ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மெய்ஞன இளைஞர் அணிமுன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் அணி திரட்டப்பட்டிருக்கிறார்கள்அவர்கள் ஒன்றுபோல எழுச்சிகொள்கிறார்கள்புயலைப்போல செயல்படுகின்றார்கள்ஊர் ஊருக்கு அவர்களின் அடையாளம்தான் முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளமாக அறியப்படுகிறது.இந்த வி­சயமெல்லாம் மகிழ்ச்சிக்குரியதுதான்ஆனால், இந்த இளைஞர்கள் எதன்மூலம் தூண்டப்படுகிறார்கள்? யாரால் வழிநடத்தப்படுகின்றனர்? இவர்களின் களப்பணி எதுவாக இருக்கிறது? என சிந்தித்துப்பார்த்தால் அது வேதனைக்குரிய வி­யம்தான்.இந்த இளைஞர்கள் இஸ்லாத்தை குர்ஆனை - ஹதீஸை நிறையப்பேசுகிறார்கள். ஆனால்... தப்புத்தப்பாக! தலைகீழாக! இஸ்லாமிய அடிப்படைகளுக்கு மாற்றமாககளப்பணி நிறையச் செய்கின்றார்கள்ஆனால், அது தொண்ணூறு சதவீதம் கட்டைப்பஞ்சாயத்துக் கதையாகத்தான் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது.இந்த இளைஞர் சக்தியை சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணத் தவறியதால்தான் நம் இளைஞர்களின் ஆக்க சக்தி அழிவு சக்தியாக பரிணாமப் படுத்தப்பட்டிருக்கிறது? இதற்கு மாற்று வழி என்னசங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள்எப்படி?சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை அடையாளம் காணுங்கள்அவர்களை ஓரணியில்  திரட்டுங்கள்அமைதிக்காகவும், மஹல்லாவின் நற்பணிக்காகவும் உண்மையான சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைகளைப் பரப்பவும் அவர்களைப் பயன்படுத்துங்கள் என ஊக்கம் தருகிறார்கள்.அது மட்டுமல்லதங்களைப் பின்பற்றும்  முரீதுப் பிள்ளைகளிலும் இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த அவர்கள்  கட்டளையிடுகின்றார்கள்நம் இளைஞர்கள் சிந்தனையில் மெய்ஞ்ஞானத்தைச்  சுமந்தவர்களாக - செயலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பண்பில்  கலந்தவர்களாக - தியாகத்தில் அஹ்ல பைத்தினரின் அர்ப்பணிப்பில் மலர்ந்தவர்களாக - வீரத்தில் ஸஹாபாக்களின் நிழல்களாக - உருவாக வேண்டுமென ஆவல் கொள்கிறார்கள்.அந்த அணிஞான இளைஞர் அணியாக” வலம் வர வேண்டுமென்று பெயர் சூட்டி மகிழ்கின்றார்கள்அன்பர்களே! உங்கள் வீட்டுப் பிள்ளைகளை உற்றுப் பாருங்கள்! அவர்கள் ஒன்றுமறியாத சிறுபிள்ளைகள் என்ற  எண்ணத்தை உதறித் தள்ளிவிட்டுஞான இளைஞர் அணி”யில் ஒன்றுபடுத்துங்கள்! சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் புனிதப் பணியில் ஈடுபடுத்துங்கள்.


 இனி ஞானம் வாழும்! அதுவே உலகாளும்! பூமி புதியதாகுமே! என்ற பாடல் வரிக்கு உயிர் கொடுங்கள்.