ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Oct 2012 »  விஞ்ஞானப் மெய்ஞ்ஞானப் பேழை


விஞ்ஞானப் மெய்ஞ்ஞானப் பேழை

 

    நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை பெர்னார்டு பாலிஸி என்பவர்தான் முதன்முறையாக கி.பி. 180-ல் விளக்கிச் சொன்னார்.


                சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு ஆவியாக மாறிக் குளிர்ந்து கருமுகிலாய் உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கி கூறியுள்ளார்.  உருண்டு திரண்ட வெண்முகில்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்துகுளிர்ந்து கெட்டியாகி, நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன.


                இவ்வாறு நிலம் நோக்கி விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், சலசலத்தோடும் நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் சுழற்சியாய் நிகழ்ந்து வருகின்றன.

                கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த,மிலடஸ் நகரைச்சேர்ந்த தேல்ஸ் ( Thales of Miletus) என்பார் சமுத்திரத்தின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு, நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என்று நம்பினார்.  ஆரம்ப காலங்களில், நிலத்தடி நீரின் நிலை குறித்த அடிப்படை அறிவை மக்கள் அடைந்திருக்கவில்லை.காற்றின் விளைவால், சமுத்திரத்தின் நீர் நிலம் நோக்கி பாய்ச்சப்படுகின்றது என்றே மக்கள் எண்ணினர். மேலும், நீரானது ஓர் இரகசியப் பாதை வழியே அல்லது பெரும் படுகுழி வழியே தான் மீண்டும் சமுத்திரம் நோக்கி திரும்பிச் செல்கின்றது என்று நம்பினர்.சமுத்திரத்தை இணைத்து நிற்கும் இந்த இரகசியப் பாதையை அறிஞர் பிளேட்டோவின்  (Plato) காலம் தொட்டு  டார்ட்டரஸ் (Tartarus) என்று மக்கள் அழைத்து வந்தனர்.  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் சிந்தனையாளரான டெக்கார்ட்  (Descartes) கூட இக்கருத்தினையே ஆதரித்து நின்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரிஸ்டாட்டில்  (Aristotle) எடுத்துரைத்த நீரியல் கோட்பாடே நின்று நிலவியது.


                இந்நீரியல்  கோட்பாட்டின்படி, நீரானது குளிர்ந்த மலைப் பொதும்புகளில் உறைந்து, நிலத்தடி நீர் நிறைந்த ஏரிகளாய் உருவாயின. அந்த ஏரிகளோ நீரூற்று பொங்கிப் பாய உதவின என்று கருதப்பட்டது. ஆனால்,பூமியின் பிளவுகளில் கசிந்து உட்புகும் மழை நீரே ஏரிகளும், நீரூற்றுகளும் தோன்றக் காரணமாய் உள்ளது என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம்.       பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் நீரின் சுழற்றி குறித்து விளக்கப்பட்டுள்ளது.


              நீர் பார்க்கவில்லையா ? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி,அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் ; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர் ; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.                       சூரா அஜ்ஜுமர்: வசனம் : 21

               

           அச்சமும், ஆசையும் ஏற்படும்படி  அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும் ; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை -அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும்  உள்ளன ;நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.                சூரா அர்ரூம்: வசனம் : 24

               

            மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம் ; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.                                                                    சூரா அல்முஃமினூன்: வசனம் 18

              

              ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில், எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை.


காற்றுக் கருவறையில் கார்முகில் சிசுக்கள்


                இன்னும் காற்றுகளை சூல்கொண்ட  மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து,அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.        சூரா அல்ஹிஜ்ர் : வசனம் 22

            

            இங்கு லாவாகீஹ் என்றஅரபுச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது லாகீஹ் எனும் சொல்லின் பன்மையாகும். இதன் பொருள் கருவுறச் செய்தல் என்பதாகும். இவ்வடிப்படையில் காற்றானது கரு முகில்களை முன்னே மோதித் தள்ளி, அது கெட்டியாகுவதை அதிகரிக்கச் செய்து, மின்னலையும், மழையையும் பிறக்கச் செய்கின்றது. இந்நிகழ்வை  திருக்குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கின்றது :


              அல்லாஹ் தான், காற்றுகளை அனுப்பி,(அவற்றால்) மேகத்தை ஒட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான் ; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர் ; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர்கள் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.                                                                                சூரா அர்ரூம் : வசனம் 48

           

             திருக்குர்ஆன் கூறும் வர்ணனைகள் யாவும் முற்றிலும் துல்லியமாய் அமைந்து, நீரியல் (Hydrology) பற்றிய நவீன அறிவியல் தகவல்களோடு முற்றிலும் பொருந்திப் போவதை பார்க்கலாம்.  (இந்நீரியல் சுழற்சிப் பற்றி திருக்குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களில் எடுத்து விளக்கப்பட்டுள்ள வசனங்களைப் பார்க்கவும். 3:9;7:57; 13:17; 25:48-49;  36:34;  50:9-11; 56:68-70;  67:30; 86:11