ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »    2014    »    Aug2014    »    காணக்கிடைக்காத கற்பகத்தரு


காணக்கிடைக்காத கற்பகத்தரு


மறைஞானப் பேழை நிறுவனர்

அஷ்ஷைகுல் காமில்

குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத்

ஜமாலிய்யா  அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் நபிமார்களும் ரஸூல்மார்களும் ஹக்கில் ஹக்காய் எப்படி அவனது இல்மிலிருந்து (அறிவிலிருந்து) தோன்றினார்களோ அவ்வண்ணமே குத்புமார்களும் வலிமார்களும் தோன்றுகிறார்கள். அவர்கள் ஹக்கின் ரஹ்மத்தென்னும் மடியில் தயார் செய்யப்பட்டவர்கள். காலம் அவர்களை அடையும் போதேதான் சந்தேகமற்ற நிலை அவர்களில் தோன்றுகிறது . அதுவரை அவர்கள் அந்த அந்தஸ்தை  அடைந்திருந்தாலும் அது மறைமுகமாகவே  இருக்கும் .


( மர்ஹூம் கலீஃபா திண்டுக்கல் எஸ். அப்துல்கறீம் ஜமாலி அவர்களுக்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் அருளிய பட்டோலையிலிருந்து


காணக்கிடைக்காத கற்பகத்தரு


இந்த நூற்றாண்டுக்கு நாமேயுள்ளோம்இனி நமக்குப்பின் வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும்.  எம்மை இந்த ஜமானில்(காலத்தில்) அண்டியவர்கள் பெரும் பேறுபெற்றவர்களே. எம்மை விட்டுவிட்டோர் கைசேதப்பட்டவர் . எம்மைப் போன்றவர் இதற்குப்பின்னால் எவரும் தோன்றமாட்டார். இதுவேஹக்கின் ( இறைவனின் ) பஷாரத் ( நன்மாராயம் ) ஆகும்.

  - சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -அஹ்ல பைத்தை நேசித்தார்
அல்லாஹ் ரஸூலின் அங்கிகாரம் பெற்றார்


ஒருமுறை ஃபாத்திமா நாயகி(ரலி) அவர்கள் அபூஜஹ்லைக் கடந்து சென்றபொழுது, எந்தக்காரணமுமின்றி அந்தப் பிஞ்சுக்குழந்தையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான்சிறுமியான கண்மணி பாத்திமா(ரலி) அப்பொழுது குறைஷிகளின் தலைவராக இருந்த அபூசுஃப்யான் அவர்களிடம் சென்று நாகரீகமற்ற முறையில் தமது கன்னத்தில் அபூஜஹ்ல் அறைந்து விட்டது பற்றி புகார் கூறினார்கள். அபூஜஹ்ல் இருக்கும் இடத்திற்கு ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்துச் சென்ற அபூசுஃப்யான், இந்த கேடு கெட்ட அரக்க குணம் படைத்த அபூஜஹ்ல் உங்கள் கன்னத்தில் எவ்வாறு அறைந்தானோ அதைப்போலவே நீங்களும் அவனது கன்னத்தில் அறையுங்கள்! என்று கூறினார். ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்குத் திரும்பி தங்களின் அன்புத் தந்தையாரிடம் நிகழ்ந்தவற்றை விவரித்த பொழுது, அபூசுஃப்யான் அவர்களின் நீதமான நடவடிக்கையினால் கவரப்பட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அபூசுஃப்யான் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனிடம் அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது. பின்னாளில் அபூசுஃப்யான்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். பின்னாளில் பெருமானாரின்  மாமனாருமானார் .