மை என்று அறிய முடிகிறது. இப்படி வெளிப்பட்டுள்ள எல்லாமே ஒரே சக்தியாய் இறைவனின் ஓருடலில் உள்ள உறுப்புகள் என  தான் விளங்கும்போது இனி  இந்த உலகத்தில் எப்படி இயங்குவது எனச் சிந்திக்க வேண்டிய நிலையும் தோன்றிவிடுகிறது.வலிமையான நெருப்பு, காற்று, தண்ணீர் வீட்டை அழிக்கிறது; காட்டை அழிக்கிறது; மனிதனை அழிக்கிறதுஉயிரினங்களை எல்லாம் அழித்து விடுகிறதுஆனால் இவை  இன்றியும் இவ்வுலகத்தில் உயிர்கள் வாழ வழியில்லை. எனவே இவற்றை எப்போது எப்படி எந்த அளவு உபயோகப்படுத்திக் கொள்வது எனத் தெரிந்தால்தான் நம்மைச் சூழ்ந்துள்ளவைகளின் தீமையிலிருந்து காத்துக் கொண்டும் அதிலுள்ள பயன்களைப் பெற்றுக் கொண்டும் இவ்வுலகில் வாழ முடியும்.உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அது வெளிப்படும்போதே பெளதிக வேதியல் பண்புகளைக் கொண்டுதான் வெளியாகியுள்ளதுஎனவே அது அது அதற்குள்ள விதிகளின்படியே இயங்கி வருகிறதுஇவை அனைத்தும் ஜடப் பொருளாய் தன் விதிப்படியே இயங்கி வரும்போது  அவை  தன்னைப் பற்றி அறிய வழியில்லை, தன்னைப் பற்றிச் சிந்திக்க வழியில்லை.தன்னை மாற்றிக் கொண்டு அதன் பெளதீக வேதியல் பண்புகளை மாற்றிக் கொள்ள வழியில்லை. ஆனால் ஒரே சக்தியான இறையிலிருந்து வெளியான மனிதன் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆற்றலும், அதை தனக்கு பயன்படுத்திக் கொள்ளும் அறிவும் பெற்று; திருக்குர்ஆன் கூறியது போல மனிதனை தனது கலீபாவாகவும், வெளிப்பாடுகளில் சிரேஷ்டமானதாகவும் இறைவன் வெளியாக்கியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.எனவே மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களின் தன்மைகளை உணர்ந்து, அறிந்து கொள்கிறான்ஆனால் அப்பொருட்களின் முழுமையை உணர்ந்தானில்லைஅது மட்டுமல்ல; தன்னுடைய உண்மையை அறியாது முன்பு கூறியது போல் தன்னை உடம்பாகவும், உயிர் என்று ஒன்று தனியாக தனக்கு உண்டு என்ற அளவில் மட்டுமே அறிந்து வாழ்கிறான்இப்படி வாழ்வதால் கூடி வாழும்போது ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து வாழத் தெரியவில்லைதன்னை இந்த உடம்பாகவே மட்டும் கருதி அதனால் அல்லாடுகிறான்.கருணையே வடிவான இறைவன் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் வெளியாக்கி மனிதனாய் இரசித்துக் கொண்டிருந்தாலும் அறியா மனிதனால் இவ்வுலகம் பெறும் அல்லல்கள் கண்டு, சக மனிதர்களின் கஷ்டங்களைக் கண்டு மனிதனின் வேதியியல், பெளதீக குணங்களை விளக்கி அதன் மூலம் அவன் எப்படி செயல்பட வேண்டும் என்ற உயரிய நிலைகளை விளக்க, தன்னிலிருந்தே தீர்க்கதரிசிகளை, தன்னுடைய தூதர்களை இப்பூமியிலுள்ள மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பிக் கொண்டே இருந்தான்.அப்படி அவனிலிருந்து வெளியான நபிமார்கள் தங்களை நன்கு அறிந்து உலக மக்களுக்கு வழிகாட்டியாக அந்த அந்தக் காலத்து மக்களின் அறிவுகளுக்கு ஏற்ப போதித்து மனித குலத்தைக் கப்பாற்றி வந்தார்கள்இறுதியாக வேத நபிநாதர், இருலோக இரட்சகர், எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதி இறையின் கருணையிலிருந்து வெளியாகி இனி உலகம் உள்ள காலமெல்லாம் மக்கள் எப்படி வாழ வேண்டும் எனும்  ­ஷரீஅத் சட்டப்படி வாழ்ந்து, அதன் மூலம்  உலகத்திற்கு வழிகாட்டி, என்றும் அழியா மகுடமாய் இம்மாநிலத்தில் விளங்குகிறார்கள்.மனிதனின் எல்லா நிலைகளையும் அறிந்து அவனின் பெளதீக, வேதியல் குணங்களை அறிந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டும் ­ஷரீஅத் சட்டம் இறைவனின் ஆணைப்படி இவ்வுலகத்தில் நின்று நிறைகிறதுதன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிந்தான் என்ற மொழிக்கு ஏற்ப அறிவு பெற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அந்த நிலை ஷரீஅத்தைப் பேணி நடக்கும் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் அமைப்பாய் உருவாக்கித் தந்துள்ளார்கள்.இதை விட்டு விலகுவதால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லைஆனால் விலகும் மனிதனின் நிம்மதி குலைந்து உலக வாழ்வும் மறுமை வாழ்வும் கேள்விக்குறியாகி விடுகிறதுஇந்த வழியிலிருந்து வேறு ஒரு சிறந்தவழி இல்லை என்பதால் தங்களை இறுதித் தூதராக்கி  உலகச் சட்ட திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் நாயகக் கோமான் அவர்கள்.மனிதன் முழுமை பெற்றவன் என்பதன் அடையாளம் அவன் வழி ­ஷரீஅத்  சட்ட திட்டங்களின்படியே இருக்கும். ஏனெனில் முழுமை பெற்ற நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்த வழி அவர்களைப்போல மனிதர்களை முழுமை பெற வைக்கும் வழியாகும்.ஷரீஅத்  சட்டம் தனி மனித சுதந்திரத்தைக் காத்து, இவ்வுலகத்தின் அனைத்தையும் காத்து, ஒற்றுமையுடன் சந்தோ­மாக நிம்மதியுடன் வாழ வைக்கும் வழியாகும். முழுமையை அறியாத முழுமை பெறாத மூடர்கள் மட்டுமே இதில் குற்றம் காணத் துடிப்பர்தன்னுடைய குறை அறிவால் இதில் மாற்றங்களைக் கொண்டுவரத் துடிப்பர்இப்படிச் செய்பவர்கள்  அனைத்தின் தன்மைகளை ஒரு சேர அறிந்து ஆதியாகிய இறைவன் பரிபூரணத்தை அறிந்தவர்கள் அல்லர் என நாம் கண்டு கொள்ளலாம்.நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வழித் தோன்றலாகிய கருணைக்கடல் குத்பு நாயகம், கெளதே ஸமான் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள் கூட தங்களுடைய ஆன்மிக அறிவுப் பயணத்தின் இறுதியில் தங்கள் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ­ஷரீஅத்தில் வந்து அமர்ந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் வழி வந்த, வந்து கொண்டு இருக்கும் அத்துணை வலிமார்களும், குத்புமார்களும் வாரிசுகளும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டதுதான் இவ்வுலக மக்களுக்கு இறுதித் தீர்வாக இருப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்.பெருமானார் வழிவந்த குத்புல் ஃபரீத் குத்புகள் திலகம் யாஸீன் நாயகம் (ரலி) அவர்களின் குலத்தோன்றலான நமது சங்கைமிகு ஆருயிர் குருநாதர் குத்புஸ்ஸமான் ­ஷம்ஸுல் வுஜூத், ஸாஹிபுல் வக்த் அவர்களும் பெருமானாரை நேசிக்காதவன் பேரின்பம் காணமாட்டான் என்பதாக, நமக்கு அதைத்தானே கூறுகிறார்கள். எனவே முழுமை என்பது இறைவனின் இயல்பேஅதை அறியும் ஆற்றல் மனிதனுக்கே! அதை அறிந்து உலகை வாழ வைப்பவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! அன்னவர்களின் வாழ்வை இன்றும் மெய்ப்பித்து வருபவர்கள் அன்னவர்களின் வழிவந்த வலிமார்கள், குத்புமார்களே! இக்காலத்தில் முழுமையான வடிவாய் பெருமானாரின் வழியை நடந்து காட்டி வருபவர்கள் காமில் குரு  நம் செ­ய்கு நாயகம் அவர்கள். வாழ்க ­ஷரீஅத்... வாழ்க நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புகழ்.