ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  அனுமதித்த நான்கு


அனுமதித்த நான்கு
முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களைமணக்கலாம்

காஷ்மீர் மகளிர் அமைப்பு அறிக்கை. 


        ‘முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தஒருவர், இரண்டுபெண்கள் முதல் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம்’ என, காஷ்மீரின் பெண்கள் பிரிவினைவாத அமைப்பான துக்தரன்-இ-மிலாத் தெரிவித்துள்ளது.


        முஸ்லிம்களில் தியோபந்த் (தேவ்பந்த்)  பிரிவைச் சேர்ந்த மத குரு, கடந்த வாரம்உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.


        அதில், ‘முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்யமதச் சட்டம் அனுமதிக்கிறது.  ஆனால்இந்திய பாரம்பர்யம் அதை அனுமதிப்பதில்லை.


அமைப்பு எதிர்ப்பு


        இந்திய கலாச்சாரத்தில், இரண்டு மனைவிகளையும் நல்ல முறையில் நடத்துவது என்பதை நடக்காத காரியம்’ எனத்  தெரிவித்திருந்தார். அதாவது, பலதார திருமணத்தைஎதிர்க்கும் வகையில் உத்தரவு அமைந்திருந்தது. இதை, காஷ்மீரில் செயல்படும் பெண்கள் பிரிவினைவாத அமைப்பான,துக்தரன்-இ-மிலாத் நிராகரித்துள்ளது.  இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஆசியா ஆன்ட்ராபிபத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி விபரம் :


நான்கு மனைவிகள்


    முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர்  நான்கு பெண்களை திருமணம் செய்ய, மத விதிகள்அனுமதிக்கின்றன.  முஸ்லிம் மதத்தின் இந்தக்கொள்கைககளில், எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை.  தியோபந்த் பிரிவைச் சேர்ந்த முப்தி பிறப்பித்துள்ளஉத்தரவு, இஸ்லாம் மதத்திற்கு எதிரானது.


    முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில்நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள தடையில்லை.


    காஷ்மீர் மாநிலத்தில், 30 ஆயிரம் விதவைகள் உள்ளனர்.  அத்துடன் தாய், தந்தையரை இழந்தஏராளமான குழந்தைகளும் உள்ளன.  மாநிலத்தில்,21 ஆண்டுகளாக நிலவும் குழப்பமான நிலைமையே இதற்கு காரணம்.


    அதனால், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள்ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்துக் கொண்டால், விதவையை திருமணம்செய்து கொண்டால், அது மிகவும் வரவேற்கத்தக்கது.  அதை இஸ்லாம் மதம் அனுமதிக்கும்.


இரண்டாம் திருமணம்


    தியோபந்த மத குரு பிறப்பித்த உத்தரவை நாங்கள் நிராகரிக்கிறோம். குரானில் உள்ளவற்றை வேறு யாராலும் மாற்ற முடியாது. எங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பலர், ஏற்கனவே திருமணமாகிமனைவியுடன் உள்ள நபர்களை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

செய்தி: தினமலர்  18.4. 2012