ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Sep 2012   »  இஸ்லாத்தில் ஆன்மிகம் இல்லையா?


புதிய  வாசகர்களுக்காக மறுபதிப்பு

 

 

இஸ்லாத்தில் ஆன்மிகம் இல்லையா?

 

    பிரபல இஸ்லாமிய வார ஏடான மறுமலர்ச்சி 20.12.92 இதழின் 11ஆம் பக்கத்தில் “தினமணிக்கு ஒரு கடிதம்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகிருந்தது கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தோம். அக்கட்டுரையாளர் தம்மை ஒரு வஹ்ஹாபி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதனை மட்டும் மறைமுகமாகக் கூறியிருந்தால் கூட பரவாயில்லை. இஸ்லாமிய சம்பூரண மார்க்கத்தில் ‘சூபிஸம்’ கிடையாது என்று கூறியதோடு, சூபிஸம் பேசும் வேதாந்திகள் திருக்குர் ஆன் கூறும் காபிர்கள் என்றும் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பும்) வழங்குவது போலவும் எழுதியுள்ளார்.


      ஒருபுதிய  பத்திரிகையில் இக்கட்டுரை வெளியாகி இருந்தால் கூட நாம் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் 40 ஆண்டு காலம் தமிழுலகில் பிரபலமான மறுமலர்ச்சியில், இஸ்லாமிய ஏக தெய்வ (தவ்ஹீது) கொள்கையை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்த ஒரு கட்டுரை இடம் பெற்றது மிக வியப்பை அளிக்கின்றது!


      சாதாரண மார்க்க சட்ட திட்டங்களை நன்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்களிடம் கேட்டுக் கொள்ளத் தூண்டும் - “மறுமலர்ச்சி” இக்கட்டுரையை அதுவும் இஸ்லாத்தின் அடிப்படைவேரான ஏகத்துவக் கொள்கை சம்பந்தமான இக்கட்டுரையை நன்கு கற்றுத் தேர்ந்த 

ஞான அறிவு பெற்ற அறிஞர்களிடம் ஏன் சரிகாணச் செய்து வெளியிட்டிருக்கக் கூடாது? எனும் ஐயம் எழுகிறது!


இனி.. அந்தக் கட்டுரைக்கு எமது மறுமொழி விளக்கங்கள்   

                                                                                                (ஆசிரியர் குழு, மறைஞானப்பேழை)      இஸ்லாத்தில்  ஆன்மிகம் பற்றி எழுதுபவரும் விமர்ச்சிப்பவரும் ஆன்மிகம் பற்றித் தெரிந்தவராகவே இருக்கவேண்டும் என்பது உண்மையும் நியதியுமாகும். ஆன்மிகம் என்பது தனிக்கலையாகும். மேலும் அது தலைசிறந்த கலையுமாகும்.இந்தக் கலை மனிதனைப் பூரணப்படுத்துவதாகும். இதனையே ஞானிகள் ஞானக்கலையெனவும் கூறுவர். ஞானம் என்பதற்கு “இர்பான்” என்பதே அரபு மொழி. இதனை எம்பெருமானார் கூறும்போது “மன் அறப நப்ஸஹு பகதுஅறப ரப்பஹு” இதன்பொருள்: எவன் தன்னை அறிந்தானோ அவன் நிச்சயமாகத் தன் இறைவனை அறிந்தான் என்பதாகும்.எனவே தன்னை  அறியும் கலையை இர்பான் எனவும் ஞானக் கலை எனவும் கூறுவதில் எந்தப் பிழையும் இல்லை. போற்றத்தக்க இக்கலை வஹ்ஹாபிகள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படாதுள்ளது. ஏனெனில் வஹ்ஹாபிகள் இறந்த பின் நடப்பவைகளை ஈமான் கொள்வதில்லை. அவர்கள் சுவர்க்கம், நரகங்களை நம்புவதுமில்லை. செத்தபின் 

கட்டைக்கென்ன வேலை? உயிருக்கென்ன வேலை? என்று வாளாவிருந்து உண்டுகளித்துக் காலத்தைக் கழிப்பவர்கள். வீண் குதர்க்கங்களை உண்டுபண்ணி முஸ்லிம்களுக்கிடையே தேவையற்ற பிரச்சனைகளை உண்டுபண்ணி உண்மைக்கு முரணாக நடப்பவர்கள். இவர்களுக்கு ஏகத்துவ ஞானம் என்பதே தெரியாது, மற்றுமது சுத்த சூனியமாகும். இக்கலைபற்றி அறியாதவர்கள், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என நினைத்து இதிற்றலையிடுவது முட்டாள் தனமும் மூர்க்கத்தனமுமாகும். இவ்வாறு அறியாத விடயங்களில் நுழைவது வைத்தியம் அறியாதவன் நோயாளிக்கு வைத்தியஞ் செய்யத் துணிவதாகும். இவர்கள் வஹ்ஹாபித் தலைவர்களான தைமிய்யா, இபுனு வஹ்ஹாப் ஆகியோரைப் பின்பற்றியவர்கள். தடியை எவர்க்கும் கையில் எடுக்கலாம்: அவர் அதை எடுத்ததற்காக வேட்டைக்காரனாகப் போவதில்லை. அதே போன்று எழுதுகோலைக் கையில் எடுத்தவர் எல்லாரும் எழுத்தாளராகப் போவதுமில்லை. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் எனக் கூற வேண்டியதாகிவிடுகிறது.


      ஆன்மிகம் என ஒன்று இல்லையென்பவர் எதை உதாரணமாகக் காட்டி எழுதினாரோ தெரியவில்லை. அவ்வாறு எழுதியவர் தைமிய்யா, இபுனு வஹ்ஹாப்போன்ற இஸ்லாத்தின் வி­க்கிருமிகளின் நூல்களிலிருந்து எடுத்திருந்தால்  ­ஷரீஅத்தையுடைய முஸ்லிம்கள் அதை ஏற்றுக்  கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஏற்றுக் 

கொள்பவர்களானால் அவர்களும் நிச்சயம் வஹ்ஹாபிகளே. வஹ்ஹாபிய சித்தாந்தம்-வஹ்ஹாபிஸம் என ஒன்றில்லை என எழுத்தாளர் ஒருவர் அன்றுதான் விழித்தெழுந்தவர் போல்  எழுதுகின்றார். அவர் வஹ்ஹாபிஸத்துக் குள்ளிருந்து வஹ்ஹாபிஸமில்லை யென  மயங்கிக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமனாகும். இஸ்லாத்தின் உண்மைக் கருத்துக்களை மாற்றி இஸ்லாத்தைக் கெடுத்து இளம் பிஞ்சு மனங்களில் ரஸூல் நாயகத்தின் மேல் வெறுப்பை உண்டு பண்ணி வரும் வஹ்ஹாபிஸம் இப்போது தனிப்பட்ட வஹ்ஹாபி மதமாய் துலங்க முற்பட்டுவருவது கண்கூடு, இனி மேல் தைமிய்யாவும் இபுனு வஹ்ஹாபும்  நபிமார்களாக்கப்படுவதில் எந்த ஐயமுமில்லை.


      இஸ்லாமிய கோட்பாடுகள் தெளிவானதும் திட்டவட்டதுமானதும் சந்தேகமற்றதும் இலகுவானதும் எளிமையானதுமாகும் என்பது பேருண்மை. இதை இஸ்லாத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை ஆராய்ந்து விளங்கிய இஸ்லாமல்லாத அறிஞர்களும் எடுத்துரைத்த உண்மை. ஆயினும் இதன் தாற்பரியத்தை அறிவதே இஸ்லாமியனைப் பூரணப் படுத்துவதாகும்.


      கோட்பாடு என்பது கொள்கை, நடத்தை ஆகிய கருத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த ஒரு சில ஸூராவான இக்லாஸில் மட்டும் எல்லாக் கொள்கைகளும்,கோட்பாடுகள் என்பன முழுக்குர்ஆனிலும் ஹதீஸிலும் இமாம்களின் நூல்களிலும் 

அமைந்துள்ளன. வஹ்ஹாபிகள், குர்ஆன் ஹதீஸ்களில்  உள்ள கோட்பாடுகளைப் பரிபூரணமாய்  நம்பமாட்டார்கள். சிலவற்றின் கருத்தைத் திரித்தும் திருத்தியும் உண்மையான கோட்பாடுகளை மாற்றியும் அதையே இஸ்லாமியக் கோட்பாடுகள் எனக் கூறுவர். மேலும், இமாம்களைப் பூரணமாய் நம்பமாட்டார்கள். தைமிய்யாவையும் இபுனு வஹ்ஹாபையும் மட்டுமே இமாம்களாகக் கொள்வர்.


      தெளஹீதெனும் ஞானக்கலை எல்லாருக்கும் பொதுவானது. இந்த  ஞானக் கலையை ஆன்மிகம், ஆத்மிகம் -இறைஞானம்- ஏகத்துவம் எனவெல்லாம் கூறுவர். இஃது என்று மனித இனம் வெளியாகத் தொடங்கிற்றோ அன்று தொடுத்து இந்தத் தவ்ஹீதும் வெளியாயிற்று. நபிமார்கள் ஒவ்வொருவரும் கொண்டுவந்த வேதம் - இறை ஒருவன் எனும் ஏகத்துவ ஞான வேதமாகும். அது தான் லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனக் கூறப்படும் இஸ்லாமிய மூல மந்திரமாகும். அல்லா(ஹ்) வே யன்றி (வேறு) இறையில்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லா(ஹ்) வின் தூதர் என்பதே இதன் கருத்து. எம்பெருமானாருக்கு முன் வந்தோர்  லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை வலியுறுத்தினார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. எனவே, ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் எம்பெருமானார் வரை அனைத்து நபிமார்களும் ஏகத்துவத்தையே கூறி அதனையே பலப்படுத்தி வந்தார்கள்  என்பதை விளக்கமுள்ள சிறு குழந்தை முதல் பகுத்தறிவுள்ள அனைத்து மனித வர்க்கமும் 

நன்கு அறிகின்றனர். ஆதலால் ஞானக்கலை அல்லது  ஆன்மிகம் ஓரினத்தாருக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறுவதும் அது  சைவ சித்தாந்தம்  எனக் கூறி சைவமக்கள் கூறிவரும் ஏகத்துவத்தை இழிவாகக் கருதி இஸ்லாமியர் ஏகத்துவம் பற்றிப் பேசும்போது இஸ்லாத்தில் ஏகத்துவமில்லை: இவர்கள் சைவ சித்தாந்தம் பாடுகிறார்கள் எனக்கூறுவதும் அல்லாஹ் ஒருவன் எனும் ஞானக் கலையை இழிவுபடுத்துவதாகும். இது வஹ்ஹாபிஸத்தில் ஒரு அபகுதியாகும்.


      ஞான விளக்கம் அறியாதோரே இது சைவசித்தாந்தம். இதுபவுத்த சித்தாந்தம். இது கிருத்துவ சித்தாந்தம் எனக் கூறுவர். மேலும் இஸ்லாத்தில் ஆன்மிகக் கலை இல்லையெனக் கூறி இஸ்லாத்தை இழிவுபடுத்துவர். அவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாமிய தத்து வார்த்தத்தையே அறியாது, அறியாதார் சொற்கேட்டு வழிகெட்டுப் போகும்அப்பாவிகள். ரஸூல் நாயகம் அவர்களுக்கு முன்வந்த வேதங்களில் ஏகத்துவக்கலை ஒழுங்குபடுத்தப் படாதிருந்தது, அதனாலேயே மனிதனைக் கடவுளெனக் கருதி வணங்கும் நிலை ஏற்பட்டது. எந்த நபியும் தன்னை வணங்கும்படி கூற வில்லை. ஆயினும் மக்கள் வணங்கத் தொடங்கினர். எம்பெருமானார் முழுமையே இறை மற்றனைத்தும் அதன் பகுதிகளே எனக்கூறி, முழுமையான இறையையே வணங்குங்கள். அதன்பகுதிகளை 

வணங்காதீர்கள். அது ஷிர்க்கெனும் இணை வைத்தல் என விளக்கம் பகர்ந்த மையாலும் தன்னை வணங்காதீர்கள் என்று கூறியமையாலும விக்கிரக வணக்கங்கள் நிக்கிரகம் செய்யப்பட்டன. அன்றோடு மனிதனையோ  விக்கிரங்களையோ வணங்கி வந்த வணக்கத்திற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதையறியாத சிலர் ஏகத்துவஞானம் அல்லது ஸூபிஸம் என்பது மனிதனை வணங்கும் கலையென சிறுபிள்ளைத் தனமாகக் கூறுவது அன்னியர் மத்தியில் வெட்கித் தலை குனிய வேண்டிய செயலாகும். அந்தக் கலையை அறியாவிட்டால் அறிந்தவரிடம் அறிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அல்லது மவுனமாக இருக்கவேண்டும். வேத தத்துவார்த்தங்களைக் கொலை செய்யத் துணிவது பகுத்தறிவற்ற செயலாகும்.


      எம்பெருமானார் அவர்களின் மறைவுக்குச் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் பக்தாத் நகரத்தில் சுற்றுச்சூழலில் உருப்பெற்றப் பழைய வேதாந்த கருத்துகளின் மறுபிறப்பே சூபிஸம் எனக்கூறுவது உண்மைக்கு முற்றும் முரணானது . சரித்திராசிரியர்கள் எழுதுவனவெல்லாம் முற்றும் உண்மையெனக் கருதுவது பொருந்தாது. அவர்கள் ஆராய்ச்சியின் பயனாக அவர்கள் கண்ட முடிவையே எழுதுவார்கள். இதையெல்லாம் பேராதாரமாகக் கொண்டு முடிவுக்கு வருவது அறிவுக்குப் பொருந்தாது.


      கட்டுரையாளர், பக்தாதாகிய புனித நகரத்தில் இஸ்லாத்திற்கே எதிரான 

மனிதனை மனிதன் வணங்கும் கலை ஏற்பட்டது எனக் கூறி இருப்பது  வருந்தத்தக்கது.  எந்தக்காலத்திலும்  எந்த இடத்திலும் மனிதனை மனிதன்  வணங்கும் கலை இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பதை சிறிதேனும் அறிவுள்ளவன் அறிந்து கொள்வான். ஏனெனில் குர்ஆனே கீழ்வருமாறு  கூறுகிறது, அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு இணையாக ஒருபொருளையும் கொள்ளாதீர்கள். இதையறிந்த பெரும் பெரும் மேதைகள் தாம் பாக்தாத் நகரில் இருந்தார்கள்,


      முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள் இஸ்லாத்தையும் பரப்பி தெளஹீதெனும் ஞானக் கலையையும் பரப்பினார்கள். இதனால் இவர்களுக்கு முஹிய்யுத்தீன் எனப் பெயரும் கொடுக்கப்பட்டது. இபுனு அறபி (ரலி) அவர்கள் ஞானக் கடலாகவே விளங்கினார்கள்.  அப்துல் கரீமுல் ஜீலி (ரலி) அவர்கள் சிறந்த ஞானநூல்களை எழுதினார்கள். இபுனு அறபி (ரலி) போன்றவர்கள் எழுதிய ஞானநூல்கள் ஆங்கிலத்திலும் கூட  மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.


      இவைகளெல்லாம் தத்துவ ஞானத்தை விளக்கும் நூல்களாகும். இவைகளே இஸ்லாத்தின்  உண்மையான தத்துவஞானம்.  இத்தகைய பெருமைமிக்க நூல்களை சிறிதேனும் வாசித்தறிந்தால் தான் இஸ்லாமிய தத்துவார்த்தம் என்ன என்பதை அறிந்துகொள்ளவியலும், அல்லாதோர் கூலிக்கு மாரடிக்க வேண்டியதே. மேலே கூறப்பட்ட பெரும் பெரும் ஞானிகளை எதிர்ப்பவர்கள் 

வஹ்ஹாபிகளே. இதற்காகவே அவர்களுக்கு வஹ்ஹாபி நாடுகளில்  இருந்து நிறையப்பணம் வருகின்றது.  இதனாலேயே இஸ்லாத்தின்  ஷரீஅத்தும் மாற்றப்பட்டு தெளஹீதும் அழிக்கப்பட்டு  இபுனு தைமிய்யாவின்               பிதுஅத்தும் புகுத்தப்பட்டு வருகிறது.


     தெளஹீத் என்பது தத்துவார்த்த ஞானமாகும். இதுவே இஸ்லாத்தின் பெருமை மிக்க    ஃபிலாஸபி  ஆகும். இந்ததத்துவார்த்தத்தைப் பின்பற்றுபவர்களையே ஸூபிகள் எனக் கூறுவர். ஸூபி என்பது மெய்ஞ்ஞானி. துறவி எனும் கருத்துக்களை உடையது. அல்லாஹ் என்பது என்ன எனும் கருத்தை ஆராய்ந்து விளங்கி அவனுக்கு மாறு செய்யாமல் தூய மதமாகிய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களையே முவஹ்ஹித்துக்கள் எனக்கூறுவர். அவர்கள் தாம் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் கருத்தைத் தீர விளங்கி அறிந்தவர்கள். இவர்களே தாம் இல்லறத்துறவும் பூண்டவர்கள் அல்லாஹ் அல்லாத எதையும் தெய்வமெனக் கருதாதவர்கள். அவனையே நம்பியுள்ளவர்கள். உள்ளத் தெளிவுடையவர்கள் “தஸவ்வுப்”  எனும் அறபிச் சொல்லிருந்து வந்ததே “ஸூபிய்” எனும் சொல்லாகும். “தஸவ்வுப்” என்பது தத்துவார்த்த  ஞானக்கலை என்பதே. இதை அறியாதவர்களே தாம் இஸ்லாத்தில் ஸூபிஸம் இல்லை எனக் கூறுவார்கள். இவ்வாறு சிறு பிள்ளைத்தனமாகக் கூறுகிறவர்கள் இபுனு தைமிய்யாவினதும், இபுனு வஹ்ஹாபினதும் புரோகிதத்தையும் பிதுஅத்தையும் பின்பற்றியவர்களே  

யாவர்.      ‘தெளிவான சந்தேகமற்ற இஸ்லாமியக் கடவுள்கொள்கைக்கு முரணான வேதாந்திகளின் வழிகேட்டிலிருந்து  மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டவரே கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் பிறந்த முகம்மது இப்னு அப்துல் வஹாப் (1703 - 1787) என்னும் பெரியார். அவர் ஏதும் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை புதிய கொள்கையையோ அல்லது சித்தாந்தத்தையோ வகுக்கவில்லை.அப்படிச் சொல்வதும் கருதுவதும் வீண்கற்பனை” என்று கட்டுரையாளர் ஒருவர் வீண்விளக்கம் கொடுத்திருப்பதைப் பார்ப்பின் உண்மையான ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், இது வஹ்ஹாபியத்தை மூடி மறைக்கும் தந்திரம் என்பதை நன்கு அறிவார்கள். நபியவர்கள் போதித்த இஸ்லாமியக் கொள்கையையே இப்னு அப்துல் வஹ்ஹாப் நினைவுபடுத்தினார் ...” என எழுதியிருப்பது  விந்தைமேல் விந்தையுமாகும்.  மக்களை வழி கெடுக்கச் செய்யும் தந்திரமுமாகும்.இபுனு வஹ்ஹாப்தைமிய்யாவின் கொள்கைகளை மாற்றமின்றி மேலும் மிகைப்படுத்திக் கூறியவர் என்பதை எவரும் நன்கு அறிவர். இபுனு தைமிய்யாவைப் பற்றி அல்லாமா முஹம்மத் அப்துர் ரஹ்மான் என்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கீழே கவனிப்போம்.


      “இபுனு தைமிய்யா வஹ்ஹாபிகளுள் மிகப்பெரிய வஹ்ஹாபி. அவரோ மார்க்கத்தில் இல்லாதவற்றைப்  புதிதாக உண்டுபண்ணியவரும் பாபங்களின் 

செய்குமாவார். கிளர்ச்சிகளை உண்டு பண்ணும் தீர்மானங்கள் அல்லது நம்பிக்கைகளை முழுமையாக முதலில் மொழிந்தவர். உண்மையிலேயே அவர் வழிகெட்ட இந்தப் பிரிவினருக்கு இஸ்லாத்துக்கொவ்வாத புதுக் கருத்துக்களை அமைத்துக் கொடுத்தவர்” என ஸைபுல் அபுராருல் மஸ்லூலு அலல் புஜ்ஜார் (பொய்யர்களுக்கு அல்லது அயோக்கியர்களுக்கு எதிராக உருவப்பட்ட நல்லவர்களின் வாள்) எனும் நூலில் எழுதியிருப்பது சிந்திக்கத் தக்கதே.


      பஹாய் இயக்கத்தினரையும் காதியானிகளையும் ஏகத்துவத்தை வலியுறுத்திக் கூறும் ஸூயியாக்களோடு சேர்த்து எழுதியிருப்பது மகா பெரும் மடமையாகும். இவ்வாறு எழுதியவர் மேற்கண்ட இயக்கங்களைப் பற்றியோ தெளஹீதாகிய ஏகத்துவ ஞானத்தில் திளைத்திருக்கும் ஸூபியாக்களைப் பற்றியோ சற்றும் அறியாதவர். ஸூபியாக்களின் ஸூபியத்தைச் சிறிதேனும் பார்த்தவரோ கேட்டவரோ இல்லைபோல் தெரிகிறது. ஆதலால் ஸூபியத்தை விளக்கமான ஒருவரிடம் அறிந்து பின்னர் அதுபற்றி விமர்சிப்பதே மேலானது. இஸ்லாத்துக்கும் ஸூபியத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; இஸ்லாமியக் கொள்கையிலிருந்து விலகி வழி தவறிச் சென்றவர்கள் எனக்கூறிக் கட்டுரையாளர்  வஹ்ஹாபியத்தை வாழ்த்துவதால் அவர் யார் என்பதை ஸுன்னத் வல் ஜமா அத்துக்கு எடுத்துக்காட்டுகிறார். வழிதவறியவர்கள் ஸூபியாக்களல்லர், வஹ்ஹாபிகளே என்பதை அவர் உணர்ந்து கொள்வது மிகவும் நல்லது. 

இஸ்லாத்தில் ஆன்மிகம் இல்லையென்றும் ஸூபிஸம் என்பது  வெறும் பொய்யென்றும் எழுதியவர் ஸூரா அல்இக்லாஸின் கருத்தை எழுதியிருந்தார். அது முழுமையாக தவ்ஹீதை விளக்கும்பெருமை வாய்ந்த ஸூராவாகும். அதுவே ஸூபிஸமாகும் என்பதை உணர வேண்டும்.


      இந்த எழுத்தாளர் இஸ்லாம் தத்துவ ஞானமற்ற வெறும் வெளிப்படை மார்க்கமே என்று கூறி இஸ்லாத்தின் தெய்வீகத் தன்மையையே மற்றவர்கள் மத்தியில் இழிவுபடுத்திக் காட்டுகிறார். இஸ்லாம் ஒரு சத்தற்ற மார்க்கம் என எடுத்துக்காட்டுவது கற்ற முஸ்லிம்களுக்கு இழிவாகவும் வெட்கித் தலைகுனியும் வார்த்தையாகவும் அமைந்துள்ள மன்னிக்கத் தக்கதன்று.


      கட்டுரையில் கூறப்பட்டுள்ள குர்ஆன் ஆயத்துக்கள் எடுத்துக் கொண்ட விடயத்திற்கு பொருத்தமற்ற  உதாரணங்களே.


      உண்மைக்கு முரணான கூட்டங்கள் காலத்துக்குக் காலம் இவ்வாறு உண்டாகிக் காளான்கள் போல் செத்து மடிவது உண்டு. இஸ்லாமிய ஏகத்துவமும் ஸூபிஸமும் எப்போதும் அழிவதில்லை. வஹ்ஹாபியத்து இஸ்லாமிய ஏகத்துவமல்ல. அது இஸ்லாத்தை அடியோடு அழிக்க வந்த வி­ஷக் கிருமி.

 

 

வாழ்க ஏகத்துவம் !

           வாழ்க ஸூபிஸம் !!            

 வாழ்க இஸ்லாமியதத்துவம் !!!      

 

ass="�N(om�" P1'margin-bottom:0in;margin-bottom:.0001pt;text-align:justify;line-height:normal;mso-layout-grid-align:none;text-autospace:none'>கொள்கைப் பிடிப்புடனே !

 

 

 

 

 

இதயத்தில் கூடாரம்

 

 

 

1.     எனது ஆத்மநண்பர்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் எனக்குக் கூடாரமிருக்கிறது.

      பராக்கினால்எனது இறைவனை அவர்கள் மறந்த பொழுது அவர்களின்

      இதயங்களிலிருந்துநான் அவனை திக்ரு செய்கிறதற்காக.

2.     அவர்களுடையஇதயங்களின் பாகங்கள் எனது முஹப்பத்தினால் நிறையும் வரை

      நான் சாப்பிட்டமதுவில் மிஞ்சியதை நான் அவர்களுக்குப் புகட்டினேன்.

3.     அவர்கள்அல்லாஹ்வில் உகப்புக் கொண்டு போதையடைந்தவர்களாயும்,

      அஹ்மதுஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களை      ஆசைகொண்ட

      வர்களாயும், கல்பு (இதயம்) ஹக்கில் ஒருமித்தவர்களாயும்,எனது உருவ

      கோலத்தைப்பார்க்கிறவர்களாயுமானார்கள்.

4. எனது பார்வையைக் கொண்டு, அவர்களை ஆத்ம அன்பர்கள் கூட்டத்தில்

      சிறந்தவர்களாகவும்ஹபீப் றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

      அவர்களின்பிரகாசிக்கும் ஒளிகளைக் காட்சி செய்கிறவர்களாகவும்  ஆக்கினேன்.

      “இன்னும்அவர்களில் கூறுகிறேன்..

1. எனது இருதய ஆத்ம அன்பர்களுக்கு பரிசுத்த ஒளிவெளியாகியது.

      மருகுதலையுடையஹக்கின் சிங்காசனத்திலே பரிசுத்த ஆவி கொண்டு ஹக்கு

      அவர்களுக்குஉதவுகிறது.

2.     அவர்களின் இதயபூமியிலே சத்திய மேகம் சன்மான மழையைப் பொழிந்தது.

      அதனால் உயர்ந்தஅபூர்வ நலன்கள்கொண்டு அந்த இதயங்கள் ஜீவன் பெற்றன.

3.     அவர்கள் சர்வஉலகங்களிலும் சக்ரவர்த்திகளாகவும், செல்வத்தையும், பரிசுத்த

      இருதயத்தையும்உடையவர்களாகவுமானார்கள்.

 

 

சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா (ரலி)அவர்களின்  கலிமா விருட்சக்கனிந்த கனிநூலிலிருந்து........