ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

இயற்கை இயற்றியவனின்

இருப்பாய் எனது குரு

ஆக்கம் : ஜஉஃபர் ஸாதிக் ஹக்கிய்யுல் காதிரிய், அபுதாபி

அரிதாய் நிகழும் ஆதியின் அவதாரத்தை ஆயுளில் தரிசிக்கும் பேறு கிடைக்குமா

ஆம். அனைத்து அவதாரத்தையும் அடக்கிய அவதாரத்தை, எம் குருவாய் கிடைத்தது.

ஆயுளில் பூரண மனிதரைக் காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்குமா

ஆம். பூரணமாகவே இருக்கும் எனது குருவைக் கண்டு பூரிப்படைகிறோம்.

அலி (ரலி) அவர்கள் தாம் தம்முடைய ஆதி ஆத்ம உலகின் சப்தத்தைக் கேட்பதாக உரைத்தார்கள்

ஆம். அவுன் நாயகரின் அவையில் அமர்ந்து அதன் அர்த்தத்தையும் ருசித்தோம்.

இயற்கையின் இயற்கை நிலையை அறிய முடியுமா?
இயற்கையை இயற்றியவனின் இருப்பாய் எமது குரு.

ஞானத்தின் அனைத்து அசைவுகளையும் மனித உருவில் காண முடியுமா?
ஆம். கலீல் எனும் எமது குருவின் அசைவில் அசைத்து அதை உணர்ந்தோம்.

ஒரு வார்த்தையில் பூரண அடங்கலையும் உச்சரித்து ருசிக்க முடியுமா?
ஆம். கலீல் எனும் நாமத்தை உச்சரித்து, எமது குருவை ருசித்தோம்.

மரண வெப்பத்தால் தாகித்தவர்களுக்கு தஸ்னீம் கிடைக்கும்.
எங்களுக்கோ, தஸ்னீமையும் உற்பத்தி செய்யும் தாகி பிரபமே கிடைத்தது.

கணிக்க முடியாத கருப்பொருளையும் காண முடியுமா?
ஆம். கண்டோம், அங்கே கருவின் கருவாய் எனது குரு.

நிகழ்கால ஒழுங்குகளை (ஷரீஅத்தை) ஓரிடத்தில் காண முடியுமா?
ஆம். முக்காலத்தின் ஒழுங்குகளையும் முழுமையாய் எனது குருவில் கண்டோம்.