ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Nov 2012 »  விலைபோகும் விளை நிலங்கள்!

விலைபோகும் விளை நிலங்கள்!


ரஹ்மத் ராஜகுமாரன் - 9443446903ஒரு காலத்தில் தமிழ்நாட்டில்  நெல் முளைத்த இடங்களில் எல்லாம் இப்போது கல் தோன்றுகிறதே- என்ற வருத்தம் விவசாயக் குடும்பங்களில் பிறந்து இன்று வேறு தொழில்களைச் செய்பவர்களுக்குக்கூட ஏற்பட்டுள்ளது.  என்ன தான் கம்ப்யூட்டர்முன் உட்கார்ந்து தொழில் பார்த்தாலும் அவர்களின் உடலில் ஓடுவது விவசாய ரத்தம் அல்லவா...அந்த இரத்தத்தில் இந்த உணர்வு இல்லாமலா போகும்.. .
?

உழவன் உடலில், வயலில் உள்ள சேறுபட்டால் தானே நம் வாய்க்குள் சோறு போக முடியும் என்பது எல்லோருக்கும்தெரிந்த ஒன்று தான்.  ஆனால் விவசாயத் தொழில்ஈடுபட யாரும் விரும்புவதில்லை.  ஒரு காலத்தில்,நாம் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.  நமக்கு நாமே ராஜா என்ற வகையில் விவசாயத் தொழில்மீது அபரிமிதமான ஓர் ஈர்ப்பு இருந்தது.  ஏர்முனைக்கு நிகர் இங்கு எதுமே இல்லை என்றிருந்த காலம். 


ஆனால் இப்போது விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாரிசுகளைதொடர்ந்து விவசாயத் தொழிலில் ஈடுபடுத்த விரும்பவில்லை.  விவசாயம் என்பது நம்தலைமுறையோடு போய் விடட்டும் என்ற உணர்வில், இந்த தொழிலுக்கே ஒரு தலைமுழுக்கு போட நினைக்கிறார்கள்.  விவசாய நிலத்தையும் யாருக்காவது விற்றுவிட்டு,பணமாக்கி விட வேண்டும் என்ற உணர்வு விவசாய மக்கள் மனதில் தோன்றத் தொடங்கிவிட்டது.2012 ஜனவரி இரண்டாவது வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில்
, நீதிபதிகள் எலிப்பே தர்மாராவ், என். கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த ஒரு தீர்ப்பு, ஒருதொடர் நடவடிக்கைக்கு வழிகோலிட்டது.  ஸ்ரீ பெரும்புதூர்அருகே உள்ள மவுலிவாக்கம் என்ற இடத்தில் டி.எம். சுலோச்சனா அம்மாள் என்பவருக்கு சொந்தமானவிவசாய நிலத்தை, உச்ச வரம்பு சட்டத்தில் எடுத்து, அதை தமிழ்நாடு நிலச் சீர்திருத்த ஊழியர்கள் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கத்திற்குவீடு கட்டுவதற்கு ஒதுக்கியதை, நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.  உச்ச வரம்பின் கீழ், விவசாயநிலத்தை எடுக்கும்போது, அந்த நிலம் விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்வகையில் தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நிகர பயிரிடும்பரப்பாக ஒரு கோடியே 32 1/2 லட்சம் ஏக்கர் நிலம்  இருந்தது.  அதில் தான்விவசாயம் நடந்து வந்தது.  இந்த ஆண்டு 2012ன்கணக்குப்படி, தற்போது ஒரு கோடியே 20 லட்சம் ஏக்கர்நிலத்தில் விவசாயம் நடந்து வருகிறது. ஆக 12 1/2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இப்போதுவிவசாயத்தைக் காணவில்லை.

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, என் கிணற்றைக் காணவில்லை என்றே போலீஸில் புகார்செய்வார்.  அது பெரிய தமாஷாக நாமெல்லாம் சிரித்தோம்.ஆனால் இப்போது இந்த 121/2 லட்சம் ஏக்கர் விளை நிலத்தைக் காணவில்லை.  இப்போது உங்களுக்குச் சிரிப்பு வருகிறதா.. என்னே?இந்த நிலங்கள் எல்லாம் நகர மயமாக்குதல் என்ற வாய்க்குள் விழுங்கப்பட்டுவிட்டது.  இந்த விளை நிலங்கள் விலை போய் வீட்டுமனைகள் கான்கிரீட்டுக்குள் காணாமல் போய் விட்டது.

இந்தப் பிரச்சனை உலகம் முழுவதும் மும்முரமாக விளைநிலங்கள், காடுகள்... என்னமோ போர்க்கால நடவடிக்கை மாதிரிவேகமாக அழிக்கப்பட்டு நகரமயமாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருக்கஇடம் இல்லாததால், சீன அரசு கடந்த 1998ம் ஆண்டு ஆயிரக்கணக்கானஏக்கர் காடுகளை அழித்து அதில் மக்களை குடியமர்த்தியது.  அடுத்து வந்த பருவ மழையின் போது, காடுகளின் தடுப்பு இல்லாததால், யாங்ட்சீ ஆற்றுப் படுக்கையில்பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வரலாறு காணாத சேதத்தை விளைவித்தது.  56 லட்சம் வீடுகள் மூழ்கின.  இறந்தவர்களின் எண்ணிக்கைப் பதிவேடு வழக்கம்போல்வெள்ளத்தோடு அடித்துச்செல்லப்பட்டது.  கடந்தநூற்றாண்டின் மிகப்பெரிய வெள்ளம் என்று இச்சேதம் வர்ணிக்கப்படுகிறது!  யுத்தகால நடவடிக்கை மாதிரி சீன அரசு காட்டை அழித்தது.இயற்கையும் யுத்தம் நடந்த மாதிரியே ஒரே நாளில் 56 லட்சம் வீடுகளும் மக்களும் மாண்டனர்.யுத்த களத்தில் சொல்லப்படும் வசனம் தான் இங்கு பதிப்பது பொருத்தமாக இருக்கும்.


பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அதுசமயம் அது உங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டது? குர்ஆன் (9:25)

இயற்கையின் கணக்கு மிகவும் சுலபமானது. எத்தனையோ உயிரினங்களுக்குவீடுகளாக நாடுகள் உள்ளன.  இக்காடுகளை அழித்துவீடுகளை உருவாக்கிய மனிதனின் வீடும் காட்டில் கரைந்து போனது. காடுகளில் கூடுகளை இழந்தமற்ற உயிரினங்கள் மனிதனால் அழிந்து போகின்றன. ஆனால் மனிதன் தன்னைப் புத்திசாலியாக நினைத்துக் கொண்டு புதிய வீடுகளுக்கு இன்னமும்நாடுகளைத் தேடிப் போகின்றான்.  இந்தத் தேடலில்பரிதாபமாக மாட்டிக் கொண்டு இறந்து போன விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் ஏராளம்... ஏராளம்!

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்பில் பகுதி  காடுகளாக இருந்தன. இப்போதிருப்பதோ வெறும் 20 சதவிகிதத்திற்கும்கீழே, இந்த வேகம் தொடர்ந்தால், நேபாளத்தில் இன்னும் 15 வருடங்களுக்குப் பிறகும், பிலிப்பைனில்20 வருடங்களுக்குப் பிறகும், தாய்லாந்தில் இருபத்தைந்து வருடங்களுக்குப்பிறகும் காடுகளே இருக்காது. ரஷ்யாவின் தைகா காடுகள் புகழ்பெற்றஅமேசான் காடுகளைவிட இரண்டு மடங்கு பெரியவை. உலகின் மிகப் பழமையான மரங்களில் கால் பங்குஇங்கு தான் இருக்கின்றன! இதில் அமெரிக்க நிறுவனங்கள்  ஒரு புறம் சுரண்ட, இன்னொரு பக்கம் கள்ளக்கடத்தல் பேர்வழிகள் கொள்ளைஅடித்து, செடார், எல்ம், போன்ற விலை மதிப்பற்ற மரங்களைத் திருட்டுத் தனமாக வெட்டி, சீனா, ஜப்பான், தென் கொரிய போன்றகாடுகளுக்கு கடத்துகின்றன.

மரங்களை வியாபாரத்திற்காக வெட்டும் காடுகளில் முன்னணியில் இருப்பது, மலேசியா தான்.  50 ஆயிரம் சதுர மைல் பரப்பு கொண்ட அந்த நாட்டில்34 ஆயிரம் சதுர மைல் பரப்பில் காடுகள் இருந்தன. இவற்றில் 90 சதவிகிதத்தை வெட்டிக் கொள்ள அந்நாட்டு அரசு உரிமம் கொடுத்திருக்கிறது.

நான்கு சதுர மைல் பரப்புள்ள காட்டு விளை நிலங்கள் அழிக்கப்படும்போது மரவகைகள் 750,  பூக்கும் தாவரங்கள் 1500,பறவை இனங்கள் 400, பாலூட்டிகள் 100, ஊர்வன வகை விலங்குகள் 100, நில நீர் வாழ் விலங்குகள்60, ஆகியவை சேர்ந்து அழிகின்றன... பரிதாபமாக இல்லையா ... ? 

பிரேசில் நாட்டில் இருக்கும் அமேசான் நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும், ஒரு கால் பந்து மைதானங்கள் அளவு காடுகள் கபளீகரம்செய்யப்படுகின்றன.  இந்த வேகம் தொடர்ந்தால்,இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அடர்த்தியான காடுகளே பூமியில் இருக்காது.

 

 

இந்தியக் காடுகளின் வரலாற்றைப் புரட்டினால் இன்னும் சோகம், அலெக்ஸாண்டர் காலத்திலேயே அது  ஆரம்பிக்கிறது.  கி.மு. 400 களிலேயே தனது கப்பல் படைக்கு இந்தியாவிலிருந்துமரங்களை எடுத்துச் சென்றார் அவர்.  அப்போதேபெர்சியா, அரேபியா போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மரங்கள்அனுப்பப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.  இடையில் வந்த மொகலாய மன்னர்களின் ஆர்வம் வேட்டையின்பக்கம் திரும்பியதால் காடுகள் தப்பின.  இதனால்அவர்கள் பங்கையும் சேர்த்து வெட்டினர் ஆங்கிலேயர்கள். பர்மா தேக்கும், சால்மரங்களும் அவர்களின் இலக்காயின. ஓக் மரத்துக்குப் பதில் வைரம் பாய்ந்த இந்தியத் தேக்கு மரங்களால் செய்த கப்பல்களைஆங்கிலேய தளபதி நெல்சன் தனது படையில் புகுத்தினார் என்பதும்,  டிரஃபால்கர் போரில் அவற்றைப் பயன்படுத்திபிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தார் என்பதும் வரலாறு. இதெல்லாம் மீறி இந்திய விடுதலையின்போது நிலப்பரப்பில் 33 சதவிகிதம் காடுகளாக இருந்தது.  இப்போது நம்மிடம்  மிஞ்சியிருக்கும் வனப்பகுதி வெறும் 11 சதவிகிதம்மட்டுமே.

மரத்தின் உபயோகத்தையும் மரத்தை வெட்டியதால் ஏற்படும் ஆபத்துக்கள்அபாயங்களையும் குர்ஆனில் அல்லாஹ் சூட்சமாக சில சம்பவங்களை குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.  நபி மூஸா (அலை) அவர்கள் கையில் வைத்திருக்கும் மரக்கம்பைப்பற்றி இறைவன், மூஸா உங்களது வலது கையில் இருப்பது என்ன..?  என்று கேட்டான்! எனது ஆடுகளுக்குத் தழை குழைகளைப் பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு பல பலன்களும் இருக்கின்றனஎன்று கூறினார்.                         குர்ஆன்(20:17)நபி மூஸா (அலை) அவர்கள் மரக்கம்பைக் கொண்டு தான் பயன்படுத்தும்முறைகளைப் பட்டிய லிட்டார்கள்.  நாமும் மரத்தைவெட்டி, வீடுகளுக்குத் தேவையான மரச் சாமான்கள்செய்வதும், காகிதங்களை செய்ய மரக்கூழ் காய்ச்சுவதும்,மரத்தால் கப்பல்கள் செய்யவும், பொதுவாக நாம் பயன்படுத்துவதுமாதிரி நபிமூஸா (அலை) அவர்களும் பட்டியலிட்டுச் சொன்னார்கள்.ஆனால் மரத்தின் மிக உன்னதமான பயனை அல்லாஹ் குர்ஆனில் அதே நபிமூஸா(அலை) அவர்களின் வரலாற்று சம்பவத்தோடு குறிப்பிடுகின்றான்.

சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி, மூஸாவே! முதலில் உங்களுடைய மரக் கைத்தடியை நீங்கள்எறிகிறீர்களா? அல்லது நாம் எறிவதா ... ? என்று கேட்டனர். அதற்கு மூஸா, நீங்களே முதலில் எறியுங்கள்என்று கூறினார்.  அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடையகண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும் படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.  அதுசமயம் நாம் மூஸாவே ! நீங்கள் உங்களுடைய தடியைஎறியுங்கள் என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். இவ்வாறு அவர் எறியவே அது பெரியதொரு பாம்பாகி அவர்கள் சூனியத்தால் கற்பனை செய்தயாவையும் விழுங்கி விட்டது.  குர்ஆன்(7:115-117)   மரக்கைத்தடி பாம்பாகி அதிர்ச்சியூட்டும்ஆபத்தான மற்ற பாம்புகளை விழுங்கி  மீண்டும் மரக்கைத்தடியாக மாறியது இங்கு அதிசயமாகக் காட்டப்பட்டுள்ளது.  இச்சம்பவத்தில் இறைவன் மரத்தின் ஒரு மகத்தான குணாதிசயத்தைமேலோட்டமாக நமக்குக் காட்டுகின்றான்.மனிதன் மற்றும் ஜீவராசிகள் ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன்டைஆக்சைடுவாயுவை வெளிவிடுகின்றன.  பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்துவதால்,ஏற்படும் கார்பன் மானோக்சைடு எனும் வி­  வாயு வெளிவிடப்பட்டுதொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரி போன்றவற்றாலும் கார்பன் மானோக்சைடு  வாயு வெளிவிடப்படுகிறது.  இவைகள் அனைத்தும் மனிதனுக்கு தீங்குவிளைவிப்பதோடு பூமிக்கும் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது .  பொதுவாக மரங்கள் கார்ப்பன்டை ஆக்ஸைடு வாயுவைசுவாசித்து, ஆக்ஸிஜனைவெளிவிடுகிறது.

பிர்அவ்னின் சூனியக்காரர்கள்உண்டாக்கிய பாம்புகளைப் போல் மனித குலத்திற்கு தீங்கிழைத்து தீண்ட வரும்போது, நபி மூஸா(அலை) அவர்களின் அஸாவான மரக்கைத்தடி பாம்பாகி தீங்கிழைக்கும் பாம்புகளை விழுங்கி, மீண்டும்மரக்கைத்தடியானது போல் மரமும் வி­வாயுக்களை விழுங்கிஆரோக்கியமான உயிர்வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது என்பதை விஞ்ஞானத்தனமாக நாம்இங்கு விளங்கிக் கொள்கிறோம்.

நம்முடைய மின்சார தேவைக்காகவைத்திருக்கும் நீர் மின் நிலையங்கள்,

 

 

அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்களை இவைகளெல்லாம் தரும்  ஆற்றலை விடகாடுகள் தரும் ஆற்றல் அதிகம். காடுகளின் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுகான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது. இதனால் காடுகளின் சூழவுள்ள பூமி படிப்படியாக குறைந்து வருகிறது.லாரண்ட் ஃபேபியஸ் என்றஉயிரியல் விஞ்ஞானி சொன்ன வி­யம் ஒன்றை இங்கே ஞாபகப்படுத்தவேண்டும்.  இன்றும் காடுகளையோ சதுப்புநிலங்களையோ அழித்தால்,இன்று மாலையே வெள்ளம் வரும். நாளை வறட்சி.. நாளை மறுநாள் பஞ்சம் வரும் அதற்கு மறுநாள் நோய் பரவும் என்றுஅர்த்தம்  என்கிறார்.  லாரண்ட் ஃபேபியஸ் கூறுவதைப் பார்க்கும் போதுகியாமத் நாளின் அடையாளமான வானத்தை குர்ஆனில் இறைவன் கூறுவது நமக்கு ஞாபகத்திற்குவருகிறது.  இவர்களையும் இவர்களுடையமூதாதைகளையும் நீண்ட காலம் வரை சுகமனுபவிக்கச் செய்தோம்.  அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது.  இப்போது அவர்கள் கர்வங் கொண்டு விட்டார்களா?நிச்சயமாக நாம் அவர்களைச் சூழவும் உள்ள பூமியைப் படிப்படியாகக்குறைத்து இவர்களை நெருக்கிக் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா... ? இவர்களா... நம்மை வெல்வார்கள்...? குர்ஆன் (21:44)தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தஉற்பத்தியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களின் பங்களிப்பு வெறும் 8சதவிகிதம் தான்.  இந்த 8 சதவிகிதவருமானத்தை நம்பித்தான் 40 சதவிகிதவிவசாயிகள் பிழைத்துவருகிறார்கள்.   இந்தப் போக்கு இன்னும்தொடர்ந்தால் விவசாயிகள் என்ற உழைப்பாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பது மட்டும்அல்ல விளைநிலங்களே இல்லாமல் போய் உணவு தட்டுப்பாடும் பஞ்சமும் ஏற்படவாய்ப்புள்ளது.  விவசாயம், விவசாயநிலங்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் அல்லாஹ்வின் நாட்டம் என்பதற்கு சாட்சியாககுர்ஆனில் தாவூதையும் சுலைமானையும் நபியாக அனுப்பி வைத்தோம்... ஒருவருடைய ஆடுகள்மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி இருவரும் தீர்ப்புக் கூற இருந்தசமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்                            

குர்ஆன் (21:78)பாதிப்புக்குள்ளான விளைநிலத்தை ஆடு மேய்ப்பாளர் விளையும் பயிரை அறுவடைக்கு தயாராக்கி மீண்டும் விவசாயிடம்கொடுத்து விட்டு தன்னுடைய ஆடுகளை விவசாயிடமிருந்து மீட்டிக் கொள்ளலாம். அதுவரைநிலமுள்ள விவசாயி பாதிப்படையாமல் இருப்பதற்காக ஆடுகளை ஈடாக வாங்கிய காலத்தில்ஆட்டின் அத்தனை பயன்களையும் விவசாயி அனுபவித்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பை தான்நபி சுலைமான் (அலை) வழங்கினார்கள்.  இந்ததீர்ப்பையே இறைவனும் சரி என்றே தீர்ப்பளித்தான். அதையும் வேதத்தில் பதிவு செய்தான். மேற்கண்ட சம்பவத்தின் மூலம் விவசாயிகளும் விவசாய நிலங்களும் எந்த வகையிலும்பாதிப்படையக் கூடாது என்பது தான் இறைவனின் நாட்டம் என்பதை .....

 

உலகத்தார் யாவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதத்தில் பதிவு செய்தான்.

நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தங்களை விளைநிலத்தோடு ஒப்பிட்டு, மழைத்தண்ணீரைத் தேக்கி வைத்து தானும் பயன்பெற்று பிறருக்கும் பயனளிக்கும் சதுப்பு நிலம்போன்றவன் நான் என்கிறார்கள் (ஹதீஸ்)


சற்று சிந்தியுங்கள்
; நீங்கள் வயல்வரப்பு நிலங்களை விலைக்கு வாங்கி வீடு கட்டுவதாக எண்ணியிருந்த உங்கள் திட்டத்தைநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக தம்மோடு ஒப்பிட்ட அந்த உன்னதமானவிளைநிலத்தை விளையும் நிலமாகவே விதையுங்கள். அறுவடை செய்யுங்கள். அனுபவியுங்கள். விலை பேசாதீர்கள்? மேலும் விளைநிலத்தைஉங்கள் மனைவிக்கு ஒப்பாக குர்ஆனில் விளக்கமளிக்கின்றான்.

உங்கள் மனைவிகள் உங்கள்விளைநிலங்கள்.  ஆகவே உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுடைய பிற்காலத்திற்கு வேண்டியதைத்தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைச்சந்திப்பீர்கள் என்பதையும்உறுதியாக அறிந்து பயந்து கொள்ளுங்கள்                      
(குர்ஆன்(2:223)  


மேலும் இப்பூமியைப் படைத்ததை விடஇறைவன் இப்பூமியிலுள்ள உயிர்களுக்குத் தேவையான இன்றியமையாத உணவு உற்பத்தித் தளத்தைஉருவாக்குவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதாக குர்ஆனில் குறிப்பிடுவதால்
, உணவுஆதாரத்தைப் பெற்றுத் தரும் காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்தமுக்கியத்துவத்தை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குர்ஆனில்,  நீர் கூறும் இவ்வளவு பெரியபூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்து விட்டு மற்றவைகளை அவனுக்குஇணைய மாக்கின்றீர்களா...?..பூமியில் வசிப்போருக்கு வேண்டிய ஆகாரத்தை நான்கு நாட்களுக்குள்திட்டமிட்டான்.         
குர்ஆன் 41:09-12)

குர்ஆனில் இன்னோர் இடத்தில்படைப்புகள் வசித்திருக்கவசதியாகப் பூமியைப் படைத்தான் (குர்ஆன் 55:10)

 

 

உங்களின் கனவு இல்லத்திற்காக விளை நிலத்தை கான்கிரீட்குப்பைகளாக மாற்றாதீர்கள்.