ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

செய்தி துளிகள்

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு ஸஹாபி கேட்டார்கள். அதாவது விண்ணிலே சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தன் வழியை விட்டு கீழே விழுந்தால் அப்போது பூமியில் தானே விழும். அதனால் பூமியில் பெரிய ஆபத்து ஏற்படுமோ யாரஸூலல்லாஹ் என்று கேட்டார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அப்படி தன் பாதையை விட்டு நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் கீழே விழுந்தால் மிகப் பெரிய விலங்கு உள்ளது. அதனை விழுங்கி விடும். பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றார்கள்.


தற்போது விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது விண்வெளியில் வட்டத்தில் சுற்றி வரும் நட்சத்திரங்கள் விழுந்தால் வானத்தில் (பெரிய கோள்) ஒன்று உள்ளது. அது அதனை விழுங்கிவிடும் என்று கண்டறிந்துள்ளார்கள்.


(தகவல் : டி.எம்.கே. ஷர்புத்தீன் ஹ.கா. - மதுரை)மார்க்கோபொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்றுநோய் தாக்கி இறந்து போனார்.


பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.


உலகிலேயே மிகச் சிறிய குட்டை மரம் வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம்தான்.


மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருக்கின்றன.


பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.


பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.