ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai        »      2014      »     Feb 2014    »    N.R.I என்பவர் யார்


N.R.I என்பவர் யார் ?



என் . ஆர் . ஐ என்பவர் யார் ?

என் . ஆர் . என்பவர் வெளிநாடுவாழ் இந்தியர் அல்லது பி . . (PIO-Personsof Indian Origin) என்று சொல்லக்கூடிய இந்திய வம்சா வழியினரும் என் . ஆர் . என்றுதான் அழைக்கப்படுகின்றனர் .


பி . . டி 

இந்திய வம்சா வழியினர் என்பவர் யார் ? ஃபெமா (FEMA-Foreign ExchangeManagement Act) விதிகளின்படி இந்திய வம்சா வழியினர் என்பவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டைத் தவிர வேறு எந்த நாடுகளின் குடிமகனாகவும் இருக்கலாம் . ஆனால் அவரோ அல்லது அவரின் பெற்றோரில் எவராவது ஒருவரோ இந்தியக் குடிமகனாக இருந்திருக்க வேண்டும் . அல்லது அவரின் மூதாதையர் இந்தியக் குடியினராக இருந்திருக்க வேண்டும் .

இவற்றிற்குள் வராவிட்டால் ஒருவரின் வாழ்க்கைத் துணை இந்தியக் குடியினராக இருக்க வேண்டும்


நெருங்கிய உறவினர் யார்

இதற்கு முன்பு நமது கட்டுரைகளில் நெருங்கிய உறவினர் என்று பலதடவை குறிப்பிட்டுள்ளோம் . இப்பொழுது நெருங்கிய உறவினர் யார் என்ற கேள்வியும் எழும் . இதற்கு பதில் கம்பெனி சட்டம் 1956- ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது


பொதுவாக 22 வகையான உறவுகளை இந்தியச் சட்டம் உறவினர் என ஏற்றுக் கொள்கிறது . அவ்வகையான உறவினர்களில் அம்மா , அப்பா , மகன் , மகள் , மருமகன் , மருமகள் , தாத்தா , பாட்டி , பேரக்குழந்தைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள் சகோதரன் / சகோதரி மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள் அடங்குவர் .


அதேபோல் ஸ்டெப் மதர் / ஸ்டெப் மகன் / மகள் , ஸ்டெப் சகோதரன் / சகோதரி போன்றவரும் உறவினர்களில் அடங்குவர் . இது போன்ற நெருங்கிய உறவினர்களுடன் என் . ஆர் . - க்கள் வரவுசெலவு செய்வதற்கு , இந்தியச் சட்டம் நாம் இதற்கு முந்தைய அத்தியாயங்களில் பார்த்தது போல் , சிறப்புச் சலுகைகளை அளிக்கிறது .


ரியல் எஸ்டேட் முதலீடு

பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் ரியல் - எஸ்டேட்டின் வளர்ச்சியைக் கண்டு , இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளார்கள் . வெளிநாடுவாழ் இந்தியர் , பி . . மற்றும் இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர் இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம் . அவ்வகையான முதலீட்டாளர் பாகிஸ்தான் , வங்கதேசம் , இலங்கை , ஆப்கானிஸ்தான் , சீனா , ஈரான் நேபாளம் மற்றும் பூடான் நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும் பொழுது இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறுவது அவசியம் .

இவ்வகையான ரியல் எஸ்டேட் முதலீடுகள் விவசாய நிலங்களில் / தோப்புகளில் / எஸ்டேட்டுகளில் , பண்ணை வீடுகளில் இருத்தல் கூடாது . இங்கு குறிப்பிடத்தக்கது ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்த பொழுதும் , அவர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் விவசாயம் சம்மந்தப்பட்ட அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்பது தான் .

இவ்வகையான முதலீடுகளைச் செய்யும் பொழுது ஒருவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த பணத்தின் மூலமாகவோ அல்லது உள்நாட்டில் அவர்களின் என் . ஆர் . கணக்குகளில் உள்ள பணத்தின் மூலமாகவோ சொத்துகளை வாங்கிக் கொள்ளலாம் . டிராவலர்ஸ் செக் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு கரன்ஸி மூலமாகவோ ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்க முடியாது .

அசையா சொத்துகளுக்கு உண்டான வேறு சில சட்டங்களைப் பற்றிக் காண்போம் . என் . ஆர் . ஒருவருக்கு , இந்தியாவில் வசிக்கும் நபரோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமகனோ / பி . . - வோ அசையா சொத்தை அன்பளிப்பாகக் கொடுக்கலாம் . நாம் மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு !  அதேபோல் என் . ஆர் . ஒருவர் தனக்கு மரபுரிமை (Inheritance) மூலமாகவும் சொத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம் . என் . ஆர் . ஒருவர் தனக்கு இந்தியாவில் உள்ள அசையா சொத்துகளை இந்தியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம் .


அதேபோல் என் . ஆர் . வெளிநாட்டில் வாழும் மற்றொரு இந்தியருக்கோ அல்லது பி . . ஓவிற்கோ விவசாய நிலங்களை தவிர்த்து மாற்றிக் கொடுக்கலாம் .


நன்றி : தி இந்து நாளிதழ் 11.11.2013