ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  சக்கரை -- அக்கறை


சக்கரை -- அக்கறை


சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவேண்டியவை :


காப்பி, அல்லது தேநீர்,அல்லது பால், சர்க்கரை இல்லாமல் சாப்பிட வேண்டும்.


தவிர்க்க வேண்டியவை : சர்க்கரை, குளுகோஸ்,வெல்லம், தேன், இனிப்புப்பண்டங்கள், அல்வா, பர்பி, ஐஸ்கிரீம், புட்டு, ஜாம்,ஜெல்லி, கேக், கல்கண்டு,முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, வேர்க்கடலை, உலர்ந்த பழங்கள், எண்ணெய்யில்பொரித்தவை, பாலாடைக்கட்டி, வனஸ்பதி,டால்டா, கிழங்கு வகைகள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, தேங்காய்எண்ணெய், சாக்கலேட், புகையிலை, மதுபானங்கள்.


சேர்த்துக் கொள்ளக் கூடியவை: எலுமிச்சை, வெண்ணெய்எடுத்த மோர், தக்காளி ஜுஸ், சோடா,வெஜிடபுள் சாலட், மிளகு, கடுகு, ரசம், பூண்டு, வடிகட்டிய காய்கறி சூப், வெந்தயம், வெள்ளரிப்பிஞ்சு.


நார்சத்து மிக்க உணவுகள்: முட்டைக்கோஸ், சோளப்பொரி,கார்ன்ப்ளேக்ஸ், கேழ்வரகு, பச்சை காய்கறிகள், பயறு வகைகள், மக்காச்சோளம், வாழைத்தண்டு, முருங்கைக்காய்,பாகற்காய், கீரை வகைகள்.


சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்: உப்பைக்குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள்: உப்பு, கருவாடு,ஊறுகாய், அப்பளம் மற்றும் உப்பு அதிகமாக உள்ள உணவுவகைகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

 

கொழுப்புச் சத்து அதிகமாகஉள்ளவர்கள் : எண்ணெய்யில் பொரித்த உணவுகள், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, வேர்க்கடலை, கொட்டைப்பருப்பு,நெய், பாலாடைக்கட்டி, வனஸ்பதி,டால்டா, தேங்காய், கொழுப்புஅதிகமுள்ள இறைச்சி வகைகள், எலும்பு சூப் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.


நல்வழி முறைகள்


வருமுன் காத்தல்


1. உயரத்திற்குத் தகுந்த எடையைவிட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


2. சர்க்கரை இனிப்பு வகைகளைக் குறைத்துக் கொள்வதும், நார்சத்துமிகுந்த உணவை உட்கொள்வதும் நல்ல உணவுப் பழக்கமாகும்.


3.  தினமும் ஒழுக்கமாக ஐசோடோனிக்ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது நல்லது.


4.  புகை பிடிப்பதையும், மதுபானம்அருந்துவதையும் தவிர்க்கவும்.


சர்க்கரை நோயின் பின் விளைவுகளைதடுத்தல்:


1.  உங்களுக்கென குறிக்கப்பட்டுள்ள உணவை சரியான  நேரத்தில் சரியான அளவில்சாப்பிட வேண்டும்.


2.  ஒரே வேளையில் குறிப்பிட்ட அளவுக்கதிகமாக சாப்பிடுவதோ, ஆகாரம் சாப்பிடாமல்இருப்பதோ நல்லதல்ல.


3.  தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வது நன்மைதரும்.


4.  தினமும் கால்பாதங்களை இருமுறை கழுவி நன்கு துடைத்துதூய்மையாகவும் ஈரமில்லாமலும் வைத்திருக்க வேண்டும்.


5.  வெறுங்காலில் நடக்கக் கூடாது.


6.  பிரச்சனை ஏதும் ஏற்பட்டால், பிரச்சனைஏற்பட்ட நேரத்தையும், கடைசியாக உணவருந்திய நேரத்தையும் குறித்துவைத்து மருத்துவரை அணுகவும்.


7.  மாதந்தோறும் இரத்தத்தில்சர்க்கரை அளவை பரிசோதிப்பபது, வருடந்தோறும் கண் பரிசோதனை செய்வதும் நல்லது.