ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மறைஞானப் பேழை நிறுவனர்

அஷ்ஷைகுல் காமில்குத்புஸ்ஸமான்

ஷ­ம்ஸுல் வுஜூத்ஜமாலிய்யா

அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய்

நாயகம் அவர்கள்


பெருமானார் நேசம் - நம் சுவாசம்ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்வதால் அல்லாஹ் நரகில் போட்டுவிடுவானா?! அப்படி நரகில் போட்டாலும் நரகம் சொர்க்கமாகிவிடும். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாம், நம் பிள்ளைகள், மனைவி பெற்றோர் அனைவரைக்காண அதிகம் அன்பு வைக்க வேண்டும். அப்படி வைப்பவர்தான் முஃமின்.

-- சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் –


எல்லாவற்றையும் விட நாம் ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மேலாக நேசிக்க வேண்டும். அவர்களைத்தாம் நாம் எல்லாவற்றையும் விட நேசிக்கின்றோம். நான் பெரிய ஆள், எனக்கு எல்லாம் தெரியும் என எவரும் நினைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அனைத்தைப் பற்றியும் கூறிச் சென்று விட்டார்கள்.

எல்லா வகையிலும் உயர்வான அல்லாஹ்வின் ஹபீபாகிய நாயகத்தின் புகழை நாம் உலகுக்குப் பரப்ப வேண்டும்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கந்தூரி உணவு அவர்களுக்கு உரித்தான (சொந்தமான) உணவு ஆகும்.ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நமது தாய், தந்தையர் மற்றும் உயிரை விட அதிகமாக நேசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள்பால் உள்ள மிகுந்த அன்பால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்போம். அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்தால் நமது வாழ்க்கை சீரியதாக இருக்கும். அதற்கு அன்புதான் அடிப்படை. அவர்கள் கூறியது அனைத்தும் அறிவுதான்.

 - சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் –