ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  May 2012   »  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

 

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்மாநில பொதுச் செயலாளர்        இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழுக்கூட்டம் 2012 ஏப்ரல் 14-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு விழுப்புரம்திருச்சி பிராதன வீதியில் உள்ள சோலை மஹாலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் தலைமையில் நடை பெற்றபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

ஹஜ் விமான கட்டண சலுகை நீடிக்க வேண்டும்

        புனித ஹஜ்பயணம் செல்வோருக்கு இந்திய அரசு மானியம் வழங்கி வருவதாகவும், அதை நிறுத்த வேண்டும் என சில முஸ்லிம்அமைப்புக்கள் (?) கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதனை அரசு பரிசீலிக்கும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் தெரிவித்து இருப்பதாக வந்துள்ள செய்தி முஸ்லிம் சமுதாயத்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புனிதஹஜ்ஜூக்கு மத்திய அரசுவழங்குவது மானியம் அல்ல. புனித ஹஜ் பயணம் செல்வதற்கு கடந்தகாலத்தில் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது அது நிறுத்தப்பட்டு விமானப்பயணம் மட்டுமே இயக்கப்பட்டது.

    விமானப்பயணத்திற்கு கட்டணம் அதிகம்.  எனவே
, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தபோது, ஹஜ் பயணத்திற்கு விமானகட்டண சலுகை தரப்படும் என மத்திய அரசு அறிவித்தது.  அதுதான் இன்று வரையிலும்தொடர்ந்துகொண்டிருக்கிறது.

    விமானநிறுவனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.  சுமார் 2 லட்சம் பேர் பயணிக்கும் போது அதற்குகட்டணச் சலுகை அறிவிப்பது குறை காண முடியாத ஒன்று. எனவே, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு மத்திய அரசுவழங்கும் கட்டணச் சலுகையை நிறுத்தக் கோருவதோ, அதை நிறுத்துவதோஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

    எனவே  ஹஜ் புனிதப் பயணத்திற்கான விமான பயணச் சலுகைதொடர்ந்து நீடிக்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கூட்டம் கேட்டுக் கொள்வதோடு
, மானியம் என்ற பெயரால் இதை நிறுத்தச்செல்வோரை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

 

திருமண கட்டாய பதிவு


    திருமண பதிவை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவைஒப்புதல் வழங்கியுள்ளது.

            பிறப்பு -இறப்பு பதிவுச் செய்யும் அலுவலகங்களில் திருமணங்களையும் பதிவு செய்ய இந்த சட்டமசோதா வகை செய்துள்ளது.
        

        பள்ளிவாசல்திருமண பதிவேடுகளில் பதிவு செய்யப் படும் திருமணப் பதிவை அப்படியே ஏற்றுக் கொண்டுபதிவு செய்ய வேண்டும்.  இச்சட்டத்தில்‘மதம்’குறிப்பிடப்படாது என்ற நிலையை மாற்றி மதம் குறிப்பிடப்பட விரும்பினால் அதைஏற்று மதம் குறிப்பிடுவதற்கு இச்சட்டத்தில் வழி வகை செய்ய வேண்டும் என மத்திய அரசைஇக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு


    தமிழ்நாட்டில்வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகளைப்பெற இந்தக் கணக்கெடுப்பு அவசியப்படுகிறது. இஸ்லாத்தில் சாதியப் பிரிவுகள் இல்லை என்றாலும் அரசு பிற்பட்டோர்பட்டியலில் முஸ்லிம்களை லெப்பை (தமிழ்
, உருது பேசக்கூடிய ராவுத்தர் மரைக்காயர்) தக்னீ, தூதேகுலா,மாப்பிள்ளை, அன்சர், ஷேக், சையத் என ஏழு வகைப்படுத்தியுள்ளதால் இதில் முதல் நான்கும் மத்திய அரசு ஓ.பி.சி பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    எனவேஇடஒதுக்கீட்டின் சலுகையை முழுமையாகப் பெற அந்த நான்கில் ஒன்றை குறிப்பிட்டுச்சொல்லுமாறு தமிழக முஸ்லிம் சமுதாயத்தை கேட்டுக் கொள்வேதாடு
, இந்த கணக்கெடுப்பில் எவர் பெயரும் விட்டுவிடாமலும், முஸ்லிம் பெயர்கள் முழுமையாக எழுத்துப் பிழைஇல்லாமல் கவனம் செலுத்தவும் அனைத்து மஹல்லா ஜமாஅத்தினரையும் இக்கூட்டம்வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

பள்ளிவாசல்
, தர்கா, மதரஸா கபரஸ்தான்களுக்கு பட்டா    இதுவரை பட்டாவழங்கப்படாத பள்ளிவாசல்கள்
, தர்கா,கபரஸ்தான்கள், மதரஸாக்களுக்கு பட்டா வழங்கவேண்டுமென ஆடுதுறையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தமிழக அரசின், சென்னை முதன்மைச் செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஜி2/667/2012 நாள் -18.01.2012 சுற்றறிக்கை அனுப்பி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    தமிழகம்முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களும் பயன்படுத்தப்படும் வகையில் அந்தசுற்றறிக்கையை  அரசு ஆணையாக வெளியிடுமாறுதமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.