ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Nov 2012 »   இறைத்தூதர் ஹள்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்

இறைத்தூதர் ஹள்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் நபி சுலைமான் அவர்களின்  மகனார் ருஜஹுமின் வழியில் வந்த ஆஜரின் மைந்தர் ஆவார்கள்.  இப்ரானி மொழியில் ஜகரிய்யா என்ற சொல்லிற்கு அல்லாஹ்வைஎன்றும் தியானித்து வருபவர் என்று பொருளாகும்.


நபி ஜகரிய்யா (அலை)அவர்கள் தச்சுத் தொழில் புரிந்து வந்தார்கள். இளமைப் பருவத்திலிருந்தே தான, தர்மங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி அவற்றை நடைமுறைப்படுத்தியும் வந்தார்கள்.  இறையச்ச மேலீட்டால் அவர்கள் அதிகமதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.  பனி இஸ்ரவேலர்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ்,ஜகரிய்யா (அலை) அவர்களை நபியாகத் தேர்வு செய்து அவர்களிடம் அனுப்பி வைத்தான்.

நபி ஜகரிய்யா (அலை)அவர்கள் அன்றைய பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலில் தலைமை இமாமாகவும் திகழ்ந்தார்கள்.  இவர்களது வழிகாட்டுதல் அன்றைய மக்களுக்கு மிகவும்முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  அனைத்துத்தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்று இஸ்லாமியத் திருப்பணியை இனிதே ஆற்றி வந்தார்கள்.  இறைநெறிப் பணியில் வாழ்நாளை எல்லாம் கழித்து வந்த  ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு நெடுங்காலமாக மக்கட்பேறுஇல்லாதிருந்தது.  அவர்களது அன்பு மனைவியும்தளர்ந்து முதுமை அடைந்திருந்தார்.


தமக்குப்பின் தம்உறவினர்களால் இஸ்லாமிய நெறிக்கு ஊறு ஏற்பட்டு, மாறுபாடுகள் வந்து விடுமோ என்றஞ்சிய அவர்கள், இறைவனிடம்,  “தமக்கு  ஒரு சந்ததியைத் தருவாயாக” என மன்றாடினார்கள்.  முதுமையும், மலட்டுத் தன்மையும்பொருந்திய ஜகரிய்யா (அலை) அவர்களின் மனவிக்கு மகப்பேறு தருவதில், படைத்தவன் அல்லாஹ்விற்குத் தடையுண்டா? தனது தூதரின் இதயவேண்டுகோளை இறைவன் ஏற்றான்.  அழகிய ஆண்குழந்தைபிறக்கும் என்றும், அதற்கு யஹ்யா எனப் பெயரிடவும் எனவும் வானவர்தூதர் மூலம் முன்னறிவிப்புச் செய்தான்.  பிறப்பதற்குமுன்னதாகவே இறைவனால் பெயர் சூட்டப்பட்ட பெருமை யஹ்யா (அலை) அவர்களுக்குக் கிடைத்தது.  அழகிய பெயரை ஆண்டவனே சூட்டி மகிழ்ந்த அற்புதம் தான்என்னே! இந்த நிகழ்வுகளைத் திருக்குர்ஆன் இப்படிக் கோடிட்டுக் காட்டுகிறது.


அவர்தம் இறைவனிடம்தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்) (அவர்) கூறினார்  “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன.  என் தலையும் நரையால் (வெண்மையாய்)இலங்குகிறது.  என் இறைவனே (இதுவரையில்) நான்உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.


இன்னும் எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப் பற்றி நிச்சயமாகநான் அறிகிறேன்.  என் மனைவியோ மலடியாக இருக்கிறாள்; ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக! அவர் எனக்கு வாரிசாகவும்இருப்பார்;  யஃகூபுடையசந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்.  என்இறைவனே அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக”. ஜகரிய்யாவே!யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை (த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்திகூறுகிறோம்.  இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரைநாம்  ஆக்கவில்லை.  (என்று இறைவன் கூறினான்.)

                             (திருக்குர் ஆன் (அத்தியாயம் 19, வசனங்கள் 3 - 11)


தமக்கு மகன் பிறந்த பின் ஜகரிய்யா (அலை) அவர்கள் முன்னைக் காட்டிலும்பெரும் உற்சாகத்துடன் இஸ்லாமியப் பணியை இனிதே மேற்கொண்டு வந்தார்கள்.  இறைவனைப் பற்றியும், அவர்களது நேரிய வழி பற்றியும் ஜகரிய்யா (அலை)அவர்கள் துணிவுடன் எடுத்துரைத்தார்கள். நெறிகெட்ட மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.  அவர்களைக் கொன்று விடத் துடித்தனர்.  துடித்தவர்கள் அவர்களைத் துரத்தினர்.  தப்பித்து ஓடிய ஜகரிய்யா (அலை) அவர்கள் வழியில்ஒரு மரத்திடம் உதவி கேட்க, மரம் பிளந்து அடைக்கலம் தந்தது.  அதை அறிந்த கொடூரர்கள் மரத்தை வாள் கொண்டு அறுத்துஅவர்களைக் கொன்றனர்.


நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் காலத்தில்தான், அவர்களின் வழி தழுவி பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலில்ஊழியம் புரிந்தோரின் தலைவராக இருந்த இம்ரான் அவர்களுக்கும், ஹன்னாஅவர்களுக்கும் மகளாக மர்யம் (அலை) அவர்கள் பிறந்தார்கள்.  பிறக்குமுன்னே தந்தையை இழந்துவிட்டதால்,மரியமின் வளர்ப்புத் தந்தையாக ஜகரிய்யா (அலை) அவர்களும், அவர்களது மனைவி சிற்றன்னையாகவும் இருந்தனர்.  மர்யம் (அலை) அவர்கள் பிறக்கும் முன்னரே இவர்களைஇறைனுக்கு அர்ப்பணம் செய்வதாய் நேர்ச்சை செய்து கொண்டதால் ஊழியம் செய்பவர் என்ற பொருள்கொண்ட மர்யம் என்ற பெயர் அவர்களுக்குச் சூட்டப்பட்டது.         


      (நன்றி: கவிஞர்முஹம்மது அலி அவர்களின்       இறைவன்பேசுகிறான்...                                                    நூலிலிருந்து...)