ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  பிரபஞ்ச நூலகம்

பிரபஞ்ச நூலகம்


அல்லாஹ்வின் ஓவியம்

அழகான காவியம்

அருகிலே சென்று பார்த்தால்

ஆனந்த அதிசயம்

மெய்ஞ்ஞான ரகசியம்

மேன்மைகளின் பிறப்பிடம்

அஞ்ஞானம் நீக்கவந்த

அண்ணல் நபி பொக்கி­ம்

      கலீல் அவ்ன்நாயகம் - அது

      காலத்தின்மாதவம்

      காலத்தின்மாதவம் - அது  கல்புகளின் வாசகம்.                            (அல்லாஹ்)


பூமியிலே இறைப்பொறுப்பைத் தாங்குகின்ற முக்கியம்

வலிமார்கள் வாழ்ந்ததற்கு வாழுகின்ற சாட்சியம்

தோன்றிவந்த மகான்களெல்லாம் தோன்றுகின்ற துறைமுகம்

முன்னோர் சொன்ன ஞானமெல்லாம் மொத்தமான தத்துவம்        (அல்லாஹ்)


ஒருசொல்லில் கோடி நூற்கள் பதித்திருக்கும் அச்சகம்

உற்றுப்பார்த்துப் படிப்பவர்க்கோ பிரபஞ்ச நூலகம்

கைப்பிடித்து கருணையோடு கூட்டிச் செல்லும் தாயகம்

கவலையற்ற இடத்தில் சேர்க்கும் கதிமோட்ச பாக்கியம்                    (அல்லாஹ்)


அறிவாலே அளக்கவந்தோர் அடைந்திடாத வெற்றிடம்

அன்பென்னும் வாசல் கண்டால் ஓடிவரும் உற்சவம்

குர்ஆனைப் போல இதுவே நேர்வழியும் காட்டிடும்

குற்றம் கொண்ட நெஞ்சை மேலும் வழிகெடுத்து வீழ்த்திடும்            (அல்லாஹ்)


 

இஸ்லாத்தைக் காக்க வந்த இரசூலின் இலட்சியம்

எதிர்த்து நிற்கும் வஹ்ஹாபிக்கோ அலியாரின் ஆயுதம்

வானில் புது ஞானக்கோளாய் வலம்வரும் ஒளி நட்சத்திரம்

உலகைச் சுற்றி சத்தியத்தை விதைக்கும் மகா மான்மியம்                    (அல்லாஹ்)


செயல்களெல்லாம் சிற்பம்போல செதுக்கிய அணி இலக்கணம்

அசைவுகளும் பாடமாகும் எழில் அர்த்த சாஸ்திரம்

சிந்துகின்ற புன்னகையில் செம்மல் நபி வசீகரம்

சிற்றுடலில் வாழுகின்ற பேருலகப் பூரணம்                                                    (அல்லாஹ்)

அல்லாஹ்வின் ஓவியம்: அல்லாஹ் படைத்த அழகிய படைப்பு

-ஆலிம் புலவர்-

 மறை பொருள்!


        அருமை ஷைகு நாயகம் செய்யிது கலீல் அவ்ன் மெளலானா அவர்கள், தமது ஞான சூத்திர நூலான ‘பேரின்பப் பாதை’யில் (பக் - 23) குறிப்பிட்டுள்ளதற்கொப்ப ‘ஏகமாய் பரிபூரணமாய், விரவி, வியாபகமாய், மறைந்தும்வெளியாகியும், ஆதியாகவும் அந்தமாகவும், நிறையாகவும் நித்திய ஜீவனாகவும், சக்தியாகவும்சக்திப் பொருளாகவும், பின்னிக் கலந்துள்ள பரமாகிய, ஆண்டவனின் அருட்கூறுகள் தான் நாமும் மற்ற படைப்புகளும் என்ற ஆழ்ந்தஎண்ணமும் படைப்பினங்கள் அனைத்துமே அச்சக்தியால் இயக்கப்படும் கருவி என எக்கணமும்எண்ணி வருவதும் ஓர் உத்தம வணக்கமாகும்.

  இந்நிலைஆழ்ந்து செல்லும்போது
, மனிதன்மனதளவில், தன்னில் இறந்து, இறைவனில்வாழும்படிச் செய்யும்  அதி அற்புத ஆனந்தநிலை சித்தியாகும்.  இந்நிலையில் வணக்கம்,வணங்குவோன், வணங்கப்படுவோன் எனும் பேதம்இல்லாமல் போகிறது என்பது குத்புமார்களின் அனுபவப்பூர்வமான அறிவிப்பாகும்.  மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் அனல் ஹக் (நானேசத்தியம்) என்று முழங்கியது இந்நிலையில் தான்!

        எமது ஷைகுநாயகம் அவர்கள்
, தங்களின்  வாரிதாத் அருட்பாடலில் -

      அருவத்தில்உற்ற ஜோதி     உருவத்தில் ஆனபோது

      பருவத்தில் உற்ற பேதம்     பயனற்றுப் போவதாமே என்றுபாடியுள்ளார்கள்.

    இதன் பொருள்:  அருவமாக உள்ள இறைவனின் பேரொளி (நூர்)உருவமாக மனித கோலத்தினுள் மறைந்து வெளியாகி உள்ளதை உணரும் போது
, படைப்பு வேறு, படைத்தவன்வேறு எனும் வேறுபாடு விலகிக் கொள்கிறது.
P.A. அப்துல் ரவூப் ஜின்னாய.ளீலிது மதுரை.