ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Mar 2012   » அருளும் - இருளும்


அருளும் - இருளும்

  
திருமறைப் பக்கம் - அபூ ரிப்தா -

 

விசுவாசிகளே! பயத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள்  ஆகியவற்றின் நஷ்டத்தாலும் நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம்.   

                               (அல்குர்ஆன்2.2.155)

 

 

தமிழ்நாடு மின்வெட்டால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  மின்சாரம் இல்லாததால் தொழில்கள் பாதிக்கப்பட்டுவருமானம் குறைந்து போனது.

இரவு நேர மின்தடையால் குழந்தைகளும் - முதியவர்களும்  - நோயாளிகளும்-   படிக்கும் மாணவர்களும் - கர்ப்பிணிப் பெண்களும் தாங்க முடியாத தொல்லைகளுக்குள்ளாக, மற்றவர்களும் சிரமத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

கண்ணுக் கெட்டியதூரம் இதற்கொரு தீர்வும் தெரியவில்லை.  ஆட்சி செய்பவர்கள் எதை எதையயல்லாம் நம்பி மக்களுக்கு வாக்களித்தார்களோ அவையயல்லாம் மேலும் மின் உற்பத்தியை இழந்து நிற்கின்றன.

வற்றுக் கெல்லாம்என்ன காரணம்? அல்லாஹ் திருமறையின் இந்த வசனத்தின் தொடர்ச்சி வாக்கியத்தில் வநக்ஸின் மினல் அம்வாலி பொருள்களில் இழப்பை ஏற்படுத்திச் சோதிப்போம்என்று கூறுகிறான்.

அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

மின்திட்டங்கள் கை கொடுக்கவில்லை.  காற்றாலையை நம்ப முடியவில்லை.  புதிய மின் திட்டங்களுக்கு பேராட்டக்காரர்கள் வழி மறிக்கிறார்கள்.  ஆட்சி செய்பவர்கள் மனம் அசைந்து கொடுக்கவில்லை.  ஆக, மக்கள் இருளில்  கிடந்து அவதிப்படவேண்டியது இறைவனின் நாட்டமாகவுள்ளது தெரிகிறது.

ஒரு சிரமம் வந்தால் அது எதனால் வந்தது என்பதை பரிசீலிக்க வேண்டியது மனிதனின் கடமை.


ங்கு பார்த்தாலும் கொலை - கொள்ளை - ஆட்சியாளர்களிடம் வாய்மை இல்லை. மக்களிடம் நேர்மை இல்லை. இளைஞர்களிடம் பாவத்தை நோக்கி விரையும் மனப்போக்கு.

இத்தகைய பிரஜைகளுக்கு சுகமான வாழ்வு கொடுக்கத்தான் வேண்டுமா?

சற்று அவர்களை சிந்திக்கவைப்போம்.

றைவனின் இந்தச்சோதனை தான் தமிழகத்தில் அமலாகிக் கொண்டுள்ளது என்பதை மக்கள் சிந்தித்து தங்களின் நடைமுறைகளைமாற்றிக் கொள்ளவேண்டும்.  இருள் வழியை விட்டு அருள் வழியில் ஆர்வத்தோடு நடக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்கிறது திருமறை. மேலோட்டமாக யார் ஆட்சி செய்தாலும் உள்ரங்கத்தில் இறைவனின் ஆட்சிதான் உலகம் முழுக்க நடந்து வருகிறது.  எனவே இருள் நீங்க வேண்டுமென்றால் இறைவனின் அருள்வரவேண்டும்.