Jamia Yaseen Arabic CollegeYoutube channel:Dubai emsabai blogs:emsabai.blogspot.comChennai emsabai blogs:emschennai.blogspot.comKuwait emsabai blogs:emskuwait.blogspot.com |
மகளிர் பக்கம் நெடுந்தொடர் ....
நல்ல பெண்மணி
( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு- எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா)
பாதுகாப்பு
நம் நாட்டின் நகரங்களில் பெண்களைநகைகளுக்காகக் கொல்வதும், பெண்களின் கற்பைக் களவாடி விட்டு அவர்களைக் கொல்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. பெண்கள் வெளியில் செல்லும் போது,தங்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்துக்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள,பல்வேறு வழிமுறைகள் இப்பொழுது கூறப்படுகின்றன.
பெண்கள் வெளியே செல்லும் போது, கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது பிரஞ்சு அரசு. பெண்கள் கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதுஐரோப்பிய நாடு ஒன்று. பெண்கள், தம் பைகளில் மிளகாய்ப் பொடியை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது இலங்கைக் காவல்துறை. இப்பொழுது ஒரு கண்ணாடி வந்திருக்கிறது.
அதன் “பிரேமி”-ல் கண்ணீர்ப் புகை மருந்திருக்கிறது. எவனாவது தவறான நோக்கத்துடன் அணுகுவானாயின் “பிரேமை”அழுத்த வேண்டும். அதிலிந்து புகை கிளம்பி எதிரேநிற்பவனின் கண்களைத் தற்காலிகமாக குருடாக்கி விடும். இப்பொழுது அமெரிக்காவில் ஒரு பொம்மை வந்திருக்கிறது. தனியாக, கார் ஓட்டிச் செல்லும்பெண்கள் அதைத் தம் அருகில் வைத்துக் கொண்டிருந்தால், ஓர் ஆண் அமர்ந்திருப்பதுபோலவே இருக்கும்.
இவையயல்லாம் இப்பொழுது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கம் நோய்க்குச் சரியானபரிகாரங்களாக ஆக மாட்டா. எனவே நீங்கள் வெளியேவரும்போது அடக்கமாக உடை அணிந்து கெண்டு வாருங்கள்! உங்களின் மானத்தை நீங்கள் தாம் பேணிக்கொள்ள வேண்டும். உங்களின் கற்பை நீங்கள் தாம்காத்துக் கொள்ள வேண்டும்.
“உயிர் போன பிறகுகூட திரும்பி வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கற்பு போன பிறகு திரும்பி வந்ததாய்க் கேள்விப்பட்டதில்லை”என்று ஓர் அறிஞர் கூறினார்.
ஒரு பெண்ணின் கற்புடன் ஒரு குடும்பத்தின கெளரவமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு பெண் தன் கற்பை இழந்து விட்டால், அவளுடன் சம்பந்தப்பட்டஅத்தனை பேருக்கும் தலைக்குனிவு ஏற்பட்டு விடுகிறது. அவளுடன் சேர்ந்து அந்த இழுக்கு இறந்து விடுவதில்லை.
சில தலைமுறை வரைக்கும் கூட அந்த இழுக்கு இருந்துகொண்டிருக்கிறது. இதை யெல்லாம் எண்ணிப் பார்த்து நீங்கள் தாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
நல்ல அன்னை
நல்ல பெண்ணாக நீங்கள் இருப்பதுடன், நீங்கள் நல்ல அன்னையாகவும் இருக்கவேண்டும். திடகாத்திரமான ஒரு குழந்தை உங்களுக்குச் சொத்தாகும். திடகாத்திரமற்ற குழந்தை உங்களுக்குச் சுமையாகும். எனவே, கரு தங்கி விட்டது என்பதைஉணர்ந்ததும், உடனே நீங்கள் ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,சோதனை செய்து.
அதுமுதல் பக்குவமாக இருக்க வேண்டும். தீட்டு நின்ற ஆறாவது வாரத்திற்குள் மருத்துவரின்ஆலோசனையைப் பெற்று விடுவது அவசியமாகும். அவர்,தாய்க்கும், தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும்நலம் பயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.
கர்ப்ப காலத்தில் நீங்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் எட்டு மணி நேரமும், பகலில் கொஞ்சநேரமும் உறங்க வேண்டும். மனத்தில் வருத்தமோ,பதற்றமோ இல்லாமல் மனநிம்மதியுடனும், மனமகிழ்ச்சியுடனும்இருக்க வேண்டும்.
மஞ்சள் காமாலை, சின்னம்மை, இன்புளுயன்ஸாபோன்ற நோய் உள்ளவர்களை அணுகக் கூடாது. ஏனெனில்,இந்நோய்கள் தாக்குபவரின் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் உடம்பை இறுக்கும் விதம் உடை உடுத்தக் கூடாது. குறிப்பாக, மார்பு வயிறுஆகியவை அழுத்தப் படக் கூடாது. கர்ப்ப காலத்தில் சில தின் பொருள்கள் மீது ஆசை ஏற்படும். அவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அவற்றை அதிகம் சாப்பிட்டு விடக் கூடாது.
அவற்றை அதிகம் சாப்பிட்டால் தாயின் உடலும் பருத்துவிடும். தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின்உடலும் பருத்து விடும். குழந்தை அதிகம் பருத்துவிட்டால் பிரசவம் சிரமப்படும். அதே சமயம் உடல் பருத்து விடும் என்பதற்காகத் தாய்சத்தான உணவுகளைச் சாப்பிடாமலும் இருக்கக் கூடாது.
ஏனெனில் தாய் உண்ணும் உணவு தாய்க்கு மட்டும் பயன்படுவதில்லை. தாய் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பயன்படும். கர்ப்ப காலத்தில் தாய் சில உணவுகளைச் சாப்பிட்டால், அது வயிற்றில்வளரும் குழந்தைக்கும் நலம் பயக்கும் என்று கூறுவர். குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாய் இருக்கும் என்று சொல்லுவர். தாய், குழந்தை வயிற்றில் நல்லமுறையில் வளரவும். நல்ல முறையில் பிறக்கவும் ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்ததும் அதன் நாக்கில் நல்லவர்களைக் கொண்டு தேனையோ பேரீச்சம்பழத்தை நைத்தோ தொட்டு வைக்கச் செய்ய வேண்டும். அலி (ரலி) அவர்கள் பிறந்ததும் அவர்கள் தம் கண்களைத் திறக்காதிருந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தபிறகு தான் அவர்கள் தம் கண்களைத் திறந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் உலகில் பார்த்த முதல் முகம் அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் முகம்தான்.
பேரீத்தம் பழத்தைத் தம் வாயில் வைத்து நைத்து, அதனை அலீ(ரலி) அவர்களின் வாயில் வைத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் உலகில் உண்ட முதல் உணவு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வாய் அமுதம் தான்.
- தொடரும்
All rights reserved.