ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Nov 2012 »  யா ரஸீலல்லாஹ்! யா முஹிய்யுத்தீன்! என அழைக்கலாமா ?

யா ரஸீலல்லாஹ்! யா முஹிய்யுத்தீன்! என அழைக்கலாமா ?
அவ்வாறு அழைக்கலாம், வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!  ஆனால் அழைத்தல் என்பது யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.  வஹ்ஹாபிகளின் கூற்றுக்கிணங்க அல்லாஹ்த ஆலாவை மட்டும் தான் அழைக்கவேண்டும். 

யாரசூலல்லாஹ்
யாமுஹிய்யத்தீன் என அழைக்கக் கூடாது என்றால் நாம் நம் சொந்த பந்தங்களை அழைக்க முடியாது. உதாரணமாக அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என நாம் அழைப்பது  ஷி
ர்கா? இதற்குச்சான்றாக அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்.


“நபி ஹாரூன் (அலை) அவர்கள் நபி மூஸா (அலை) அவர்களை யாஇப்ன உம்மி! என் தாய்ஈன்றெடுத்த மகனே! எனவும் நபி லுக்மான் (அலை) அவர்கள் தங்கள் மகனை அன்பு மகனே“ எனக்கூறுவதாக அல்லாஹு தஆலா கூறுகிறான்.


நம் வேலை அல்லாஹ் கூறுவதையும் நபி நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியையும், கூறுவதையும்  கேட்டு அதன்படி நடப்பதுதான். புதியதாய் வந்தஇவர்கள் யார்? இஸ்லாத்தைக் கூற! அழைத்தல் என்பது வேறுவணக்கம் என்பது வேறு. யாரசூலல்லாஹ் யாமுஹிய்யத்தீன் என அழைக்கக் கூடாது என்றால் அல்லாஹ்மேற்கண்ட வசனங்களை தன் திருமறையில் ஏன் குறிப்பிட வேண்டும்உயிருடன் இருப்பவரை  அழைக்கலாம் இறந்தவர்களை அழைக்கலாமா ? எனக்கேட்பார்கள்.யாரசூலல்லாஹ், யா யாமுஹிய்யுத்தீன்  என்பது நம் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரும்,யா யாமுஹிய்யுத்தீன்  என்பதுமஹ்பூபே சுபுஹானி முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்) அவர்களின்பெயர்களாகும்.  இவர்கள் நம் கண்ணை விட்டுத்தான் மறைந்து வாழ்கிறார்கள்.  எனவே இவர்களைஅழைப்பது குற்றமல்ல.


மேலும் இறந்தவர்களைஅழைப்பதற்குச் சான்றாக குர்ஆனில் அல்லாஹு தஆலா கீழ்க்கண்ட சம்பவத்தைகுறிப்பிடுகிறான்.  “நபி இப்ராஹீம் (அலை)அவர்கள் இறைவனிடம் இறைவா! நீ எப்படி மரணித்த ஜீவனை உயிர் எழுப்புவாய்? என்றுகேட்டதற்கு அல்லாஹு தஆலா 4 பறவைகளைப் பிடித்து அறுத்து நன்கு வெட்டி உங்களைச்சுற்றி உள்ள 4 மலைகளின் மேல் நான்கு கூடைக்குள் வைத்து அதில் இந்த இறைச்சியைப்போட்டு விடுங்கள்.  பிறகு மரணித்த பறவையைஅழையுங்கள் அவை வரும் எனக் கூறுகிறான்.” இச்சம்பவத்தின் மூலம் இறந்தவரை அழைப்பது கூடும் என அல்லாஹ் குர்ஆனில்கூறுகிறான்.  இதே போல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் பதுறுப் போர் முடிந்து  போரில் ­ஹீதான ஸஹாபாக்களை  அடக்கும் போது இறந்தவர்கள் பெயர்களை அழைத்துபிறகு, உங்கள்நாயகன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பெற்றுக் கொண்டீர் களா? எனக் கேட்டார்கள்.  இதே போல்இஸ்லாத்தைக் கற்பித்த மாநபி, ­ரீஅத்தைத்  தந்த தாஹா நபி அவர்களே கூறியிருக்கிறார்கள்.  இன்றும் நாம் கடைப்பிடித்து வருகிறோம்.  அதாவது தொழுகையில் அத்த ஹிய்யாத்தில் அஸ்ஸலாமுஅலைக அய்யுஹன் னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு (ஸலாம் எனும் ஈடேற்றமும்சாந்தியும் அல்லாஹ்வின் அருட்கொடைகளும் நபியே உங்கள் மீது உண்டாவதாக)  என நபியே கற்பித்துத் தந்திருக்கிறார்கள்.    இன்று வரை ஒவ்வொரு வக்திலும் நாம் நபியின்பெயர் அழைத்துத் தான் தொழுகையையே முடிக்கிறோம். இதே போல் அல்லாஹ்வின் வீடுகளில் (பள்ளிவாசலில்) ஒவ்வொரு வக்தும் முஅத்தின், திருநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை அழைத்துத் தான் தொழுகைக்குஅழைக்கிறார்கள்.  எனவே  அழைத்தல் என்பது ஹராமோ (தடுக்கபட்டவையோ) ´ர்க்கோ இல்லை.  அழைத்தல் வேறு வணக்கம் வேறு எனவே யாரசூலல்லாஹ்.யாமுஹிய்யத்தீன் யா யாஸீன்,யாகலீல் என அழைப்பது கூடும். குழப்பவாதிகள் குழப்பம்தான்செய்வார்கள் நாம்தான் அவர்களின் குழப்பத்தில் இருந்து ஒதுங்கிச்செல்லவேண்டும்.  வஹாபி களின் பிடியில்இருந்தும், ஸஹாபிய வேடங்களில் ஊர் ஊராய் திரியும் மத்ஹபைஏற்ற வஹ்ஹாபிகளின் பிடியில் இருந்தும் எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவரையும்காத்தருள் புரிவானாக.  ஆமீன். 


குரு தமக்கே ஒப்பிலை தாரணியில்எப்பொருளும்

சேய்நம்மைச் சீராட்டி அறிவுஞானத்தைப் பாலாக்கி

நபி வழியாய் வந்துதித்துவாழ்விக்குந் தாயயான்று

குருபோலும் உண்டோமோ தான்.