ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மரணத்தின் மடியில் மலர்ந்த மாண்பு வார்த்தைகள்...

இவ்வுலகில் முக்கியமானவர்கள் என்ன பேசினாலும் செய்தாலும் செய்திதான், அதிலும் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் தருவாயில் சொல்லிச் சென்ற வார்த்தைகள் வரலாற்றில் முக்கியப்

பங்கைப் பெற்று விடுகின்றன. அவைகள்...

1. அருமை நபி ஸல்லல்லாVஹு அலைஹி வஸல்லம் அவர்கள்    =                ரஃபீகல் அஃலா - உயர்ந்த நண்பனே!

2. உமர் (ரலி) அவர்கள் = உங்களுடைய கரண்டைக் காலுக்கு மேல் துணியை உயர்த்துங்கள், அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்துவான்.

3. உஸ்மான் (ரலி) அவர்கள் = குர்ஆன் ஷரீபை ஓதிய பிறகு “இறைவா! என்னுடைய மரணம் எனது மக்களிடையே ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துமானால் அதுவே நீ எனக்கருளும் கருணையாகும் என்று ஓதிய பிறகு ரூஹ் பிரிந்தது.”

4. குபைப் (ரலி) அவர்கள் = அல்லாஹ்வே எனது ஸலாமை நபி அவர்களுக்கு எத்திவை.

5. பிலால் (ரலி) அவர்கள் = எனது தோழரைச் சந்திக்கப் போகிறேன்.

6. அப்துற்றஹீம் புர்இய் (ரலி) அவர்கள் = ஸலவாத் ஓதினார்கள்.

7. ஜியாத் இப்னு சஹ்ல் (ரலி) அவர்கள் = எனது உயிர் அண்ணலாருக்கே.

8. அப்துல்லாஹ் இப்னு அனீஸ் (ரலி) அவர்கள் = அண்ணலார் மறைந்தனரா?

9. இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் = எனது இறைவனே என்னுடைய அனைத்து நிலைகளிலும், விஷயங்களிலும் (துணை)நில்.

10. அபூபக்கர் இப்னு ஹஸன் (ரலி) அவர்கள் = எனது சிறிய தந்தையே.

11. அப்துல்லாஹ் இப்னு அலி (ரலி) அவர்கள் = எனது சகோதரரே.

12. சங்கைமிகு யாஸீன் நாயகம் அவர்கள் = இன்று மாலை 5:30

13. மன்சூர் ஹல்லாஜ் (ரலி) அவர்கள் = நான்தான் ஹக் (இறை)வன்) 

14. இமாம் பஹ்ரூதீன் ராஜீ அவர்கள் = இறைவன் ஒருவன்

15. மகாத்மா காந்தியடிகள் = ஹேராம்

16. ஜூலியஸ் சீசர்   = (யூ டூ புரூட்டஸ்) நீயுமா புரூட்டஸ்?

17. தாமஸ் ஆல்வா எடிசன் = விளக்கை எரிய விடுங்கள். என் ஆத்மா பிரியும் போது வெளிச்சம் இருக்கட்டும்.

18. பாபர் (மகன் ஹூமாயூனிடம்) = இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே.

19. ரோம் (கொடுங்கோலன் காலிகுலா) = நான் இன்னும் இறக்கவில்லை.

20. பாக். பிரதமர் துல்பிகார் அலி புட்டோ = இறைவா நான் ஒரு குற்றமும் செய்யவில்லை

21. அறிஞர் த்லிஹாம் = என்னுயிர் எஜமானே

22. வின்ஸ்டல் சர்ச்சில் = எனக்கு எல்லாமே போரடிக்கிறது.

23. மேரி கியூரி = என்னை தனிமையில் விடுங்கள்.

24. பெஞ்சமின் பிராங்கிளின் = இறக்கும் மனிதனால் எதையும் எளிதாய்ச் செய்ய முடியாது.

25. பீத்தோவன் = நண்பர்களே! கை தட்டுங்கள்.

இத்துடன் இந்த நகைச்சுவை நாடகம் முடியப் போகிறது.