ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

இயற்கை வாழ்வியல் 


முஹம்மது அப்துல் காதர் ,D.Pharm.,/D.ACU., இயற்கை மருத்துவப் பிரியர் , ஆம்பூர்திருக்குறளில் மருந்தில்லா - மருந்துஅற்றது அறிந்து கடைபிடித்து மாறுஅல்ல 
துய்க்க துவரப் பசித்து

மனிதன் ஒருவன் தான் உண்ட உணவு உடம்பில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அதன்பின் நன்றாகப் பசித்து பிறகு உண்ண வேண்டும் . அப்படி உண்ணும் போதும் தனது உடம்புக்குக் கேடு செய்யா உணவையே உண்ண வேண்டும் . அவ்வுணவை நன்றாக மென்று அனுபவித்து உண்ண வேண்டும் . இதையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் அதுவே உடம்புக்கு மருந்தாகும் .மாறுபாடுஇல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடுஇல்லை உயிர்க்கு

மனிதன் தன் உடம்புக்கு ஏற்றுக் கொள்ளாத உணவை வெறுத்து விட்டுவிட வேண்டும் . உடம்புக்குக் கேடு செய்யா நல்ல உணவையே உண்ணல் வேண்டும் . இப்பழக்கத்தை தொடர்ந்து செய்து வரும்போது அந்த உடம்பில் இயங்கிக் கொண்டு உடம்பை வாழ வைத்துக் கொண்டருக்கின்ற விலைமதிப்பற்ற உயிருக்கு எந்தக் கேடும் ஏற்படாது. வாழும்காலம் வரை நலமுடன் வாழ முடியும்.


இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல்நிற்கும் 
கழிபேர்இரையான்கண் நோய்

மனிதன் அளவுக்கு மீறி உண்பதே மிகுந்த இழிவான செயல் என்பதை உணர வேண்டும் . குறைவாக உண்டு வந்தால் வயிற்றுக்கும் , வாழ்வுக்கும் இன்பம் கிடைக்கும் . அவ்வின்பமும் நிலைத்து நிற்கும் . மிருகம் தான் பார்க்கக்கூடிய இரைகளை எல்லாம் தின்பது போல் மனிதனும் கண்டதையெல்லாம் தின்று வந்தால் நோய்களுக்கு இரையாகி அத்துன்பமே நீங்காமல் பெருகி நிலைத்துவிடும்.


தீயளவுஅன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் 
நோயளவுஇன்றிப் படும்

உற்றான்அளவும் பிணியளவும் காலமும் 

கற்றான்கருதிச் செயல்

மனிதனுக்கு நோய் வந்தால் அந்நோயாளியின் உடம்பை ழுமையாக அறிந்து அதன் பிறகு அந்நோய் வந்ததன் காலச்சூழ்நிலைகள் எது என்பதையும் முழுமையாக உணர்ந்து அதன் பிறகு அவனது நோயின் குணங்களை முழுமையாகத் தெரிந்து அதன் பிறகு மருத்துவம் செய்பவனே முழுமையாகக் கற்றுத் தேர்ந்த மருத்துவன் ஆவான்.


உற்றவன்தீர்ப்பான் மருந்துஉழைச்செல்வான்என்று 
அப்பால்நாற்கூற்றே மருந்து

1. மருத்துவ முறைகளைச் சரியாகப் பின்பற்றும் நோயாளி 
2. நோயை முழுமையாகத் தீர்த்து வைக்கும் மருத்துவன் 
3. சரியான முறையில் பயன்படும் மருந்து 
4. கனிவாகச் செயல்படும் உதவியாளர்.

இந்த நான்கு வகையான செயல்களும் உண்மையோடு ஒன்று சேர்ந்து நம்பிக்கையோடு ஒருங்கிணைந்து செயல்படுவதே மருந்து அல்லது மருத்துவம் என்று போற்றத் தக்கதாகும்
.

இங்கு மருந்து எனப்படுவது இயற்கை உணவுகளேயாகும் . வாழ்கநலமுடன்.( ஸல்லல்லாஹுஅலா முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் )