ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Nov 2012 »  விதியும் மாறும்

தொடர்....                                                                                                                                             தொடர் எண்-31

 

விதியும் மாறும்

 

ஆண், பெண் இருபாலரும்நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மேலாம்பரமான, திரு ரவுளா, கபுரு ­ஷரீபை ஜியாரத்துச்செய்வது வலுப்பமான,குருபாத் (முடுகுதல்) உடைய, புண்ணிய அமல்களில்நின்றுமுள்ளதாகும்.  மற்றுமுண்டான அன்பியாஅவுலியாக்களுடைய கபுருகளை ஜியாரத்துச் செய்வதும் புண்ணியமான நல் அமல்களில் நின்றுமுள்ளதே என்று இமாம் ­ம்சுத்தீன் றமலீ (றஹ்) அவர்கள், ஷாபியீமதுஹபின் பிரபல்யமான, ஊன்றுதல் மிக்க, ஏடானநிஹாயத்துல் முஹ்த்தாஜ் - ­ரஹில் மின்ஹாஜ் 2-ஆவது பாகம், 250-ஆவதுபக்கத்தில் சொல்லியுள்ளார்கள்.  இவ்வாறே,ஷாபியீ மதுஹபின் பிரபல்ய மிக்க ஊன்றுதலுடைய நூலான இஆனத்துத்தாலிபீனிலும் வந்துள்ளது.குறிப்பிட்ட ஒரு தினத்தில்ஆணும் பெண்ணும் ஒன்றாகக் குழுமியிருக்கும் நேரத்திலும் விலக்கலான கருமங்கள்முற்றும் நிறைந்திருக்கும சந்தர்ப்பத்திலும் அவுலியாக்களுடைய கபுருகளை ஜியாரத்துச்செய்யலாமா? அல்லதுஜியாரத் செய்யலாகாதா ? என்ற கேள்வி எழக்கூடும்.  அல்லாமா, இபுனு ஹஜர்ஹைத்தமீ (றஹ்) அவர்களுடையபத்வாவில் இவ்வினாவிற்கு விடை காணப்படுகின்றது. அதன் சுருக்கமாவது .குறிப்பிட்ட அந்நாள் முழுவதும்விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கினதாயிருப்பது ஒரு வகை.  அந்நாள் முழுவதும் விலக்கலான கருமங்களைக்கொண்டதாக இருப்பது இன்னொரு வகை.  அத்தினம், சில வேளைவிலக்கலான கருமங்களை விட்டும் நீங்கினதாயும் சில வேளை விலக்கலான கருமங்களைக்கொண்டதாயும் இருப்பது மற்றொரு வகை. இவ்விதமான சந்தர்ப்பங்களில், ஆகாத கருமங்களில்லாதநேரத்தில் ஜியாரத்துச் செய்வது மேல்.  ஆகாதகருமங்களுள்ள நேரத்தில் ஆணும், பெண்ணும் ஒன்றாகக் கலந்துநிற்பதை விட்டு விலகுவதும், ஆகாத செயல்களை வெறுப்பதும்,சாத்தியமான மட்டில் அவற்றைத் தவிழ்ந்து தமது அமலைச் செய்வது ஆகும்என்பதே.

ஆகவே, இமாம் இபுனுஹஜர் ஹைத்தமீ (றஹ்) அவர்களுடைய பத்வா ஜியாரத்துச் செய்யும் காலங்களில்விலக்கப்பட்ட கருமங்கள் நிகழக் கூடிய நேரத்தில் ஜியாரத்துச் செய்யும் விதத்தைவிவரிப்பதுடன், ஜியாரத்துச் செய்வதை அனுமதிக்கிறது.  மேலும் இதுபற்றி அல்லாமா, ஷைகு, இபுனு ஆபிதீன் என்று பிரக்கியாதி பெற்ற முஹம்மது அமீன் (றலி) அவர்கள்,றத்துல்-முக்த்தாரில் குறிப்பிட்டிருக்கும் வி­ஷயமாவது :-


ஜியாரத்துச் செய்யுமிடத்தில்விலக்கப் பெற்ற,ஆகாத கருமங்கள் இருப்பினும், ஆணும், பெண்ணும் கலந்திருப்பது போன்ற குற்றங்கள் நிகழ்வதா யிருப்பினும், நீ ஜியாரத்தை விட்டுவிட வேண்டாம்! இவை போன்ற காரணங்களுக்காகப் புண்ணியமானகருமங்கள் விடப்பட மாட்டா. ஜியாரத்துச் செய்ய வேண்டியது மானிடன் மீதுபொறுப்பாகும்.  பிதுஅத்தானவற்றை வெறுக்கவேண்டும்.  இயலுமாயின், அவற்றை நீக்க வேண்டும் என்பது தான் இமாம் இபுனு ஹஜருல் ஹைத் தமீ (றஹ்)அவர்களது பத்வாவின் கருத்தாகும் என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


ஒருவன் வலியுல்லாஹ் உடையகபுருக்குப் போய் அவ்விடத்தில் சிறிது நேரம் தரிபட்டிருப்பதைக் கொண்டு அவனுக்குப்பிரயோஜனமுண்டு- ஜியாரத்து,சன்மார்க்கத்தின் (­ரஇய்யத்) நல் வழக்கமாகஆக்கப்பட்டிருப்பதன் மூல நோக்கம்.  அதில்பற்பல நுட்பமான வைகளும்,அந்தரங்கமானவைகளுமான (அஸ்ராரு) இரகசியங்களிருப்பதன் காரணத்தைமுன்னிட்டே தான் என்று இமாம் பக்ருத்தீன் றாஸீ (றஹ்) அவர்கள் மதாலிப் எனும்கிரந்தத்தில் ஜியாரத்தின் மூலம் அடையப்படக் கூடிய அரும் பெரும் பலன் என்னும்அத்தியாயத்தில் வரைந்திருப்பதாய், மக்கா,  முஅள்ளமாவின் முப்த்தியாக இருந்த அல்லாமா இமாம், யஸய்யிதுதஹ்லானீ மக்கீ, ஷாபியீ (றஹ்) அவர்கள் தக்ரீபுல் உஸூல்80-ஆவது பக்கத்தில் கூறுகின்றார்கள். 


எவரொருவர் தமது தாய்தந்தையுடைய கப்ருகளை அல்லது அவ்விருவரும் ஒருவருடைய கப்ரை வெள்ளிக் கிழமைகளில்ஜியாரத்துச் செய்வாராயின்,அவர் ஹஜ்ஜுச் செய்தவரைப் போலாவார் என்பதாகவும், மாதா பிதா இருவருள் ஒருவருடையகப்ரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் யாராவது ஜியாரத்துச் செய்வாராயின் அவருடையபிழைகள் பொறுக்கப் படுவதுடன் அவர் நன்றியுடைய நல்லடியாராகவும் எழுதப்படுகிறார்என்பதாகவும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்துள்ளார்கள்.


மேற்கண்ட இரு ஹதீஸ்களும்மிஷ்காத்  ஷரீஃபில் கூறப்பட்டுள்ளன.

கப்ருகளை ஜியாரத்துச் செய்வதுபாபத்திற்குப் பிராயச்சித்தமாகும் என்றும் ஹதீஸ் வந்துள்ள விபரம் தஹ்தீபில்சொல்லப்பட்டிருக்கிறது.

மேலேயுள்ள மூன்று ஹதீதுகளும்ஷாபியீ மதுஹபின் நூலாகிய இஆனா 2-ஆவது பாகம், 166-ஆவது பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்நாயக வாக்குகளைக் கொண்டுதெரிய வருவது யாதெனில்;சாமானியர் களான மாதா, பிதாக்களுடைய கபுருகளைஜியாரத்துச்  செய்வதே ஹஜ்ஜுக்குஒப்பானதாகவும், பாப நிவாரணமாகவும் பாபதோ­  பிராயச்சித்தமாகவும்ஆகிவிடுகிறது என்றிருந்தால், ஹக்கு தஆலா அளவில் ஃபனாவாகி, இன்ஸான்காமிலான, பரிபூரணத்துவம் அடைந்த அச்சந் தீர்த்த, அவுலியாக்களுடைய கபுருகளை ஜியாரத்துச் செய்வதன் மர்த்தபா, பதவி,      அந்தஸ்து,தரஜா எவ்வளவு மகத்துவமிக்கதாயிருக்க வேண்டும்! அதுகொண்டு பாபிகளானஜனங்களுக்கு எவ்வளவு உயர்ந்த பட்சம் பாபமன்னிப்பும், பாபதோ­ நிவாரணமும்சித்தியாகிவிட வேண்டும்! இந்த உண்மையை நாம் நன்கு சிந்தித்து உணர வேண்டும் !

இவ்வாறாக அருமையான முடிவுத்தீர்ப்பை அல்லாமா ஷைகு யூசுபுன் னபஹானீ மிஸ்ரீ (றஹ்) அவர்கள், ­வா-ஹிதுல்-ஹக்கு253-ஆவது பக்கத்தில் மிகத் தெளிவாக விளக்கித் தந்துள்ளார்கள்.


நபிகள் கோமான் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எவருடைய கப்ருமில்லாத, முந்தின நபிமார்கள் ஜனங்களுக்கு உபதேசஞ் செய்து கொண்டிருந்த மஸ்ஜிதுகுபாவுக்கு ஒவ்வொரு வாரமும் சென்று ஜியாரத்துச் செய்து வந்திருக்கிறார்கள் என்றவிபரம் ஸஹீஹுல் புகாரீ ஸஹீஹுல் முஸ்லிம், மிஷ்காத் முதலியஹதீஸ் கிரந்தங்களில் காணப் படுகின்றன.


மேலே கூறப்பட்ட இந்த ஹதீஸைக்கொண்டு, மகான்கள்  இருந்த இடங்களையும் கூட ஜியாரத்துச் செய்வதுமுஸ்தஹப்பாகும் என்பதாக அல்லாமா, முல்லா அலிகாரீ (றஹ்)அவர்கள்  மிர்க்காத் 1 -ஆவது பாகம், 448-ஆவது  பக்கத்தில் வரைகின்றார்கள்.

ஆகையால் மகான்கள் பிறந்த இடம், தொழுத  இடம், கல்வத்சில்லாஇருந்த இடம் முதலியவற்றை ஜியாரத்துச் செய்வதும் ஆகுமான காரியம் தான் என்பது விளங்கவருகிறது.


“கபுருகளை ஜியாரத்துச்செய்யுங்கள். (அவ்வாறு செய்வதை) பாபமென்றும், கெடுதியயன்றும் கூற வேண்டாம்”  என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்உரைத்துள்ள ஹதீஸ், தப்றானியில் வந்துள்ளது.


(தொடரும்)