ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Sep 2011   »  அமிழ்தினும் அமிழ்தான


அமிழ்தினும் அமிழ்தான 


உயிரினும் உயிரான - இனிதினும் இனிதான

கனிவிலும் கனிவான - கலீல்அவ்ன் நாயகம் வந்தார்கள்

அமிழ்தினும் அமிழ்தான - அரிதினும் அரிதான

அருமை குரு நாதர் அவனியில் உதித்தார்கள்!

அன்பு மிக நிறைந்த - பண்பும் மிக நிறைந்த

பயகம்பர் நபிபேரர் - பாரினில் வந்தார்கள்

நேசம் மிக நிறைந்தார் - பாசம் மிக நிறைந்தார்

வாச மலர்ப்பாதம் - துபை தனில் பதித்தார்கள்!

உயர்விலும் உயர்வான - சிறப்பினும் சிறப்பான

சீரிய குருநாதர் கலீல் அவ்ன் நம்பெருமான்

சங்கை சீர் நபியின் - சீரிய தெளஹீதை

ஷரீஅத் நெறிமுறையில் - சீராய் உரைத்தார்கள்!

அருவிலும் அருவான - கருவினில் திருவான

தெளிவிலும் தெளிவான - சங்கைகுருநாதர் திருவருள் புரிந்தார்கள்

மனிதனின் மருள்நீக்கி - இதயத்தின் இருள்நீக்கி

உள்ளத்தில் ஒளியேற்றி - உண்மை உரைத்தார்கள்!

ஹக்காய் உரைத்தீர்கள் - ஹக்கை உரைத்தீர்கள்

ஹக்கை அறிந்தீர்கள் - ஹக்காய் ஆனீர்கள்

கல்குகள் எல்லாமே ஹக்கே என்றீர்கள்

படைப்புகள் வேறல்ல - படைத்தவன் வேறல்ல

பாரினில் பார்ப்பதெல்லாம் பரம்பொருள் தோற்றம் என்றீர்

பூமிக்குள் பிரபஞ்சமா? - பிரபஞ்சத்திற்குள் பூமியா? தங்கள் தரிசனத்தில் எழுந்த கேள்வி

பிரபஞ்சத்திற்குள் நாங்களா?

அதாவது - எங்கள் ஷெ­ய்கு நாதர் இதயத்தில் நாங்கள்!

எங்களுக்குள் பிரபஞ்சமா? - எங்கள் இதயத்தில் தாங்கள்

என்றே வியந்தோம் - தங்கள் தரிசனத்தில்

பேரிறையாம் பெரும்தொகுதி - நாம் அதிலோ சிறு பகுதி

பகுதி - விகுதி - பாராமல் பரம்பொருளை அறியச் சொன்னீர்கள்! 

 

உண்மையின் உருவே நீங்கள்

உள்ளமையின் வடிவே தாங்கள்

அல்லாஹ் வோ தேன் என்றால் - அவன் ரசூலோ

ரோஜாமலர் என்றோ - இரண்டும் கலந்த அமிழ்தமான

“குல்கந்து” தான் குருவான - தாங்கள்

எங்கள் தாய்க்கும் தாயல்லவோ - தந்தைக்கும் தந்தையல்லவோ

தாய்தந்தைக்கும் மேலான தனிநிகரில்லா சொந்தம் அல்லவோ -

குரு - பந்தம் அல்லவோ

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்

என்பார்கள் தாம் - அரசியல் வாதிகள்

அறிந்ததைச் சொன்னீர்கள்

சொன்னதை அறிந்துள்ளீர்கள் - கண்டோம் இதை நாங்கள் தாம்

ஒன்றே இறை என்றே இதை - இன்றே அறி -

நன்றே தெளி - என்பதே  தங்கள் - தாரக மந்திரம்

திருக்கலிமா - திருமந்திரம் - திருவருள் வாக்கு -

பணிந்தோம் உங்கள் பதம்

அறிந்தோம் இறை விளக்கம்

அடைவோமே இறை ஞானம்

ஆமீன் - ஆமீன் - யாரப்பல் ஆலமீன்

 

A. நஜ்முத்தீன் ஹக்கிய்யுல் காதிரி, மதுக்கூர் (கேம்ப், துபை)