ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai       »    2014      »    Feb 2014     »    வண்ணப்பறவைகள்


வியப்பு

வண்ணப்பறவைகள்

தொகுப்பு : ஆஷிகுல்கலீல் - திருச்சி


எல்லாப்பொருள்களின் மீதும்பேராற்றலுள்ளவனாகத் திகழும்ஏக இறைவன், எந்தஓர் ஆதாரமும் இல்லாமல் விண்ணில்பறக்கும் பறவைகள் தன்னுடையஅத்தாட்சிகளில் ஒன்று எனஇறைநம்பிக்கையாளர்களை நோக்கிக்கீழ்க்காணும் வசனம் மூலம்குறிப்பிடுகிறான்.


வானத்தின்காற்று வெளியில் இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டுப்பறக்கும் பறவைகளை இவர்கள்பார்க்கவில்லையா ? அவற்றைத்தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருமில்லை . நிச்சயமாகஇதில் ஈமான் கொண்ட மக்களுக்கு ( த்தக்க ) அத்தாட்சிகள்இருக்கின்றன .( அந்நஹ்ல் - 16:79)


வானவெளியில் பறக்கும் பறவைகளைத்தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவன் அர்ரஹ்மானைத்தவிர வேறொருவருமில்லை எனச்சொல்லப்படும் இத்திருவசனம்கூறுவதின் உண்மையை அறிவியல்விளக்கத்துடன் ஈண்டு ஆராய்வோம்.இறக்கைகளாகமாற்றியமைத்துள்ள முன்னங்கால்களைக் கொண்டு காற்றில்நீந்திச் செல்லும் பறவைகளுக்குப்பல விதமான தகவமைப்புகளை இறைவன்அளித்துள்ளான்,அவற்றைக் கொண்டுஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்தூரம்ஓய்வின்றிப் பறந்து செல்லமுடிகிறது.


இனிவிமானத் தொழில் நுட்பப்பொறியாளர்கள் வியக்கும்வண்ணம் பறவையின் உடலில்அமைந்துள்ள பறப்பதற்கேற்றதகவமைப்புகளை ஆராய்வோம்.


பறவைகள்பறப்பதற்கேற்ற இறக்கைகளும்அவற்றை முன்னும் பின்னும்தள்ள வலுவான மார்புத் தசைகளும்,உடல் எடையைக்குறைத்துக் காற்றில் மிதக்கக்காற்று நிரம்பிய குழல்எலும்புகளும்,காற்றைக்கிழித்துச் செல்ல படகு வடிவஉடலமைப்புடனும்,பறக்கும் திசைதிரும்ப வால் இறகுகளான சுக்கான்,பறப்பதற்குவேண்டிய சக்திகளைப் பெறஇடைவிடாத ஆக்ஸீகரண நிகழ்வும்,இந்நிகழ்வுக்குவேண்டிய உணவு,கூட்டுச்சர்க்கரையாக கல்லீரலிலும்,கொழுப்பாகதோலுக்கடியிலும் சேமித்துவைக்கப்பட்டும்;ஆக்ஸீகரணத்திற்குத்தேவைப்படும் பிராண வாயுவைஇரட்டை சுவாச முறையில் அதிகமாகப்பெற்றுக் கொள்ளும் தன்மையும்;பிராண வாயுவைதிசுக்களுக்கு இரத்தம்துரிதமாக எடுத்துச் செல்லஅதிவேகமான இதயத் துடிப்பும்;வேண்டிய அளவுநீரை உடலில் சேமித்து வைக்கக்குறைந்த அளவு நீரை வெளியேற்றியும்;உடலின் வெப்பத்தைஒரே சீராக வைக்க இறகுகளாலானவெப்பக் காப்புரையும்,விண்ணில்பறத்தலும்,மண்ணில் உள்ளஉணவைக் கண்டுபிடிக்கும்கூர்மையான கண் பார்வையும்,ஆகிய பலதகவமைப்புகளை இறைவன் பறவைகளுக்குமட்டும் தந்து அவற்றை விண்ணில்பறக்கச் செய்துள்ளான்.


மேலேசொல்லப்பட்ட நுட்பமானதகவமைப்புகளை ஒருங்கே பெற்றுவலசை போகும் பறவைகள் உணவைத்தேடியும்,அதிகக்குளிரிலிருந்து தப்பிக்கவும்,இனவிருத்திக்காகவும்பல்லாயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து செல்கின்றன.அநேக பறவைகள்பூமியின் வட துருவத்திலிருந்துதென் துருவம் நோக்கிப் பிரயாணம்மேற் கொள்கின்றன.எவற்றை யெல்லாமோஉலக அதிசயங்கள் என்கின்றோம்.இதுதான் அதிசயநிகழ்வாகும்.இதைவிட ஆச்சரியம்என்னவென்றால் தாய்ப் பறவைகள்பறந்து சென்ற பின் சில நாட்களில்அவற்றின் குஞ்சுகளும் வளர்ச்சிபெற்று பல்லாயிரக் கணக்கானகிலோ மீட்டர் தூரம் கடந்துசென்று தாய்ப் பறவைகள் சென்றஇடத்தை அடைந்து விடும்.அவற்றைவிடவியப்புக்குரிய செய்திஎன்னவெனில் ஒவ்வொரு வருடமும்குறிப்பிட்ட நேரத்தில்குறிப்பிட்ட வேகத்தில்,குறிப்பிட்டதூரம் பயணம் செய்கின்றன.சராசரி வேகம்மணிக்கு 60 கி.மீஆகும். சிலபறவைகள் மணிக்கு 300கி.மீவேகத்தில் செல்லும்,ஆர்டிக் டெர்ன்பறவைகள் அதிக குளிர் மற்றும்உணவுப் பற்றாக்குறை இவற்றிலிருந்துதப்பிக்க வட துருவத்திலிருந்துதென் துருவத்திற்குப் பறந்துசெல்கின்றன.அடுத்த சாதகமானபருவகாலத்திற்கு மீண்டும்வடதுருவம் வந்தடைகின்றன.இப்பறவைகள்வந்துபோகும் மொத்த தூரம்45000 கி.மீஆகும். அதுபோலநீண்ட கால்களை உடைய கோல்டன்புளோவர் பறவை வடதுருவத்திலிருந்துபுறப்பட்டு தென் அமெரிக்காவிற்குவலசை போகிறது.இது வந்துபோகும் தூரம் 30000கி.மீஆகும். இதுபோல வட இந்தியாவிலிருந்துதமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கல்மற்றும் கோடியக்கரை ஆகியபறவைகள் சரணாலயங்களுக்குப்பறவைகள் வருடந்தோறும் வந்துபோகின்றன. பறவையியல்வல்லுநர்கள் பறவைகளின்கால்களில் செய்திக் குறிப்புஅடங்கிய உலோக வளையங்களைப்பதித்து வலசை போகும் பறவைகளைப்பற்றி அறிகின்றனர்.


இவ்வாறுநீண்ட தூரம் வலசை போவதற்குப்பறவைகளின் உள்உணர்வே காரணமாகஅமைகின்றது என்பது ஆராய்ச்சியின்முடிவு. இதனைப்பகல் நேரக்கால அளவும்,உடலின்ஹார்மோன்களும் ஒழுங்குபடுத்துகின்றன.இத்தகையஉள்ளுணர்வை இறைவன் பறவைகளுக்குவழங்கியுள்ளான்.எனவே இந்தவிந்தைமிகு வலசைபோதல் நிகழ்வால்பறவையினம் அழியாமல் காப்பாற்றப்படுகின்றன.வலசை போதல்நிகழ்வு உடலின் உள்ளே உள்ளுணர்வாகஇயங்கும் ஒர் உயிரியல் கடிகாரம்எனவும் உயிரியலார் உரைக்கின்றனர்.இக் கடிகாரத்தைஇயக்குவது இறைவனே எனச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.இவ்வாறுஉயிரினங்களின் உள்ளுணர்வினால் நிகழும் அனைத்துநிகழ்ச்சிகளும் ஆறறிவுள்ளமனிதனுக்கு ஆச்சரியமாக உள்ளன.திருக்குர்ஆன்இறக்கப்பட்ட காலத்தில் உடலின்உள்ளே நிகழும் நிகழ்ச்சிகளைப்பற்றிய அறிவியல் வளர்ச்சிஇருந்திருக்குமானால் இறைவன்இன்னும் அதிகமாகத் தன்னுடையஅத்தாட்சிகளைச் சுட்டிக்காட்டியிருப்பான்.


அந்தக்காலக்கட்டத்தின் அறிவுவளர்ச்சிக்கு ஏற்ப சான்றுகளைஎடுத்துரைத்துள்ளான்.ஆனால் இறைநம்பிக்கையாளர்களுக்கு (மூமீன்களுக்கு)திருக்குர்ஆனிலுள்ளசான்றுகளே அதிகம்.வியத்தகுபறவையின் உடல் அமைப்பின்தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டுதான் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.விமானத்திற்கும்விமான நிலையத்திலுள்ளகட்டுப்பாட்டு அறைக்கும்தொடர்பு உள்ளது போல பறவையும்அர்ரஹ்மானின் கட்டளைக்குக்கட்டுப்பட்டு வானவீதியில்வலசை போகிறது.