ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Oct 2011   »  அமுத மொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் அமுத மொழிகள்


ஒளியை மறைக்கத் துணியும் தூசி நூலிலிருந்து.....

சென்ற இதழ் தொடர்ச்சி..

பூரண வேதம் இஸ்லாமே!

எல்லா மதங்களிலுமிருந்த குறைவு நிறைவுகளை சரிப்படுத்தி அறிவுடையோர் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி அல்லா(ஹ்)வால் அமைக்கப்பட்ட உண்மை வேதம் இஸ்லாமாகும்.  இதை வெளிப்படுத்தி நிறைவுபடுத்தியவர்கள் எம்பெருமானார் ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாவார்கள்.  இவர்களே இறுதி நபியாவார்கள்.

இவர்களுக்குப் பின் எவராவது தம்மை நபியயனக் கூறுவாராயின் அவர் இஸ்லாத்திலிருந்து பிரிந்தவரே.  உண்மையான இஸ்லாத்துக்கு  மாறான கொள்கை களைக் கொண்ட புது வேதம் போன்ற ஓரியக்கத்தை எவரேனும் கொண்டு வருவாராயின் அல்லது பின்பற்று வாராயின் அவர் தூய இஸ்லாத்துக்கு முற்றும் முரணானவரும் இஸ்லாத்தி லிருந்து பிரிந்து  போன ஒருவருமாவார் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வார்களாக.  அஞ்சுவார்களாக.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டுவந்த வேத ஒழுங்கு முறைகளுக்கு மாறான சில ஒழுங்குமுறைகளைச் சிலகும்பல்கள் அமைத்துள்ளன.  அவற்றைத்தான் பின்பற்ற வேண்டுமெனவும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் காபிர்கள், முஷ்ரிக்கள் எனவெல்லாம் பறைசாற்றுகின்றனர்.  இஃது உண்மைக்கு முரண் என்பதை அறிந்தும் அதைச் செய்யத் திணிக்கின்றனர்.

“அவன் உங்களுக்கு முஸ்லிம்களென்று பெயர் வைத்துள்ளான்” என அல்லாஹ் கூறுகிறான்.  எனவே நாம்  அனைவரும் முஸ்லிம்கள், நாம் நமக்கு வேறு பெயர்கள் வைத்து அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.  ஆயினும் இப்போது வந்துள்ள ஒரு புதுமை வேதம்தான் வஹ்ஹாபிய வேதமாகும்.  அதை உண்டு பண்ணியவர்கள் போலி நபிகள்.  அல்லாஹ் எம்மை இதிலிருந்தும் காப்பாற்றுவானாக, ஆமீன்.

நாம் நாள் தோறும் வாசிக்க வேண்டியதும் மனனம் செய்துகொள்ள வேண்டியதும் குர்ஆன் சரீபே ஆகும்.  மற்றது எம்பெருமானார் அவர்களின் ஹதீஸ்களான மொழிகளுமேயாகும்.  வேறு எந்த நூல்களும் அவற்றிற்கு சமமாவதில்லை.  இஃது உண்மை.  அல்லா(ஹ்)வால் பூர்த்தி செய்யப்பட்டு ரஸூல் நாயகம் அவர்களால் எமக்கு அருளப்பட்ட இந்த இஸ்லாமிய வேதத்தை மேலும் எவனாலும் பூர்த்தி செய்யவும் முடியாது.  புதுப்புது சட்டதிட்டங்களையும் அமைத்துக் கொள்ளவும் முடியாது.

அப்படி எவனாவது சொல்வானாயின் அல்லது செய்வானாயின் நிச்சயமாகவே அவன் இஸ்லாமியன் அல்லன். அவனில்தான் குஃப்ரும் ´ர்க்கும்  உண்டு.  (நஊது பில்லாஹி மின்­ர்ரில் குப்பார்) குப்பார்களின் கெடுதிகளிலிருந்து அல்லாஹ் இடத்துப் பாதுகாப்புத் தேடுகிறோம்.


பெருமானாரைப் பின்பற்றல்​

எனக்குப் பின்னால் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று ரஸூல் நாயகம் அவர்கள் கூறியிருக்க ‘நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சமமானவர்கள் மேலும் உண்டாவது சாத்தியம்’ எனும் வஹ்ஹாபிப் பொன்மொழியைக் கூறிக் கொண்டு தைமிய்யாவையும் இபுனு வஹ்ஹா பையும் நபியாக்கும் முயற்சி தீவிரப் படுகிறது.

இதயத்தில் சிறு அணு அளவேனும் ஈமான் உள்ள முஸ்லிம்கள் இவர்களின் பித்தலாட்டங் களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள்.  மகன் சொன்னான், அண்ணன் சொன்னான், தந்தை சொன்னான், ஆசிரியர் சொன்னார் அதுதான் மார்க்கம் என இஸ்லாத்துக்கு முரணான வஹ்ஹாபிய கொள்கை களுக்கு மனம் மாற மாட்டார்கள்.

சவூதி அரசின் பணத்துக்கு ஏமாற்ற மடைந்து மனதையும் கொண்ட ஈமானையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எனவே கடைசி நபி எம் நாயகமே. எம்பெருமானார் எவனுக்கும் சமமானவர்களல்லர். அவர்களுக்குச்சமமானவர்கள் தோன்றவும் இல்லை,தோன்றப் போவதும் இல்லை.

எழுதும் போதும் பேசும் போதும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனவோ நாயகம் அவர்கள் எனவோ மரியாதையுடைய வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.  அவர் இவர் என நண்பர்களையும் மூத்த சகோதரர்களையும் அழைப்பது போலவே அழைப்பார்கள். நாயகம் அவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்பதனாலேயே இவ்வாறு கூறுகின்றனர்.

எம் பெருமானாரை  நன்றிகெட்ட இந்தக் கூட்டம் விரோதியாகவே கருதுகின்றனர்.  இவ்வாறு நினைப்போர் தைமிய்யா,வஹ்ஹாபி போன்றோரின் சந்ததிகளே. சைத்தானின் கொம்பு எனத் தைமிய்யாவும், வஹ்ஹாபியும் வருணிக்கப்பட்டமையாலே எம் பெருமானாரைத் தீவிரமாகத் தாக்க முற்பட்டுவிட்டனர், வி­யம் அறியாத ஏனைய முஸ்லிம்களை மருட்டி அவர்களுக்குத் துணையாக்கிக் கொண்டனர்.

வஹ்ஹாபிகள் எம்பெருமானாரை அழைக்க புதுப்புது ஆங்கில முறைகளையும் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.  மிஸ்டர் ரஸூலுல்லாஹ் எனப் புதிதாகக் கூறுகிறார்களாம். இது மரியாதைக்காக உபயோகிக்கும் வார்த்தையாம்,‘நஊதுபில்லாஹ்’ நாக்குக்கும் தொண்டைக்கும் என்னதான் வருமோ கந்தூரி யயன்றாலே பித்துத் தலைக்கேறும். ஒரு வஹ்ஹாபி கீழ்வருமாறு சற்று மரியாதை கெட்ட முறையில் எழுதியிருந்ததைப் பாருங்கள்.

‘அவரை புகழ்ந்து பாடும் களரிகள் குறைகிறதே என்ற கவலை’ இது அண்மையில் வெளியான ஒரு வஹ்ஹாபிய நச்சுப் பத்திரிக்கை யிலிருந்து எடுத்தது.  எங்களைப் போன்ற மனிதனே என்று மட்டும் கூறி நாயகம் அவர்கள் மீது பயபக்தியோ மரியாதையோ அன்போ இன்றித் திரியும் இந்தக் கும்பலிடத்து ஈமான் தான் உண்டோ? ஈமானுக்குப் பதிலாக நஞ்சுதான் வெளியாகும்.

பெருமானார், ஈமான் (நம்பிக்கை) பற்றிக் கூறும் போது கீழ்வருமாறு கூறினார்கள். எவருடைய தந்தை பிள்ளை இன்னும் மனிதர்கள் அனைவரைவிடவும் அவரிடத்து நான் மிக உகப்பானவனாகும் வரை உங்களில் ஒருவரும் ஈமான் கொண்டவராகமாட்டார்.  (புகாரி முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களிலிருந்து - அனஸ் (ரலி) அவர்களின் ரிவாயத்து) அதாவது  எவருடைய தந்தை பிள்ளை இன்னும் மனிதர்கள் அனைவரைவிடவும் என்னை நேசிக்காதவரை உங்களில் ஒருவரும் ஈமான் கொண்டவராக முடியாது என்பதே.  அப்படியாயின், ரஸூல் நாயகம் அவர்களைப் புகழவேண்டாம் என்பவனும் அவர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை உபயோகிப்பவனும்  எவ்வாறு ஈமான் கொண்டவனாகலாம்.

1.  நீங்கள் ஈமான் கொண்டவர்களாயின் அல்லா(ஹ்)வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடுங்கள் என அல்லாஹுதஆலா கூறுகிறான்.

(அன்ஃபால் : 2)

2.  அல்லா(ஹ்)வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடுங்கள்.  நீங்கள் பிணங்கிக் கொள்ள வேண்டாம்.  அவ்வாறு நீங்கள் பிணங்கிக் கொண்டால் நீங்கள் பலவீனப்படுவீர்கள்.

           (அன்ஃபால் : 47)

3. ஈமான் கொண்டவர்களே, அல்லா(ஹ்)வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடுங்கள்.  நீங்கள் (அவர்கள் போதிப்பவைகளைக்) காதில் கேட்டுக் கொண்டு அவர்களை விட்டும் விலகி செல்லாதீர்கள்.

(அன்ஃபால் : 20)

4.  அல்லா(ஹ்)வுக்கும் ரஸூலுக்கும் வழிபடுங்கள்.  (இவ்வி­யத்தில்) எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

(மாஇதா : 92)

5.  அல்லா(ஹ்)வுக்கும் ரஸூலுக்கும் வழிப்பட்டவர்கள் அல்லாஹ் உபகாரம் செய்த அந்த நபிமார்களுடனும்  சத்தியவான்களுடனும் சுஹதாக்களாகிய தியாகிகளுடனும் நற்குணமுடையவர்களுடனும் இருப்பார்கள்.

(ஸூரதுன் நிஸாஉ : 69)

6.  எவன் அல்லா (ஹ்)வின் தூதருக்கு வழிபடுகிறானோ அவன் நிச்சயமாக அல்லா(ஹ்)வுக்கு வழிபட்டான்.

(நிஸாஉ : 79)

(தொடரும்)