ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    Apr2014    »    நன்றியுடன்

நன்றியுடன் ....


ஹாஜி K.B . காதர் ஹுஸைன் ஹக்கிய்யுல் காதிரி , திருச்சிகடந்த 2011ஆம் வருடம் ஹஜ் கமிட்டி குலுக்கல் மூலமாக புனித ஹஜ் பயணத்திற்கு நானும் ,என் மனைவியும் தேர்வு செய்யப்பட்டோம் .உற்றார் -உறவினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .பயணத்திற்கு செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்பட்டன .பயண அட்வான்ஸ் தொகையும் கட்டியாகி விட்டது .திருச்சி பள்ளிவாசல்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஹஜ் சிறப்பு பயான் நிகழ்ச்சிகளும் ,விருந்துகளிலும் கலந்து கொண்டு வந்தோம் .ஒரு பெருஞ்சோதனை ?பயணத்திற்கான அடுத்த பெருந்தொகை கட்ட வேண்டிய நாள் அறிவிக்கப்பட்டது .எதிர்பார்த்த இடத்திலிருந்து எங்களுக்கு வர வேண்டிய தொகை வருவதில் சிக்கலாகிவிட்டது .தொகை புரட்ட முடியாத நிலை .நாளும் நெருங்கிவிட்டது .திங்கட்கிழமை கடைசி நாள் .எங்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை .பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்து விட்டோம் .அன்று வியாழக்கிழமை .வாப்பா நாயகம் திருச்சிக்கு விஜயம் செய்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து மன ஆறுதல் பெற நானும் என் மனைவியும் வாப்பாவை நேரில் சந்தித்து நடந்த விஷ ­ யங்கள் அனைத்தையும் அவர்களிடம் பகர்ந்தோம் .வாப்பா அவர்கள் மெளனமாக அனைத்தையும் கேட்டறிந்தார்கள் .பிறகு முஸாபஹா செய்துவிட்டு விடை பெறும் சமயத்தில் அவர்கள் தாங்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஹஜ்ஜுக்குப் போவீங்க ...கவலைப்படாதீங்க ....என்று ஆசீர்வதித்தார்கள் .ஆறுதலுக்காக அப்படிச் சொல்கிறார்கள் என்று நினைத்து வீடு வந்து சேர்ந்தோம் .அன்று சனிக்கிழமை பள்ளிவாசலில் இருக்கிறேன் .மஃரிப் தொழுகை நேரத்தில் எனக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது .வீட்டிற்கு வாருங்கள் .நல்ல செய்தி காத்திருக்கிறது என அழைப்பு வருகிறது .தஞ்சையிலிருந்து என் மகன் மற்றும் மருமகள் வந்துள்ளார்கள் .சிரித்த முகத்துடன் ஒரு பொட்டலத்தைத் தருகிறார்கள் .இதில் பயணத்திற்கு வேண்டிய தொகை உள்ளது -கட்டிவிடுங்கள் என்றார்கள் .ஆச்சரியப்பட்டேன் .அசந்துவிட்டேன் .ஹஜ்ஜுக்கு போவீங்க கவலைப்படாதீங்க” என்று வாப்பா நாயகம் சொன்ன வாக்கு பலித்துவிட்டது .கண்ணீர் மல்க பார்க்கிறேன் .சிரித்த வண்ணம் வாப்பா நாயகம் நிழல் நகர்கின்றது -அல்ஹம்துலில்லாஹ் .நன்றி தெரிவிக்கும் வகையில் வாப்பா நாயகம் அவர்களுக்கு “உம்ரா” நிறைவேற்றப்பட்டது .