ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »    2014     »    Feb 2014     »     2014 இலங்கை மீலாது நினைவலைகள்


2014 இலங்கை மீலாது
நினைவலைகள்

ஆலிம்புலவர்


இந்த ஆண்டு சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தாங்கள் நடத்தும் மீலாது விழாவுக்கான தேதிகளை முடிவு செய்து இன்ன இன்ன தேதியில் இந்த இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் ; முரீதுப் பிள்ளைகள் தங்குவதற்காக தங்குமிடங்களையும் ஆயத்தம் செய்துவிட்டோம் என அறிவித்திருந்தார்கள் .


வாப்பா நாயகம் அவர்களின் அழைப்பு அறிவிப்பு கிடைத்ததும் அந்தந்த ஊர் சபைகளில் அறிவிக்கப்பட்டபோது முரீதுப் பிள்ளைகள் மகிழ்வுடன் மனதளவில் இலங்கை புறப்படுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள் .


சொற்பொழிவாற்ற வரும் மார்க்க அறிஞர்களிடம் முன்கூட்டியே அறிவித்து விடுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது . அடியேன் மஹ்ழரி ஹள்ரத்திடம் தெரிவித்தபோது அவர்கள் வருவதற்கு ஒப்புக் கொண்டர்கள் . ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்திடம் தொடர்பு கொண்டு வழக்கம்போல் இந்த ஆண்டும் மீலாது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த போது !... ஒரு வி ­ யம் உங்களிடம் பேச வேண்டும் ...... என்று தயங்கியபடியே பேச்சைத் தொடங்கி , இந்த ஆண்டு சிங்கப்பூரில் 12 நாட்கள் தொடர் பயானிற்காக அழைத்தார்கள் . நான் அவர்களிடம் ஆண்டுகள் தவறாமல் வாப்பா நாயகம் அவர்களின் புனித விழாவிற்குச் சென்று வருகிறேன் . அதனால் சிங்கப்பூர் வர இயலாது என தெரிவித்தேன் ... அதற்கு அவர்கள் ; சிங்கப்பூரில் குழப்ப வாதிகள் மக்களின் ஈமானைக் குலைக்க முற்படுகிறார்கள் . எனவே அவசியம் தாங்கள் வந்து மறுப்புரைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள் .   அதற்கு அடியேன் அப்படியானால் வாப்பா நாயகம் அவர்களிடம் கேட்டு அவர்கள் அனுமதித்தால் சிங்கப்பூர் வருகிறேன் என சொல்லிவிட்டேன் .   எனவே நீங்கள் வாப்பா நாயகமவர்களிடம் பக்குவமாக எடுத்துக் கூறி அவர்கள் சம்மதம் தந்தால் சிங்கப்பூர் செல்கிறேன்இல்லையயனில் இலங்கை வந்து விடுகிறேன் எனத் தெரிவித்தார் !


அந்தச் சமயத்தில் சங்கைமிகு செய்கு நாயகமவர்கள் தமிழகம் வந்திருந்தார்கள்.  அவர்களிடம் ஜமாலி அவர்கள் கூறிய விஷயத்தை இலேசாக எடுத்துச் சொன்னபோது சற்று யோசித்து விட்டு , அவர் அங்கு சென்று வருவதால் பயன்பெறுவார் அல்லவா ? எனவே சென்று வரட்டும் எனக் கூறினார்கள் .   இந்த விஷயத்தை   ஜமாலி ஹழ்ரத்திடம் கூறியதும் அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் .


ஜமாலி அவர்களின் பயான் , கேள்வி - பதில் நிகழ்ச்சியை இலங்கை மக்கள் அதிகம் விரும்பினர் .   இந்த ஆண்டு அவர் வரவில்லையயனில் வேறு ஒரு நல்ல சொற்பொழிவாளரை ஏற்பாடு செய்ய வேண்டுமே ! அப்படி வருபவரை வாப்பா நாயகம் அவர்கள் பொருந்த வேண்டுமே என்ற கவலை எனக்கு . அன்புக்குரிய என் . எஸ் . என் , ஆலிம்   மற்றும் அதிரை அப்துர் ரஹ்மான் மற்றும் சில முரீதுகளிடம் தொடர்பு கொண்டு காயல்பட்டினம் அப்துர் ரஹ்மான் ஆலிம் , மேலப்பாளையம் காஜா முயீனுத்தீன் ஹள்ரத் இருவரின் சம்மதத்தையும் பெற்றேன் .   அல்ஹம்துலில்லாஹ் ..


எப்போதும் நான்கு அறிஞர்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்வது வழக்கம் .   இந்த ஆண்டு மூன்று ஆலிம் பெருமக்கள் தானே கிடைத்துள்ளனர் என எண்ணி சங்கைமிகு நாயகமவர்களிடம்   தெரிவித்த போது சரி .. மூன்று பேரே போதும் என சம்மதித்தார்கள் .காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் விழாவிற்கு மூன்று பேச்சாளர்கள் எவ்விதம் போதும் ? என கவலைப்பட்ட எனக்கு அதிரை   ­ ர்புத்தீன் . கா . அவர்களிடமிருந்து வந்த போன் செய்தி சற்று ஆறுதல் அளித்தது .   அது என்ன செய்தி

( இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ...)