ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்            

மனிதனை மனிதனாக வாழச் செய்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அன்பை - நன்றியைக் காட்டும் விதத்தில் ஊர்களில் நடந்து வந்த கந்தூரியை - மெளலிது ஓதுவதை அவர்களின் புகழ் பாடுவதை - மீலாது விழாக்களை நிறுத்திவிட்டனர். அவர்களைப் புகழ்ந்து பேசுவது - பாடுவது பாவம் என்கின்றனர்.

அல்லாஹ்வைப் பாடுங்கள். அண்ணல் ரஸூலைப் பாடாதீர் என்கின்றனர். இன்று எல்லோரும் உபதேசிகளாக - பேச்சாளர்களாகி விட்டனர். இஸ்லாத்தின் நிலை கீழே இறங்கிவிட்டது.மிருகமாக இருந்த மனிதனுக்கு வாழ்வியல் நெறிமுறையான ஷரீஅத்தைக் கற்றுக் கொடுத்து அழகான சமுதாயத்தை உருவாக்கிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே ஒரு கூட்டம் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டு மதினா சென்று ஜியாரத் செய்யாமல் வந்து விடுகிறது. இவ்வாறு செய்யும் ஹஜ் எவ்வாறு கூடும்? ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைச் செய்கின்றான்.அவர்களை விட்டுவிட்டான்.

கல்லெறிதல், மற்ற கிரியைகளைச் செய்கின்றான். அவர்களை மட்டும் ஜியாரத் செய்யாமல் திரும்புகின்றான். இது எப்படியென்றால் ஓர் ஊரில் தகப்பன் இருக்கும்போது அவரைச் சந்திக்காமல் நண்பனை மட்டும் சந்தித்துத் திரும்புவதற்குச் சமம். நன்றி உணர்வு இப்போது இல்லாமற் போய்விட்டது.ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக எவ்வளவு கந்தூரி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவர்களை எவ்வாறு வேண்டுமானாலும் புகழலாம்.

இதனை அல்லாஹ் பொருந்துவான்.ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவாக எல்லோர் மீதும் அன்புடையவர்களாகவே இருந்தார்கள். அன்சாரிகள், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பும் உதவியும் செய்கின்றவர்களாகவும் இருந்தார்கள்.உதவி செய்பவர்கள் மீது அன்பு இருப்பது இயற்கை தானே? ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றி (உதவி) வந்தால் அது வளரத்தானே செய்யும்.

தண்ணீர் ஊற்றி வளர்த்தவர்களுக்கு மரம் பலாபலனை அளிக்கத்தானே செய்கிறது. அதுதானே இயற்கை. அதுபோன்று தங்களுக்கு உடலால் பொருளால் உதவியாளர்களாக இருந்த அன்சாரிகள் மீது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த அன்பிற்குரியவர்களாக விளங்கினார்கள். அதுவும் இயற்கை தானே?
 


-- சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -