ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Oct 2012 »  ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


மனிதர்கள் நிலைபற்றி ஷைகு நாயகம் அவர்களின் ஒரு விளக்கம்.


    னிதன் எனும் உடலிலே பலவகையான வகையினர் உள்ளனர். இவர்களுள் மிக அனேகர் மிருகங்களையே ஒத்தவர்கள்.  இவர்கள் தம்மை முஸ்லிம் எனக் கூறிக் கொள்வார்கள்.  ஆனால் இஸ்லாத்தின் முதற்கடமையான  ­ஷஹாதது, லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன என்ற அதன் தாற்பரியத்தை அறியாதவர்கள், இவர்கள் எப்படி முஸ்லிம்களாவார்கள்.  அல்லாஹ் அவர்களை நேர்வழி காட்ட வேண்டும் அவர்கள் நேர்வழி காட்டும் மகான்களைக் கண்டு  அவர்களுக்கு குர்பானிகளாக வேண்டும். ஹகீகத்தை அறிந்தவர்களை ஆரிப்கள்என்கிறோம். அதன் மட்டில் நில்லாது ஹக்கில் ஆசை கொண்டவர்களை ஆஷிக்கள்என்கிறோம்.  மூன்றாம் தானமாகிய இரண்டறக் கலத்தலெனும் நிலையையடைபவர்கள் மிக மிகக் குறைந்தவர்கள். அவர்களே குத்புமார்களாவார்கள்.  தங்களுடைய  ஆட்சியைச் சரிவர நடாத்தும் பரம ரகசியங்களை அறிந்த கத்ரைக் கூட மாற்றியமைக்கும் மேன்மை மிக்க இரட்சகர்களே குத்புல் அக்தாப் என் வாப்பா நாயகத்தைப் போன்றவர்கள்.  ஹக்கின் ஸிபாத்துக்கள் சிலரில் தஜல்லியாகியே பிறக்கின்றனர். நபிமார்கள் ரஸுல்மார்கள் ஹக்கில் ஹக்காய் எப்படி அவனது இல்மிலிருந்து  தோன்றினார்களோ அவ்வண்ணமே குத்புமார்களும் வலிமார்களும் தோன்றுகின்றார்கள்.  அவர்கள் ஹக்கின் றஹ்மத்தெனும் மடியில் தங்கரிகம் செய்யப்பட்டவர்கள்.  காலம்அவர்களை அடையும்போதே தான் சந்தேகமற்ற நிலை அவர்களில் தோன்றுகின்றது.  அதுவரை அவர்கள் அந்த அந்தஸ்தை அடைந்திருந்தாலும் அது மறைமுகமாகவே  இருக்கும்.

 

                                                                                                   (சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்)