ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)

                                                                                                                                                    தொடர்.......

 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.

 

 ஹள்ரத் உமர் இப்னு ஸர்ஜீ (ரஹ்) கூறுகிறார்கள் :


      இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னைப் பார்த்து, நீர் ஏன் எனது கிதாபுகளில் படித்துப் பார்த்து எழுதிக் கொள்வதில்லை  ? என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழி கூறாமல் இருந்தேன். அப்போது எனக்கு பக்கத்திலிருந்தவர், இமாம்அவர்களே! இவர் ஏன் எழுதவில்லையென்றால் தாங்கள் கிதாபைக் கோவை செய்து ஹதீஸ்களில் பதிவு செய்கின்றீர்கள், பின்னர் வேறு ­ஷஹீஹான ஹதீஸ்கள் கிடைத்தால் முன்பு எழுதிய ஹதீஸ்களை ரத்துச் செய்து விடுகின்றீர்கள். அதனால் தான் இவர் தங்கள் கிதாபுகளை எழுதுவதில்லை... என்றார்.


      இதனைக் கேட்ட இமாமவர்கள், அடுப்பில் சூடு இருக்கும் காலமெல்லாம் இப்படித்தான் செய்வேன் என்றார்கள்.


ஹள்ரத் ஹஸன் (ரஹ்) கூறுகிறார்கள்.


      ஸுப்ஹானல்லாஹ்..இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் நீதமும் ஈமானின் பலமும் அறிவைக் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வுடைய முகத்தை நாடினவர்களாக இருந்தார்கள். பழிப்பவர்களின் பழிப்பை இமாம் அவர்கள் பயப்படுவதில்லை. ஈராக்கிலுள்ள பக்தாதில் பகைவர், ஹஸதுடையவர்கள் (பொறாமைக்காரர்கள்) செய்த சூழ்ச்சிகளினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த போது கோவை செய்த கிதாபுல் கதீமை, மிஸ்ருக்கு வந்த பின்னர் மனம் சந்தோ­ஷம் ஏற்பட்டதால் பல ஹதீஸ்களை நீக்கி புதிய ஹதீஸ்களைச் சேர்த்துப் பதிவு செய்தார்கள். இஜ்திஹாதைப் புதுப்பித்து கிதாபுல் ஜதீதைக் கோவை செய்தார்கள்.   குர்ஆனில் நாஸிக் மன்ஸூக் வசனங்கள் இருக்கின்றனவல்லவா ? அதுபோல் தான் மாற்றியமைத்தார்கள்.  ஆலிமேறப்பானிய்யாக இருப்பவர்களுக்குத் தாம் இந்தக் கருத்துக்களும் இவற்றின் தன்மைகளும் நன்மைகளும் விளங்கும்.  ஆலிமே துன்யாவாய் இருப்போருக்கு இட்டது சட்டமென்றும் ஆளுக்கேற்ப தலையாட்டுவதும் தாம் முக்கியம் எனக்கருதி  செயல்படுவர்.  (இத் தீயவர்களின் தீமைகளிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைக் காப்பானாக! )

  

ஹஜ்ரத் ஸல்மா இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்கள் :


      இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் மிஸ்ருக்கு வந்து ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்தார்கள்.அந்தப் பெண் ஏற்கனவே இன்னொருவரைத் திருமணஞ் செய்து விவாக முறிவு ஏற்பட்டிருந்தவர்.ஏன் அப்பெண்ணை மணமுடித்தார் என்றால், அப்பெண்மணியிடம் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபுகள் நிறைய சொந்தமாக இருந்தன.அப்பெண்ணை மணப்பதால் இமாமவர்களின் கிதாபுகள் கிடைக்கும் என்பதால் இவ்வாறு   மறுமணம் செய்து கொண்டதனை மக்கள் புதினமாகக் கருதினார்கள்.


இமாம் பைஹகி  (ரஹ்)கூறுகிறார்கள் :


      ஹள்ரத் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், இல்மில் கடல்போன்றவர்களாக, தெளிவானவர்களாக இருந்த போதும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபுதனைப் படித்து தங்களின் அறிவைப் பெருக்கிக் கொள்வார்கள்.


      மிஸ்ரில் பைத்துல் மாலின் காரியத்தர் இப்னு அபீ ஹாமித் கூறுகிறார்.


      இபுனுல் ஃபுராதென்னும் மனிதருடைய மஜ்லிஸில் இருந்தோம். அப்பொழுது ஹள்ரத் அபூமூஸா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அங்கிருந்த மனிதரொருவர், அறிவிற் சிறந்தவர் யஹ்யப்னு அக்தம் (ரஹ்) அவர்களா? இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களா? என்பதனை வெளிப்படையாகக் கூற அதற்கு அபூமூஸா (ரஹ்) பகர்ந்தார்கள்: யஹ்யப்னு அக்தம் (ரஹ்) அவர்கள் ராஜ   சபையில் இருந்தார்கள். ஆட்சியாளர்கள் அவருக்கு  உதவியாளர்களாகவும் அணுசரனையுடையவர்களாகவுமிருந்தார்கள். ஆனால் ஈராக்கிற்கு வந்த இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்கு, கலீபாக்கள் உரிய மரியாதையோ அந்தஸ்தோ வழங்கவில்லை. எங்கிலும் எதற்கும் எவருக்கும் அஞ்சாது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் அறிவை வெளிப்படுத்துகிறார்கள். எனவே, இமாமவர்களின் சிறப்பை அல்லாஹ் அங்கீகரித்து பெருவாரியான மக்களை பின்துயரச் செய்து வருகிறான்.


      இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் இல்மைக் கொண்டு அல்லாஹ்வை நாடினார்கள். அல்லாஹ் அவர்களை உயர்த்தியாக்கினான்.


      யஹ்யப்னு  அக்தம் அவர்களோ ராஜமரியாதையை எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் அவர்கள் நாடியதை வழங்கிவிட்டான் என்பதாகக் கூறினார்கள்.


(இன்ஷா அல்லாஹ் இல்மின் பிரயாணம் தொடரும்)