ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​பர்மா ஒரு பார்வை


பர்மா ஒரு பார்வை


    ர்மாவில் உள்ள முஸ்லிம்கள், புத்தமதத்தைத் தழுவ வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அந்நாட்டு ராணுவ வீரர்கள் கடந்த 03.06.12 அன்று இந்த நிகழ்வின் தொடக்கமாக 11 முஸ்லிம்களைக் கொன்று விட்டனர். அதற்குப்பின் இது பெரியகலவரமாக மாறி முஸ்லிம்கள் இருந்த 500 கிராமங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 1000 முஸ்லிம் கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.இது சம்பந்தமாக மனித உரிமைகளை பாதுகாக்கிறோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கக் கூடியமனித உரிமை அமைப்புகளும், ஐக்கிய நாடுகளும் கைகட்டி, வாய்பொத்தி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், உலக நாடுகளில் தன்னுடைய மூக்கை நுழைத்து நியாயம் பேசக்கூடிய  அமெரிக்காவும், முஸ்லிம்களையும், அவர்கள் படக்கூடிய இன்னல்களையும் ரசித்துக் கொண்டு ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிப்பது ஒரு பெரிய இழிநிலையாகும்.


      மேலும், பர்மாவின் மொத்த மக்கள் தொகை 75 மில்லியன். அதில் முஸ்லிம்களின் மொத்த மக்கள் தொகை 0.75 மில்லியன்கள்.  இப்படி அங்கு சிறுபான்மையாக வாழக்கூடிய முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய அந்நாட்டு  இராணுவம் கொன்று குவித்தும் முஸ்லிம்களை கட்டாயப்படுத்தியும் 

 

1.     பன்றி இறைச்சியை சாப்பிட வைத்தல்


2.     மதுவைக் குடிக்க வைத்தல்


3.     முஸ்லிம் அப்பாவிப் பெண்களை

      மானபங்கப்படுத்துதல்


4.    முஸ்லிம்கள் யாரையும் அணுகி

      பேசக்கூடாத வகையில் தொலைத்  

      தொடர்பு வசதியை துண்டித்தல்.


5.     பொது நியதிக்கு ஒத்து வராத

      வி­ஷயங்களில் முஸ்லிம் மக்களைக்

      கட்டாயப்படுத்தி செய்வித்தல்


      இப்படி பொதுமக்களை (முஸ்லிம்களை) பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரர்கள்  வேலியே பயிரை மேய்வது போல் செய்வது மிகவும் இழிவான செயலாக உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளும் தொண்டு அமைப்புகளும் சரியான முறையில் செய்திகளை வெளியிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன.    மேலும்  ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் தஞ்சம் புகுவான் வேண்டி அருகிலிருக்கும் நாடான பங்களாதேசத்திற்குச் செல்வதையும் புத்த மதவெறிபிடித்த பர்மிய அரசு தடுத்துள்ளது. இது சம்பந்தமாக பங்களாதேச அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. 


      மனிதநேயத்தை சிறப்பாக எடுத்துக்காட்டும் ரமழான் மாதத்தில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி கிடைப்பது பெரும் கேள்விக்குறியாக  அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான முஸ்லிம் அப்பாவி மக்கள் பர்மா - பங்களாதேச எல்லையில் கேட்பாரற்று  நிர்கதியாக உள்ளனர். இந்த வி­ஷயங்களை THE NEWS,OM, OPED NEWS என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


      சட்டத்தை பாதுகாக்கவேண்டிய பர்மிய அரசு, சட்டத்திற்கு புறம்பாக நடப்பது மிருகத்தனத்தை  இங்கு உணர்த்துகிறது. எந்த மதமும் அவரவர்கள் நடப்பதின் மூலமே அந்தந்த மதங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளன. அதில்  முக்கியப்பங்கு வகிப்பது இஸ்லாமிய மதம். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிபூரணமாக நடந்து (சொல்,செயல்) காட்டியதின் காரணத்தினால்தான் உலகளாவிய நிலையில் இஸ்லாம் பரந்து விரிந்து நிலைநிற்கிறது.


      பூனை  கண்ணை  மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக நினைத்ததைப் போல் பர்மிய அரசாங்கம் நினைப்பது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.  பர்மாவில் உள்ள முஸ்லிம்களை வேண்டுமானால் சித்தரவதை செய்து கொன்று குவிக்கலாம். ஆனால் இஸ்லாத்தையோ அதன் கோட்பாடுகளையோ  இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. மனித நேயமில்லாத மதங்கள் இவ்வையகத்தில் எதற்கு ? இஸ்லாமியர்களை,  தீவிரவாதி என்ற பெயருக்கு ஆளாக்கிய அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களின் மறைமுக ஒத்துழைப்பால் பர்மா அரசாங்கத்தை தூண்டுவிடுவது போலத் தோன்றுகிறது.


      இறைவன் தன்னுடைய  அருள்மறையான குர்ஆனில் விசுவாசிகளே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து  படைத்துள்ளோம். (வெளியாக்கினோம்) என்று அழகாக கூறியிருப்பதனை நாம் இங்கே கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.


      இஸ்லாத்தினை பாதுகாக்கிறோம் என்று இறை இல்லங்களில் தங்களின் மூட்டை முடிச்சுகளோடு குழுமி இருக்கும் வஹ்ஹாபிகள் இப்போது இந்த இஸ்லாமிய சமூகத்தை பாதுகாக்க வேண்டியது தானே !ஏன் மெளனம் சாதிக்க வேண்டும் ? இதற்கெல்லாம் முக்கியக் காரணம். தன்னை விளங்காமை தான். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “படைப்பினங்கள் இறைவனின் குடும்பம்” என்று கூறினார்கள்.                (அல்ஹதீஸ்)


      இப்படியிருக்க ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள் வழியில் நடக்கும் மகான்களான குதுபுமார்களையும் இழிவுபடுத்தியதின் காரணமாக இவர்களின் மனதில் கல்நெஞ்சமான நிலையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கிருந்த வீரமும் விவேகமும் இல்லாமல் ஆகிவிட்டன போலும்.


      ஏக  இறை இனிமேலாவது இந்த நன்றி கெட்ட மனித சமுதாயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்  அவர்களையும்  அவர்கள் வழிநின்று  நடக்கக்கூடிய  குதுபுமார்களையும், வலிமார்களையும் புகழும் விதமாக உலகமெங்கும்  மெளலிது மஜ்லிஸுகளும், ராத்திபு மஜ்லிஸுகளும் நடத்தி இந்த பிரபஞ்சத்தின் பரிபூரணராக, ரஹ்மத்தாக, ஆணிவேராக விளங்கக்கூடிய எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகளையும் பின் தொடர்ந்து ஏக இறையின் பாதுகாப்பை உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள்  பெற வேண்டும் என எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக. ஆமீன்.


     மறைஞானப்பேழை வெளிவரக் காரணமாக உள்ள நிறுவனர் அஷ்ஷெ­ய்குல் காமில், குத்புல் அக்தாப்குத்புஸ்ஸமான், ­ஷம்ஸுல் வுஜுத் ஜமாலியா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல்  ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்  மெளலானா நாயகமவர்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகள், கலீஃபா பெருந்தகைகள், உடலாலும், பொருளாலும், சிந்தனையாலும் உதவக் கூடியவர்களுக்கும்மேலும் இதைப் படித்துப் பயன்பெறும் வாசகர்களுக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தாரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும் என்னுடைய பணிவான  ஸலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

  

 M. முஹம்மதுஅப்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய். காந்தி கிராமம். திண்டுக்கல்.