ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  அமுத மொழிகள்

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுத மொழிகள் 


5 - 1 - 93 ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் Dr. அப்துல்ஹக் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சிறப்புக்கூட்டத்தில் சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் அருளிய ஆன்மீகச் சொற்பொழிவின் சாரம்

(உரைத் தொகுப்பு : ஆ´குல் கலீல் ய.ளீலிது)

    
    பிஸ்மில்லாஹி வல்ஹம்து லில்லாஹ். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

               

               இந்தச் சபை ஏற்படுத்தப்பட்டதன்நோக்கம் தவ்ஹீதென்னும் ஓரிறைக் கொள்கையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்!


      அல்லாஹ்வை - ஹக்காக காட்டித்தந்தவர்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.


              அல்லாஹ் என்பதன் அறிவாகஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  திகழ்ந்தார்கள்.


நபிமார்களின் திருப்பணி!


        ஹள்ரத் ஆதம் (அலை) அவர்கள் முதல், எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரைஅகிலத்தில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் ஏகத்துவ ஞானத்தையே போதித்துவந்தார்கள். அவர்களனை வரும் ‘´ர்க் எனும் பெரும் பாபத்திலிருந்து மக்களைக் காக்கவே பாடுபட்டார்கள். ’ஷிர்க் என்பதென்ன? ஒன்றை இரண்டாக  மூன்றாக எண்ணுவதும் கருதுவதும் ஷிர்க் ஆகும்.

      ‘லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவே ´ர்க்கை விட்டும் நீக்கக்கூடிய மந்திரமாகும்.

      “லாயிலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன?  இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லைஎன்பது தான்!


      இதனைத் தான் ஹள்ரத் ஆதம்(அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் வரையிலான அனைத்து தீர்க்கதரிசிகளும்போதித்து வந்தனர்.


வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


      ‘அல்லாஹ் எனும் ஒருவனே ஏகன் - அனைத்தும் அவனே என்பதுதான் வஹ்ததுல் வுஜூத் ஆகும்


      ஆதம் (அலை) அவர்களை என்உருவத்தில் படைத்தேன் - எனது ரூஹை அவரிலே ஊதினேன் என ஏக இறை கூறுவதே தவ்ஹீதின் கருத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது! இதிலிருந்து   (தஜல்லியாக) வெளியாகி யிருப்பது ஹக்கேஎன்பதும் எல்லாமும் அதிலிருந்தே வெளியாயின என்பனவும் தெளிவாகின்றன! இதுவே தான்தவ்ஹீதும் ­ரீஅத்தும்! இதனை எங்ஙனம் பிரிக்க இயலும்?


      அல்லாஹ்வை ஆராயக் கூடாது, சிந்திக்கக் கூடாது எனச் சிலர் அறியாமையினால் கூறித்திரிகின்றனர்! ஹக்கை அறியாமல் அவனை நாம் எங்ஙனம் வணங்க இயலும்? எனவே, ஹக்கை அறிவது மிகவும் அவசியமாகும்.


தவ்ஹீதை முழுமையாக விளங்குவது தலையாயக் கடமையாகும்!


    இவ்வளவு காலமாக நம் பிள்ளைகளிலேஅதிகமான பேர் “னிழிஷ்ஐ ஸ்ரீலிஷ்ஐமி எது? என்பதையும் தவ்ஹீதையும் இன்னும் விளங்காமல் இருப்பது நம்மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது! கவலையாக இருக்கின்றது!     இந்தியாவில் இந்து மதம் புகழ் பெற்றது - ஞானமணம் பெற்றது!


இறைவன் இருப்பது எங்கே?


        இஸ்லாத்தைப் பொறுத்தவரை -அல்லாஹ்விற்கு உருவமில்லை என்பது தான் அடிப்படை சித்தாந்தம்! சிலர் கூறுவது போல்அல்லாஹ் அர்´ல் இருப்பதாகவும் - கிரீடம் அணிந்திருப்பதாகவும் கால் மேல் கால்போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பதாகவும் கற்பனையாக நினைத்துக் கொண்டு வணங்கிவருவோரின் பரிதாப  நிலையை என்னென்று கூறுவது? “அல்லாஹ் அர்´ல் உள்ளான்என்பதன் உண்மைப் பொருள் வேறு! அந்தக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தான் நாம் கூறுகிறோம்!


      “அல்லாஹ் நம் ‘மனம் எனும் சிம்மாசனத்திலிருந்து ஆட்சி புரிகிறான் என்பதனை விளங்காமலிருப்போரை என்னென்றுரைப்போம்?


ஆன்மிகக் கொள்கையின் அவசியம்!


    ஒரு பள்ளிவாசலில் ஓர் ஆயிரம் பேர்தொழுதால் - 1000 பேரும் ஆயிரம் விதமாக அல்லாஹ்வை நினைத்து தொழுதுவருகின்றனர்.  அப்படியானல், ஆயிரமாயிரம் ஆண்டவன் இருக்க வேண்டும். பற்பல சிந்தனைகளோடுவணங்குவது சிலை முன் நின்று வணங்குவதும் ஒன்று போல ஆகிவிடுகின்றன.


     இந்நிலையிலிருந்து மனிதனை சரியானவழியில் கொண்டு செல்லவே, இஸ்லாத்தில் தெளஹீதென்னும்ஆன்மிகக் கொள்கை சிறந்த முறையில் தெளிவாகக் கூறப்படுகிறது.


தவ்ஹீதை  அறிவுப் பூர்வமாக விளங்கவேண்டும்!


    இஸ்லாம் அறிவுப் பூர்வமானமார்க்கம்; தத்துவப் பூர்வமான மார்க்கம்! எல்லாத் தத்துவார்த்தங்களிலும்தவ்ஹீதென்னும் கலையே மிகவும் சிறப்பிற்குரியது! மிகவும் முக்கியமானதும் அதுவேதான்!      தவ்ஹீதை விளங்குவதற்கு ஏழுபடித்தரங்களைக் கூறுகின்றனர்.  அவற்றில்நாலாவது படித்தரத்திலாவது இருக்க வேண்டும்!


    தவ்ஹீதை விளங்கியவர் களிலேயே பல குழப்பங்களை நாம் காண முடிகின்றது!ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக - தங்கள் மனோநிலைக்குக் தக்கவாறெல்லாம் தவ்ஹீதைவிளங்கியிருப்பதை சில தினங்களுக்கு முன்னர் - நாம் திண்டுக்கல்லில் சிலபேர்மத்தியிலே உரையாடிக் கொண்டிருந்த போது விளங்க முடிந்தது!


 ஒவ்வொருவரும் ஓர் அளவில் தான்தவ்ஹீதை விளங்கியவர்களாக இருக்கிறார்களேயல்லாமல் பூரணமாக விளங்கியவர்கள் மிகச்சொற்பமாகவே காணப்படுகின்றனர்!

        நாம் ஓரிரு வி
­யத்தைக் கூறும் போது - அங்கு பத்துப் பேர் இருந்தால், பத்துப் பேரும் பத்து விதமாக விளங்கிக் கொள்கிறார்கள்.  சம்பூர்ண விளக்கம் இன்னும்  மிகுதமானவர்களிடம் வரவில்லை என்பதைத் தான் இதுகாட்டுகின்றது!


தவ்ஹீதே வாழ்க்கையாகும்!


        தவ்ஹீதை வேறுபடுத்தி விளங்கக்கூடாது! தவ்ஹீத் வாழ்க்கையோடு ஒட்டியதாக விளங்க வேண்டும். நம்மிலே அநேகர் வியாபாரம் மற்றும் தொழில்களில்ஈடுபட்டிருப்பினும் நாம் செய்யக் கூடிய தொழிலிலும் வியாபாரத்திலும் தவ்ஹீதின்(ஏகத்துவம்) நிலையைக் கைக் கொள்ள வேண்டும்!


ஞான சபைக் கூட்டத்தின் அவசியம்!


            தவ்ஹீத் சம்பந்தமான விளக்கம்ஒருவருக்குத் தேவைப்பட்டால் அதற்கான தேட்டம் இருக்க வேண்டும்.  அவ்வாறுஒருவருக்குத் தேட்டம் ஏற்பட்டு, அடுத்து வரக் கூடிய மாதாந்திரக்கூட்டத்திற்குச் செல்வாரானால், அவருக்கு ஏற்பட்டசந்தேகத்திற்கு நிச்சயம் யார் மூலமாவது நிவர்த்தி கிடைத்து விடும்.


எங்கும் தவ்ஹீத் எதிலும் தவ்ஹீத்!


    தவ்ஹீதை விளங்கினால் அதுவாழ்க்கைக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். ஒருவரையயாருவர் சந்திக்கும் போது தவ்ஹீத் சம்பந்தமாகப் பேசிக்கொள்ளுங்கள்.  சொந்த வி­யங்களைப் பேசுவதாயினும் அதிலும் தவ்ஹீத் சம்பந்தப்பட்ட வி­யங்களைப் பறிமாறிக் கொள்ளுங்கள்.


தவ்ஹீதை எப்படி விளங்குவது?


        ஹக்கு என்பது என்ன? என அறிவதற்குத் தான் மூளையைத் தந்துள்ளது! இறை என்பது இன்னதுதான் என அறிந்து கொண்டால் அதுவே சரியான நிலையாகும்.  அந்நிலையில் இருந்து கொண்டே யாவற்றையும்விளங்கிக் கொள்ள வேண்டும். ஞானம் அனைத்துமார்க்கத்திற்கும் சொந்தமானது. ஞானமார்க்கத்தில் ஜாதி மத பாகுபாடு ஏதுமில்லை.


மிகவும் சிறப்பிற்குரிய மார்க்கம் இஸ்லாமே!


        பெளத்த மதம் சிறந்த மதம் என்பதாககூறப்படுகிறது.  காரணம் -  அதிற் கூறப்படும் வி
­ய ஞானங்கள் யாவும் அறிவுப் பூர்வமானதாகவும் தத்துவார்த்தம் நிறைந்தனவாகவும்இருக்கின்றன!

    உலக நடப்புகளைப் பற்றி பெளத்தமதம் கூறும் வி
­யங்கள் யுக்திற்கும் புத்திக்கும் பொருத்த முடையனவாக இருக்கின்றன வென்றெல்லாம்கூறுகின்றனர்.

        புத்த மதம் என்றாலே தத்துவ மதம்எனவும் கூறுகின்றனர்.  அதில் கூறப்படும் வி
­யங்கள் தத்துவமயமாகக் காட்சியளிக்கின்றன!

        ஆனால்
, எல்லா வகையிலும் மிகச் சிறப்பிற்குரிய மார்க்கமான இஸ்லாத்தைஇன்றைய காலகட்டத்தில் உள்ள சில ஆலிம்கள் மெளட்டீகமான பாதைக்கு இட்டுச் செல்வதுவேதனையான வி­யமாகும்!


இஸ்லாத்தில் குழப்பவாதிகள்!


    அடிப்படை ஞான வி
­யங்களைப் பேசி, விவாதித்து, சிந்தித்து, செயலாற்றுவதை விட்டு விட்டு - இவ்வளவுநவீனமான யுகத்தில் போட்டோ பிடிக்கக் கூடாது எனவும் வீV ஹராம் என்பதாகவும் பகிரங்கமாகக் கூறிவருவது இஸ்லாத்தையே இழிவுபடுத்துவதாகும்!இவ்வாறு கூறிவருவதால், இஸ்லாம் பழமை வாதமான மார்க்கம்என யாரும்  எளிதாக இஸ்லாத்தைக் கணித்துவிட முடியும்! அதற்கு ஏன் இந்த ஆலிம்கள் துணை போகின்றார்கள்?

    போட்டோ (நிழற்படம்) என்பதற்கும்விக்ரஹம் என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் - விளக்கம் தெரியாமல் - சில ஆலிம்கள்செய்யும் குழப்பம்
, மார்க்கத்தை பிறர் ஏளனம்செய்வதற்குக் காரணமாகி விடுவதை மறுப்பதற்கில்லை!


    இஸ்லாம் சிறந்த மார்க்கம்!சம்பூரணமான மார்க்கம்! விஞ்ஞான (science) அறிவுக்குப் பொருத்தமான மார்க்கம்!


    இன்னும் உயர்நிலைக்குப் போகவேண்டிய இஸ்லாமிய மார்க்கத்தை பழமைவாதிகளான சில ஆலிம்கள் தங்களின் தவறான அல்லது அறியாமையினால் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்!


    இஸ்லாத்திலும் பழமை வாதம்பெருகுவதற்குக் காரணம் தவ்ஹீதுடைய (ஏகத்துவஞான) விளக்கமின்மையே!


யார் யாரைத் திருத்துவது!

    ஓர் அரபிக் கல்லூரியில் ஓதிப்படித்த உடனேயே எமக்குத் தான் - எல்லாம் தெரியும் - இஸ்லாத்தையே நான் நன்கறிந்துவிட்டேன்
, எனக்குத் தான் இஸ்லாத்தில் முக்கிய ஸ்தானம் உண்டு என சிறுபிள்ளைத்தனமாக சிலர் நினைத்துக் கொண்டு,அவர்கள் சொல்வதே சரி - அதுவே மார்க்கம் எனும் பிடிவாதத்தில் தான்இருக்க முனைகிறார்களேயன்றி கொஞ்சமும் சிந்திக்க அவர்கள் விழைவதில்லை!

    முதலில் யாரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் - பின்னர் பிறரைத்திருத்திக் கொள்ளலாம்.  முதலில் தாம்திருந்துதலே தனக்குப் போதுமானதாகும்.


அல்லாஹ் என்பதன் தாற்பரியம்!

    அல்லாஹு அவ்வல்
, ஆகிர்...என திருமறையில் அல்லாஹ்வே கூறுகிறான்.  அதாவது இறை,அதுவே ஆரம்பமாகவும் முடிவாகவும் இருக்கின்றது!

    ஆரம்பம் என்றால் - ஆரம்பமே இல்லாதஆரம்ப நிலை!

    முடிவு என்றால் - முடிவே இல்லாதமுடிவு! ‘அல்லாஹ்
என்பது ஆழமான - பரிபூரணமான எங்கும் நிறைந்த நிலை! இதுவே அல்லாஹ் என்பதாகும்!

 ஏகத்துவ ஞானத்தை இன்னவரிடத்தில்தான் கூறவேண்டும் என்பதில்லை.  அனைவரிடமும்கூறலாம்
;  கூறவேண்டும். சமயஒற்றுமை உண்டாக ஞான மார்க்கமே சிறந்த வழி.

வஹ்ஹாபிகளின் நயவஞ்சக நிலை!

    இஸ்லாத்தைப் பிளவுபடுத்தவஹ்ஹாபிகள் ஆயிரமாயிரம் கூட்டங்கள் போட்டு கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள்தான் உண்மையில் இஸ்லாத்தின் எதிரிகள்!காபிர்கள்! ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை எந்த அளவிற்கு குறைத்தும் பழித்தும் கூறத் தலைப்பட்டு விட்டனர்!

    நாயகம் கறீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களை
, ஒரு தபால்காரர் (நஊதுபில்லாஹ்) எனக் கூறக் கூடிய அளவிற்கு வளர்த்து விட்டனர்! பரிசுத்த வேதத்தை அளித்த அருமை நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இந்த மரியாதை தரக்கூடியவர்களுக்கு, பரிசுத்த வேதம் ஒரு சாதாரண தபால் ( letter) போன்று தான் தெரியும்!

    பரிசுத்த நாயகம் இரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே சாதாரணமானவர் என்று கூறிவிட்டதற்குப் பின்பு -அவர்கள் கொடுத்த ‘லெட்டர்
போன்ற குர்ஆனும் தேவையில்லை எனவும் காலப் போக்கில் அவர்கள் கூறத் துணிந்துவிடுவர்!

        இந்த நயவஞ்ச வேவுகாரர் களானவஹ்ஹாபியரை ஒழிக்க வேண்டும்.

      எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வைமுழுமையாக - பரிபூரணமாக அறிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறி முடிக்கின்றோம்!

(துஆ) பிரார்த்தனை

  மேலும்
, உங்கள் அனைவருக்கும் சம்பூரணமாய் இறையை அறியக்கூடிய நற்பேறையும்ஹக்கில் ஹக்காய் இரண்டறக் கலந்த நிலையை நீங்கள் அனைவரும் உற்றுய்ய வேண்டும் எனவும்உங்கள் தேவைகள் யாவும் நிறைவேறிட பரிபூரண ஹக்கான பரிபூரணத்திடமே விண்ணப்பித்துமுடிக்கின்றோம்.  வஸ்ஸலாம்!

(சங்கைமிகு சற்குருநாதர் அவர்கள்அருளிய ஆன்மீகச் சொற்பொழிவின் முக்கிய சாராம்சத்தையே இங்கு தொகுத்து வழங்கிஉள்ளோம்)