ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  நபி குடும்பத்தார் நற்பண்பு

நபி குடும்பத்தார்  நற்பண்பு


சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் (ரலி) அவர்கள் ஒரு நாள் மதீனாப் பள்ளியில் நுழைந்து தங்கள் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுத இடத்தில் தொழுது விட்டுத் திரும்பினார்கள்.  ஆங்கே ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த வெளியூர்க்காரர்ஒருவர் இவர்களிடம் வந்து, என் பணப்பையைக் கொடும்! என்று கேட்டார்! பணப்பையா? எனக்கு ஒன்றும் தெரியாதே! நான் பார்க்கவில்லையே! என்ன வி­யம் என தெளிவாகக் கூறுங்கள் என்று கேட்டார்கள்.


    அவரோ என்ன பாசாங்கு பண்ணுகிறீர்? நான் எவ்வளவு சிரமப்பட்டு அந்த ஆயிரம்பொற்காசுகளை சேகரித்து வந்தேன்! அவற்றை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டீரே!உம்மைத்தவிர வேறுயாரும் இங்கு இல்லை. நீர்தான் அதனை எடுத்திருக்க வேண்டும் என்று அதட்டினார்.


    இமாம் அவர்கள்அவரின் பரிதாப நிலைகண்டு  மனமிரங்கி  தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று ஒருபையைக்கொடுத்து இதனை எண்ணிப்பாருங்கள்! எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள். வெளியூர்க்காரர் எண்ணிப்பார்த்தார். அதில் இரண்டாயிரம் பொற்காசுகள் இருந்தன. அவருக்கு  ஒன்றும்விளங்கவில்லை.  என்ன இது? என வியப்புடன் வினவினார்.  பரவாயில்லை எடுத்துச் செல்லுங்கள்! என்று அவரைஅனுப்பி வைத்து தங்கள் பணிகளில் ஈடுபட்டார்கள்.


    சற்றுநேரத்தில் இமாம் அவர்களின் வீட்டுக்கதவைத் தட்டும் சப்தம் கேட்டு திறந்துபார்க்க.  அவர் ஓடோடி வந்து இமாம்அவர்களின் காலடியில் விழுந்து கண்ணீரோடு மன்னியுங்கள்! மன்னியுங்கள்!! என வேண்டி நின்றார்.  என்ன வி­யம் என இமாம் அவர்கள் கேட்ட போது.  என் பணப்பை கிடைத்து விட்டது! நானோ தங்களின்மாண்பு அறியாமல் தங்கள் மீது பழிசுமத்தி விட்டேன் என நாவு தழுதழுக்கக் கூறிதாங்கள் கொடுத்த பணப்பை இதோ! பெற்றுக் கொள்ளுங்கள்! என்றார்.


      இமாம் அவர்களோஉங்கள் பணம்  கிடைத்ததற்கு  மிக்க மகிழ்ச்சி! இதையும் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள்!  என்று அன்புடன் கூறிஅவரை   அனுப்பிவைத்தார்கள்.