ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »     Aug2014    »    எனது வருகையால் எனது காலம் ஜொலித்தது !


எனது வருகையால் எனது காலம் ஜொலித்தது ! 1. நிச்சயமாக நான் அஹ்மதிய்ய அருத்த (தாற்பரிய) ங்கொண்ட அஹ்மதீயாக இருக்கிறேன். நான் திட்டமாக அஹ்மதிய்யத்தான அஹதிய்ய (ஏகத்துவ) த்தைக்கொண்ட  அஹதா (ஒருவரா) கவும் இருக்கிறேன் .
 2. நிச்சயமாக நான் அஹ்மதிய்ய சைய்யிதாகி யரஸூல் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பேரராக இருக்கிறேன். திட்டமாக நான் அஹ்மதிய்ய சைய்யிதாகிய ரஸூல் நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசாகவும் இருக்கிறேன் .
 3. என்னுடைய கொடிகள் செழிப்பான மிக உயர்ந்த மலைகளில் பறந்தன. அஹ்மதிய்யசங்கை கொண்டு (வஹ்தத்தின்) ஏகத்துவத்தின் அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன .
 4. நான் காமிலான ஷைகாகவும் தலைவராகவும் நேர்வழி காட்டுபவராகவும் இருக்கிறேன். நான் அஹ்மதிய்ய உள்ளமையின் உயரிய தகுதிகளை பிரச்சாரம் செய்கிறவராகவும் உயரியதரங்களளவில் அழைக்கிறவராகவும் இருக்கிறேன். (அல்லதுநான் அஹ்மதிய்ய உள்ளமையின் உயரிய தரங்களளவில் அழைக்கிறவராகவும் இருக்கிறேன் .)
 5. எனது வருகையால் எனது காலம் ஜொலித்தது. வணக்கம் (நற்செயல்களைக்) கொண்டு எனது நேரம் மணம்பெற்றது. அஹ்மதிய்ய அருள்களால் எல்லா நேரங்களிலும் எனது அறிவு நறுமணம் வீசியது .
 6. தேவை (விருப்பங்)களுக்காக எம்மை (எம்பக்கம்) நாடுகிறவர்களுக்கு நிச்சயமாக நான் கிப்லாவாக (முன்னோக்கும்தானமாக) இருக்கிறேன் . "கலீல் '' என்னும் நாமத்தை அழைக்கிறவர் அஹ்மதிய்யபேற்றை (அதிருஷ்டத்தை) அடைந்தவராவார் .
 7. என்னைப் பின்பற்றியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அஹ்மதிய்யாவைக் கொண்டு பேற்றினையும் உயர்தரங்களையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்வர்.
 8. கஷ்டத்தின் நெருக்கடியில் ""யாகலீல்அவ்ன்'' என உதவி தேடி அழைப்பவருக்கு அஹ்மதிய்யாவைக் கொண்டு அவருடைய உதவி வந்தடையும் .

  சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வாரிதாத்தான கஸீதத்துல் அஹ்மதிய்யா நூலிலிருந்து
  ....)