ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​அமுத மொழிகள்

சங்கைமிகு ஷைகு

நாயகம் அவர்கள்

 

அமுத மொழிகள்


இஸ்லாமிய ஒழுங்கு முறைகள்

 

17.6.2012 அன்று திண்டுக்கல்லில் தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரைதொடர்ச்சி.

 

    ஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்கே தெரியாமல் ஷிர்க் செய்தார்களாம். இப்படி இண்டர்நெட்டில் ஒரு ஹதீஸை வெளியிட்டு எழுதுகின்றனர். இவன் முஸ்லிமாக இருக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருத்தமற்றது. இந்த ஹதீஸ் ஸஹீஹானதென சொல்லித் திரிகின்றான். அதுஅவ்வாறு இருக்கவே முடியாது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என எங்களுடைய நிலைக்கு அவர்களைக் கொண்டுவரப் பார்க்கிறான். அவர்கள் ஷிர்க் செய்ய முடியாதே? அவர்கள் எவ்வாறு செய்ய முடியும்? ஷிர்க்கைப் போக்குவதற்காக வந்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என்பது சரியாகுமா? அனைத்து நபிமார்கள் வந்ததுமே ஷிர்க்கைப் போக்குவதற்குத் தான்!  ஷிர்க்கை இல்லாமல் ஆக்குவதற்குத் தான். மனிதர்கள் ஷிர்க் செய்து அல்லாஹ்வை சித்திரவதை செய்வது போல செய்துவந்தனர். அதனால் தான் அல்லாஹ் ஆதம் நபியிலிருந்து நபிமார்களை அனுப்பி ஷிர்க்கைப் போக்கினான். எல்லா  நபிமார்களும் சொன்னது அல்லாஹ் ஒருவன் என்றே. அல்லாஹ் ஒருவன்  எனச்  சொல்லும்போது எவ்விதம் ஷிர்க் வரும்? அப்படியானால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு ஷிர்க் செய்ததாக சொல்ல முடியும்இதுமுழுக்க முழுக்கப் பொய்யாகும்.


சத்தியம்


      அல்லாஹ் குர்ஆன் ­ஷரீபில் அத்திமரத்தின் மீது சத்தியமாக! ஜைத்தூன் (மரத்தின்) மீது சத்தியமாக! தூர்ஸீனா மலை மீது சத்தியமாக!  இந்த நம்பிக்கைக்குரிய நகரின் மீது சத்தியமாக!  என அல்லாஹ்வே சத்தியம் செய்து கூறுகின்றான். அதே போல  கஃபாவின் மீது சத்தியமாக என்றால் என்ன கருத்து? அவ்வாறு சொல்ல இயலும். யாரோ ஒருயஹூதி சொன்னதை எடுத்துப் போட்டு, அவனுடைய பணத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் அடிவருடிகள்   எவ்வளவு மோசமாக செயல்படுகின்றனர்! சத்தியம் என்று எடுத்துக் கொண்டால் அல்லாஹ் எத்தனையோ வி­ஷயங்கள் மீது சத்தியம் செய்கின்றான் (வள்ளுஹா -வல்லைலி என்பது போல) அப்படிப் பார்த்தால் அல்லாஹ்வே ஷிர்க் செய்தான் என வருமே  அது பொருந்துமா?  ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எந்த அளவு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவு இழிவுபடுத்த முனைகிறார்கள். சையிதுமார்கள் மீது இவர்கள்  கொண்டிருக்கும் கோபம் ஒருசிலர் பிராமணர்கள் மீது கொள்வார்களே அது போன்ற கோபம் என நினைத்தேன். கடைசியில் பார்த்தால் எங்கள் மீது கொண்டிருக்கும் கோபம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்டிருக்கும் கோபத்தின் காரணமாக எனத் தெரிந்து கொண்டேன். எப்படிப்பட்ட மனிதஇனங்கள்? மிருகத்தை விட மோசமானவர்கள்.மிருகங்களாவது ரஸூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தலை வணங்கி ஸஜ்தா செய்திருக்கின்றன. இவர்கள் கல்லை விடமோசமானவர்கள். கல் அவர்களின் கையில் தஸ்பீஹ் செய்ததே.


நம்பாதீர்


      இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு கூறுபவர்களை முஸ்லிம்கள் எனக்கூற முடியுமா? எனவே முதலில் நாம் ­ஷரீஅத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.  இப்படியே இஸ்லாத்தை இழிவுபடுத்தும் ஆட்களை நம்பி வந்தால் வருங்காலத்தில் இஸ்லாமே இல்லாமல் போய்விடும். அவர்களின் மார்க்கம்தான் வரும். கள்ள மார்க்கம். அதில் எல்லாமே செய்யலாம். கிருத்தவ மார்க்கத்தில் குடிக்கலாம், மற்றவைகளும் செய்யலாம். எதிலும் பாபம் இல்லை. அதுபோல இதையும் ஆக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் (வஹ்ஹாபிகள்) கொஞ்சப்பேர் தானே இருக்கிறார்கள். அதனால் எல்லோரையும் சேர்த்து அந்த மாதிரி ஆக்கப்பார்க்கின்றனர். எனவே கிருஸ்துவர்களாக ஆகி விட்டவர்கள் தாமே அவர்கள்? அப்படி ஆவதற்கு இலேசான வழி இது. யாரும்அந்தப் பக்கம் திரும்பாமல்  அல்லாஹ்வுக்காக- ரஸூலுல்லாஹ்வுக்காக கவனமாக இருந்து கொள்ளுங்கள். இந்த      வி­ஷயங்கள் சரியாக இருந்தால் தானே, மனங்கள் திருப்தியாக இருந்தால் தானே நீங்கள் தவ்ஹீதை விளங்க முடியும். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களே ஷிர்க் செய்து விட்டால் தவ்ஹீத் எங்கே வரப்போகிறது? தெளஹீதை அறிய இவ்வி­ஷயங்கள் மிக முக்கியம்.  உங்களுடைய எண்ணங்கள், நாட்டங்கள், பேசுவதில் தெளஹீதை வைத்துக் கொள்ள வேண்டும். வஹ்ஹாபிக்கு சப்போட்டாக- சார்பாக  அவர்கள் சொல்வதும் சரிதானே என்று போகக் கூடாது.அப்படி ஒரு பகுதியினர் இருக்கின்றனர். அவர்கள் சொல்வது சரிதானே என்றால் எப்படி சரிகுனூத் ஓதாதே  என்றால் சரிதானா ? ஷாபியாக்கள் குனூத் ஓதத்தான் வேண்டும்.முழங்காலுக்குக் கீழே நீங்கள் உடுத்தக்கூடாதுதலையில் தொப்பி போட வேண்டாம் என்று அவன் சொல்வான். அப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள் ? அதுசரிதான் என்றா? அது எப்படி சரியாகும்முழங்காலுக்கு மேலே தெரிவது ஆண்களுக்கு ஹராம். அவர்கள் சொல்வதும் சரிதான்இவர்கள்  சொல்வதும் சரிதான் என்று கூறும்  ஒரு பகுதியினரும் உள்ளார்கள். ஆனால் (வஹ்ஹாபிகள்) சொல்வது எல்லாமே பொய்தான். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லாதே  என்று சொல்பவன் கதைப்பது எல்லாமே பொய்தான் - அல்லாஹ் சொல்வதை மறுப்பதல்லவா அது? ஆகவே ஈமான் மட்டும் - ஈமான் என்று சொல்வது ஒரு பொருள் அல்ல.  உள்ளே ஓர் இடத்தில் வைக்கப்பட்டதுமல்ல.உங்களுடைய மன எண்ணங்களில் நேர்மையாக நடப்பது தான் ஈமான். சரியாக நடப்பது தான் ஈமான. உங்களது மனம், நிலை எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.


தவ்ஹீதுச் சட்டம்


      சிலர் குர்ஆன் ­ஷரீஃபை தஜ்வீதுப்படி ஓதாமல் ஓதுவது கூடாது எனச்சொல்வார்கள். தஜ்வீதுப்படி எல்லோரும் எப்படி ஓதப்போகிறீர்கள்? எல்லோருக்கும் படித்துக் கொடுப்பார் களாஎல்லோருக்கும் ஓதத் தெரியுமா? தஜ்வீதுப் படிகாரீகள் ஓதுவர். மற்றவர்கள் குர்ஆனை நல்ல முறையில் ஓதிக்கொள்ள வேண்டும். ஆனால் “ருப்பகாரிஇன் யக்ரஉல் குர்ஆன வல்குர்ஆனு யல்அனுஹு” எத்தனையோ பேர் குர்ஆன் ஓதுகின்றனர்ஆனால் குர்ஆனோ அவர்களை சபித்துக் கொண்டிருக்கிறது என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். இது ஹதீஸ். இந்த ஹதீஸுக்கு மாற்றமாக நடக்க முடியுமா ? உண்மை தான்! அது எப்படி ? ஜபர் ஜேரையெல்லாம் கண்டபடி உபயோகப்படுத்துவது. அப்போது எது சிஃபத்தாக வருகிறதோ எது முழாப் இலைஹி யாக வருமோ அது மாறிப் போய்விடும்.  அப்போது கருத்து முழுதும் மாறிவிடும். புள்ளிகளை சரியாகப் பார்த்து ஓத வேண்டும். இரு புள்ளியுள்ள தேக்கு பதிலாக மூன்று புள்ளி உள்ள சே என ஓதிவிட்டால், மற்றும் தோய் ளோய் ஹே  இவையெல்லாம் சரியாக உச்சரிக்க வேண்டும்.உச்சரிப்பு நாவில் வராமல் உங்கள் பழக்கமே அப்படி ஆகிவிட்டால் அதுபற்றி  பரவாயில்லை. உச்சரிக்க முடியாமல் போனதால் குர்ஆனை ஓதாமல் இருக்க முடியுமா ? முடியாது! ஓதத்தான் வேண்டும்.  உங்களுடைய மனநிலையை வைத்து நீங்கள் ஓதத்தான் வேண்டும் ஓதும்போதே எழுத்து வித்தியாசம் உங்களுக்குத்  தெரியத்தானே செய்யும். அதற்காக இன்ன என்பதைஅழுத்தி குன்னா செய்து ஓதப்போனால். குர்ஆன் முழுவதும் எத்தனை குன்னா வருகிறது? ­ஷ்த்து இல்லாத இடத்தில் ­ஷ்த்து வைத்து ஓதினால் பிழை ஏற்படும். அந்தக்காலத்திலேயே எழுத்துக்களில் அடையாளங்களைக் குறித்து வைத்து விட்டார்கள். இதுபோல சரியான முறையில் ஓதாதவர்களைப் பார்த்துத் தான் மேல்கண்ட ஹதீஸில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். “தப்பத்யதா அபீ     லஹபின்”. அபூலஹபின் இருகைகளும் சூகையாகிவிடட்டும் என வருவதை தப்பத் என ஸே வைத்து ஓதிவிட்டால் அவனது இருகைகளும் தரிபடட்டும் என்று பொருளாகி விடும். தரிபடட்டும் என்றால் வெட்டுப்படுவது அல்ல. எப்போதுமே இருக்கட்டும் என்று பொருள்.அதாவது அவனது புகழ் எப்போதும் இருக்கட்டும் என்று ஆகிவிடும். ஆகவே குர்ஆன் ­ஷரீபை கவனமாகப் பார்த்து ஓதி வரவேண்டும், தஜ்வீது தெரியாது என யாருமே குர்ஆன் ஓதுவதை விட்டுவிடாதீர்கள். இதுபற்றி ஈரோட்டிலும் முரீதுகள் கேட்டார்கள்.


மரியாதை


      அடுத்து குர்ஆனுக்கு மரியாதை இருக்கவேண்டும்.  ஒரு பகுதியினர் குர்ஆனை முழங்காலுக்குக கீழே வைத்து ஓதுகின்றனராம். ஏன் ? அல்லாஹ்வுக்கு மட்டும் தானே  மரியாதை செய்ய வேண்டும். குர்ஆனுக்கு மரியாதை செய்யத் தேவையில்லையாம். இப்படிப்பட்டவர்களை இவன் நாசமாகட்டும் என  குர்ஆன் லஃனத்து (சாபம்) செய்யும்


      குர்ஆனுக்கு மேலே மற்ற பொருட்களை வைக்கக் கூடாது. குர்ஆனைக் கையில் எடுக்கும் போதே பயபக்தியுடன் எடுக்க வேண்டும். தொடை மீது வைத்து ஓதாமல் கையில் வைத்து ஓதவேண்டும். அது தான் மரியாதை. பிள்ளைகள் மதுரஸாவுக்குப் போகும் போது கக்கத்தில் வைத்துக் கொண்டோ முழங்காலுக்குக் கீழே தொங்க விட்டுக் கொண்டோ போகக் கூடாது. மற்ற புத்தகங்களைப் போல குர்ஆனைக் கொண்டு போக முடியுமா ? குளிக்கப் போகிறவர்கள் தாம் கைலியை கக்கத்தில் வைத்துக் கொண்டு போவார்கள்.அதை  அவமதிப்போவோருக்குத் தான் குர்ஆன் லஃனத் செய்யும். அப்படிக் கொண்டு போகும் மாணவர்களைப் பார்த்துக்கொண்டு அவர்களைத் திருத்தவில்லை என்றாலும் அது லஃனத்துச் செய்வதற்கு வழியுண்டு. மரியாதைக்குரியது தான் குர்ஆன். அல்லாஹ்வால் இறக்கப்பட்டது.அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட பொருளுக்கு காலுக்கு கீழே வைத்தா மரியாதை செய்வது?


      வஹ்ஹாபிகள் என்ன சொல்கிறார்கள் ! போஸ்ட்மேன் வந்தான் - (போஸ்ட்மேன் வந்தான் என ன் விகுதிபோட்டுத் தானே சொல்கிறார்கள்). கடிதத்தைக் கொடுத்தான். அவன் போய் விட்டான்.கடிதத்தை வாசித்து விட்டு நாங்கள் கிழித்துப் போட்டுவிட்டோம். இவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தாம் போஸ்ட்மேன் என்கிறார்கள். குர்ஆன் எனும் கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். அதை நன்கு வாசித்துவிட்டு கிழித்துப் போட வேண்டியது தான். கடிதங்களைச் சேர்த்து சேர்த்து வைக்க முடியுமா ? கிழித்து வீச வேண்டியது தான். அது தான்அவர்கள் கூறும் கருத்து. மக்களில் அதிகமானோர் நெருப்புக்குப் போவோராகத் தான் இருக்கிறார்கள். அந்த இடம் போதாமல் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. நரகம் ஆள் வரவர விரிவடையும் .

                               (தொடரும்)