ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Nov 2012 »  வாழ்க்கை வரலாறு

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  வாழ்க்கை வரலாறு

 

   மூலம் : திருநபி சரித்திரம்.தொகுப்பு : முஹம்மதடிமை, திருச்சி .

 

மதீனாவில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வாழ்க்கை.

திங்கள்வந் திறைஞ்சிப் போற்றி செய்தெதிர் பேசப் பேச


மங்குலங் கவிகை வள்ளல், வளம்பெறு மதினாத் தன்னிற் 

பொங்குதீன் விளங்க நாளுங் காரணப் புதுமை யோங்கி 

எங்கணும் படரச் செங்கேல் நெறியர சியற்று நாளில் 

(சீறா : பாத்திமாதிருமணப் படலம் - 1) 


நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மதீனாவில் பள்ளிவாசலை ஒட்டிக் கட்டியிருந்தஇரண்டு அறைகளிலே குடும்பத்துடன் வசித்து வந்தார்கள்.   அவர்களின் இல்லற வாழ்க்கை ஆடம்பரமில்லாமல் சாதாரணமாகவேஇருந்தது.  ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:  “மாதக்கணக்காக எங்கள் அடுப்பில் நெருப்புப்பற்ற வைக்காமலே இருக்கும்.    பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களும் நாங்களும் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் கொண்டே நாட்களைக் கழிப்போம்.  சில வேளைகளில் யாராவது மாமிசம் அனுப்புவார்கள்.  ரொட்டி செய்வதற்கு மாவு கிடைக்கவில்லையானால் அதைக்கொண்டே திருப்தி  செய்துகொள்வோம்.  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தொலிக் கோதுமை மாவால் செய்த ரொட்டியை உண்டு   ஒட்டகப் பாலையும் குடிப்பார்கள்.  தங்கள் திருகையினாலேயே, வீட்டைப் பெருக்கிக்  கொள்வார்கள். சாப்பிடுவார்கள்.  சில வேளைகளில் தாங்களே நெருப்பும் பற்ற வைப்பார்கள்.  தங்களுடைய உடைகளைத் தாங்களே தைத்துக் கொள்வார்கள்”எவ்வளவோ செளகரியம் செய்து கொள்ளக் கூடிய வல்லமை அவர்களுக்கிருந்தும் அவர்கள் மிக்கசாதாரணமாயிருப்பார்கள்.  அவர்களது எளிய வாழ்க்கை,பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. அதனால் மதீனாவிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும்அவர்களிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  
காலத்தில் அவர்களின் சகவாசத்தி லிருந்தவர்களுக்கு ஸஹாபாக்கள்(தோழர்கள்) என்று பெயர். ஸஹாபாக்களில் சிலர் மத சம்பந்தமான கைங்கரியங்களோடு வியாபாரம், விவசாயம் முதலிய தொழில் செய்து வந்தார்கள்.  வேறு சிலர் தங்களுடைய வாழ்நாளை இறைவணக்கத்திலும்,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து மார்க்க அறிவுகளைக் கற்றுக் கொள்வதிலுமே கழித்து வந்தார்கள்.   அவர்களுக்குக் குடும்பப் பாரமில்லாதிருந்தது.  திருமணமான போது அவர்கள் அக்கூட்டத்தை விட்டு விலகிக்கொள்வார்கள்.  அவர்களில் சிலர் பகல் நேரத்தில்காடுகளுக்குப் போய் விறகு வெட்டி விற்று அதைக் கொண்டு மற்ற சகோதரர்களுக்கு உணவு சமைத்துக்கொடுப்பார்கள். இக்கூட்டத்தார் பகல் நேரமெல்லாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் முன்னிலையிலிருந்து அவர்கள்  திருவாய்மலர்ந்தருளும் திருமொழிகளைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

சில சமயங்களில் இவர்கள் இரண்டு நாள் வரையிலும் உணவில்லாது இருந்திருக்கிறார்கள்.  இவ்விதம் பசியினால் வாடிக் கொண்டிருக்கும் சில சமயங்களில்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்பள்ளிவாசலுக்கு வந்து தொழும் போது இவர்களும் அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள்.  ஆனால்பசியினால் ஏற்பட்ட பலவீனத்தினால் தொழுது கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து விடுவார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு யாராவது விருந்து கொடுப்பதாயிருந்தால்விருந்தளிப்பவர்களின் அனுமதியுடன் இவர்களையும் சேர்த்துக் கொண்டு செல்வார்கள்.  சில வேளைகளில் இராக்காலங்களில் இவர்களிலொருவர் அல்லதுஇருவரை முஹாஜிரீன்களிடமும்  அன்ஸாரிகளிடமும் ஒப்படைத்து உணவு  கொடுக்கச் செய்வார்கள்.  இக்கூட்டத்தார்கள் வணக்கத்திலும், திருக்குர்ஆன் ஓதுவதிலுமே இரவு முழுவதையும்கழிப்பார்கள்.   இவர்களுக்குக் கற்பிக்க ஓர்ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.  அன்னியநாட்டாரை இஸ்லாத்திற்கு அழைக்க வேண்டியதிருந்தால் இக்கூட்டத்தார்களே அனுப்பப்படுவார்கள்.  அவர்களெல்லாரும் பள்ளிவாசலை யயாட்டி நிழலுக்காகக்கூரை நீட்டிவிடப்பட்டிருந்த இடத்தில் தாமதித்து வந்தார்கள்.


அந்த இடத்திற்கு அரபி மொழியில் “ஸுப்பா” (றீUய்ய்பு) என்றுசொல்லப்படும்.  அதன் காரணமாக அவர்கள்“அஸ்ஹாபுஸ் ஸுப்பா” (திண்ணைத் தோழர்கள்) என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர்.  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் (ஹதீஸ்) திருமொழிகளை எடுத்துச்சொல்வதில், பிரசித்திபெற்ற ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களே.


மக்கா மதீனா நிலைமை


மதீனாவில் முஸ்லிம்கள் ஒருவிதத்தில் அமைதியுடன் பயமற்றுக் காலங்கழித்து வந்தார்கள்.  மற்றவர்களின் தொந்தரவு இல்லாமல் பள்ளிவாசல்கட்டித் தங்களுடைய வணக்கங்களை நிறைவேற்றி வந்தார்கள்.  ஆனால் முஸ்லிம்களுக்கு விரோதிகளே இல்லாமல் போய்விட்டார்களென்று நினைக்க முடியாது. ஏனெனில் ஒரு பக்கம் மதீனாவில் முஸ்லிம்களுக்குப் பூரண மத சுவாதீனம் கிடைத்தபோதிலும் மற்றொருபுறம் முஸ்லிம்களின்விரோதிகளின்  பகைமையும் ஊக்கமும்அதிகரித்துக் கொண்டே போயிற்று. அக்காலத்து அரபியர்களின் கலகப் பிரியம், பிடிவாதம்முதலிய குணங்களை அறிந்தவர்கள், முஸ்லிம்களுக்கு ஒருவிதப்பயமிருந்தது.  என்பதை அறிவார்கள். ஒரேஆண்டவனை விசுவாசித்ததற்காக மட்டுக்கடங்காத துன்பத்திற்குள்ளாக்கி ஒரு விநாடி கூட இன்பமாக இருக்க முடியாமற் செய்துகடைசியாக அவர்களுடைய பிறப்பிடமாகிய மக்காவை விட்டுத் துரத்தி, அவர்கள் அன்னியநாடு போய்ச் சேர்ந்ததும், அங்கும்அவர்களைத்  துன்பப்படுத்திய அக்குறை´களால் பயமேஅதிகமாயிருந்தது.  முன் ஒரு சமயம்முஸ்லிம்கள் தங்கள் நாட்டைவிட்டு அபிசீனியாவிற்குக்  குடிபோயிருந்த போது அங்கும் அவர்களை வாழவிடாமல்செய்வதற்காக அவர்களைப் பின் தொடர்ந்து அந்நாட்டவர்களிடம் குதர்க்கங்களெல்லாம்செய்த அந்தக் குறை´களுக்குப் பொதுவாக முஸ்லிம்களின் மீதும் முக்கியமாகப் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அளவு கடந்த பகைமை அதிகரித்துக் கொண்டே சென்றது.


இஸ்லாம், மதீனாவில் ஒருவேளை பலமாக வேரூன்றி விட்டால் மக்காவிலிருந்து குடிபெயர்ந்தோர் தங்களைப் பழிக்குப்பழி வாங்குவார்களே என்னும் பயம், குறை´களுக்கு இயற்கையாயுள்ளவிரோதத்தை அதிகப்படுத்தியது.  இவ்விதக்கெட்ட எண்ணத்தில் திளைத்திருப்பவர்கள் முஸ்லிம்களை எப்படி நிம்மதியாக வாழ விடுவார்கள்? மக்கா குறை´களின்  பயத்தைத் தவிர முஸ்லிம்களுக்கு மதீனாவாசிகளில் யூதர்கள், முனாபிக்கீன்கள் பற்றிய பயமும்உண்டு.


|
யூதர்கள்


மதீனாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும்யூதர்கள் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.  ஹிஜாஸ் மாநிலத்தில் யூதர்கள் தனி செல்வாக்குப்பெற்றிருந்தனர்.  அரபு நாட்டின் செல்வம்அவர்களிடமே போய் சிக்கிக் கொண்டது. வியாபாரமும் அவர்கள் கைவசமே இருந்தது. கூலி வேலை செய்பவர்களும் பயிர் செய்து வாழும் ஏழை விவசாயிகளும் யூதர்களிடமேகடன் வாங்கி வந்தார்கள். யூதர்கள் கடன் கொடுப்பதாக இருந்தால் கடினமான நிபந்தனைகள்விதித்துக் கடன் கொடுப்பார்கள்.  கடன்தொகைக்குப் பொறுப்பாகப் பெண்களையும்
, பிள்ளைகளையும் ஈடுவைக்கும்படிகேட்பார்கள்.  சிலர் இதற்குட்பட்டே பணம்வாங்குவார்கள்.  அடகு வைக்கப்பட்ட சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஆசைப்பட்டு யூதர்கள் சிலசமயம் அக்குழந்தைகளைக்கொன்று விடுவதுமுண்டு. விபச்சாரம் போன்ற தகாத செயல்கள் யூதர்களிடம் பெருமளவில்குடி கொண்டிருந்தன. கடன் தொகைக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ஈவு இரக்கமின்றிகண்டிப்பான முறையில் பணத்தை வசூல் செய்வார்கள். உழைப்பாளிகள் தங்கள் உழைப்பின் மூலம் கிடைப்பதையயல்லாம் யூதர்களிடம்கொடுத்து விட்டுப் பசியிலும் பட்டினியிலும் காலங்கழித்து வந்தார்கள்.  நாட்டிலுள்ள பணமெல்லாம் யூதர்கள் வசமேபோய்ச்  சேர்ந்து அதன் காரணமாக அவர்கள்அளவுக்கு மீறிச் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று கூட்டத்தார் முக்கியமானவர்கள். (1) பனூகைன்கா, (2) பனூநுலைர்,(3) பனூகுறைலா. இம்மூன்று கூட்டத்தார்களும் மதீனாவிலும்சுற்றுப்பக்கங்களிலும் பலமான கோட்டைகளைக் கட்டி வசித்து வந்தார்கள்.

யூதர்களுக்கும், பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடத்தில்விரோதமிருந்து வந்தது.  அதற்கு முக்கியகாரணங்கள் இரண்டு. (1) முஸ்லிம்கள் வேறு மார்க்கத்தைப் பின்பற்றுவது (2)யூதர்களின் விரோதிகளான “அவுஸ்”, “கஸ்ரஜ்” என்னும் இரண்டுகுடும்பத்தார்களும் தங்களுக்குள் ஓயாமற் சண்டை செய்து  கீழ் நிலையைஅடைந்திருந்தார்கள். இவ்விரு குடும்பத்தார்களுக்கும் ஒற்றுமை ஏற்படாதபடி யூதர்கள்முயன்று வந்தார்கள்.  பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்தபின் முஸ்லிம்களான இவ்விருகுடும்பத்தாரும் அதிக ஒற்றுமையுடன் இருந்தார்கள். அது யூதர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் யூதர்கள் அந்த விரோத மனப்பான்மையை வெளிக்குக் காட்டாமல் வெளிப்படையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுடன் சமாதானமாக இருந்து கொண்டு முஸ்லிம்களைத் தாக்குவதற்குச்சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தனர்! இதற்கிடையே மற்றுமொரு மோசமான கூட்டத்தினரும்இருந்தனர் ; அவர்கள்?

 

 

இன்ஷா அல்லாஹ்  அடுத்த இதழில்