ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  வஹாபிகள் சஹாபிய வேடங்களில்...


தொடர்...                                                                                                    தொடர் எண்-24

வஹாபிகள் சஹாபிய வேடங்களில்...


நாகூர் பாதுஷா நாயகம் (றலி) அவர்களை நோக்கி, குணங்குடிமஸ்தான் ஸாஹிபு (றஹ்) அவர்கள்,

திக்குத் திகந்தமுங் கொண்டாடியே வந்து

தீன் கூறி நிற்பர் கோடி!

சிங்கா சனாதிபர்கள் நதரேந்தியே வந்து

ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்க                                     ளொலிமார்கள்

அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்

அணைந்தருகு நிற்பர் கோடி!

மக்க நகராளு முஹம்மது ரஸூல்தந்த

மன்னரே என்பர் கோடி!

வசனித்து நிற்கவே கொலுவீற்றி                                       ருக்குமும்

மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியேநிற்கின்ற

தவராஜ செம்மேருவே!

தயை வைத்தெனையாள் சற்குணங்                                 குடிகொண்ட

ஷாஹுல் ஹமீதரசரே!

என்று வேண்டுதல் செய்திருக்கிறார்கள்.


ஹள்ரத் அபுல் ஹஸன் அலி ஷாதுலீ (றலி) அவர்களை அழைத்து நோக்கி, காயல்கட்டினம்ய­ய்கு நூஹ் ஸாஹிபுஅல்லாமா (றலி) அவர்கள்(யா ஸய்யிதீ ஸய்யி தஸ்ஸா தாத்தி யாஸனதீ...)


என்றுகூறியிருக்கும் முனாஜாத்தில் “எங்கள் தலைவரவர்களே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரானவர்களே!எனது ஆதாரப் பொருளே! எனக்கும் எனது சகோதரருக்கும் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித்தந்திட நீங்கள் உதவியாக இருங்கள்.


என்னைகைவிட்டுவிடாதீர்கள்! எனது நாட்ட தேட்டம் நிறைவேறு மட்டும்  எனது உதவியாளரே, நீங்கள் என்னைக் கைப்பிடித்து உதவ வேண்டும்.  அபுல் ஹஸன் (ஷாதுலீ) அவர்களே!” என்பதாகக்கூறியுள்ளார்கள்.


ஸுல்தானுல்மஷாயிகு, புர்ஹானுல் ஹகாஇகு, அல்குத்பு நிஜாமுத்தீன் அவுலியா (றலி) அவர்களை நோக்கி, “எல்லையில்லாப் பாவக்கடலில் ஆழ்ந்து நிர்கதியாக நிற்கும் இந்த ஏழையைத்தாங்கள் கைகொடுத்து உதவிக் காப்பாற்றுங்கள்! தங்களுடைய சீர் பாதங்களில்என்னுயிரைத் தத்தஞ் செய்ய என் தலையைத் தூக்கி விடுங்கள்!” என்பதாக மெளலானா மெளலவியஸய்யிது முஹம்மது முபாரக் அலவிய்யில் கிர்மானீ (றஹ்) அவர்கள் உதவிதேடியுள்ளார்கள்.


அஹ்லுபைத்துகளாகியநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய குடும்பத்தவர்கள் மீது ஆதரவு வைத்தவர்களாக, ஷைகு ஸஃதீ Uறாஸீ (றஹ்) அவர்கள், இறைவா! பாத்திமா நாயகி (றலி) உடைய பிச்சளங்களின்பொருட்டால் எனது முடிவை ஈமான் ஸலாமத்துடன் ஆக்கி வைப்பாயாக! என்றும்,


நீ எனதுபிரார்த்தனையை ஏற்றாலும் சரி, நிராகரித்தாலும்சரி, நான் நாயகம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களது குடும்பத்தார்கள் உடைய முந்தானையைப்பற்றிப் பிடித்தவனாக இருக்கின்றேன்” என்பதாக உரைத்துள்ளார்கள்.


சுருதி, யுக்தி ஆதாரங்களை ஓரளவு மேலேகாண்பித்துள்ளோம். இவ்வாறு மாபெரும்மகாத்மாக்களும், மகான்களும், ­ரஹைப்பேணி நடந்த நாதாக்களும், தவுஹீதைப் பற்றிப் பிடித்தமுவஹ்ஹிதீன்களும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களையும், கெளதுல் அஃளம் (றலி) அவர்களையும், நாகூர் ஷாஹுல் ஹமீது ஆண்டகை (றலி) அவர்களையும் மற்றும் குத்புமார்களையும்வொலிமார்களையும் அழைத்து, கூப்பிட்டு அன்னவர்களிடம் இரட்சிப்பு - உதவி வஸீலா தேடி இருக்கின்றார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.


மேற்சொன்னமகானுபாவர்களை விட  வஸீலா தேடலாகாது - உதவி,இரட்சிப்புக் கேட்கலாகாது - யறஸூலல்லாஹ், யாமுஹிய்யுத்தீன், யா கெளது என்றெல்லாம் சொல்லக்கூடாது என்றுகூறி அலையும் கூட்டத்தினர் எந்த வகையில் விசே­மானவர்கள் என்பதுதான் விளங்கவில்லை.


எனவே, நிச்சயமாக அன்பியாக்கள், அவுலியாக்கள் பால் இரட்சிப்பு, உதவி, உபகாரம் வஸீலா எக்காலமும் தேடலாம் என்பதே ஸுன்னத் - வல் ஜமாஅத்உலமாக்களின் ஏகோபித்த தீர்மானமாகும். இதைமறுப்பவன் முஃத்தஸிலா, வஹ்ஹாபி, காதியானீகூட்டங்களைச் சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. மேலும் இவன் சத்தியத்திற்கு மாறுபாடாக நடந்தவனுமாவான்.

( தொடரும்)