Jamia Yaseen Arabic CollegeYoutube channel:Dubai emsabai blogs:emsabai.blogspot.comChennai emsabai blogs:emschennai.blogspot.comKuwait emsabai blogs:emskuwait.blogspot.com |
இவ்விபரம், ஹள்ரத் ஷாஹ்அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவீ (றஹ்) அவர்கள், ‘புஸ்த்தானுல்- முஹத்திதீனில்’ குறிப்பிட்டுள்ளார்கள் என, ‘அன்வாருல் இந்திபாஹ்- பீ - ஹல்லி நிதாயி - யா - றஸூலல்லாஹ்’ என்ற நூலின் 29 வது பக்கத்தில், ஹஜ்ரத் முப்தி ஷாஹ் அஹ்மதுரிளா கான் காதிரீ பரேலீ (றஹ்) அவர்கள் வரைந்துள்ளார்கள்.
மகத்துவமிக்க நாதாக்களானஅவுலியாக்கள், தவுஹீதின் காவலர்களான முத்தகீன்கள்,வரஇய்யீன்கள் எல்லாம் ‘வஸீலாவை’ எவ்வண்ணம் பற்றிப் பிடித்துள்ளார்கள்என்பதைப் பின் வரும் வியத்தைப் படித்து உணர்ச்சி பெறுவோமாக!
எம்பெருமானார், ஃபீஉல் முத்னிபீன்,றஹ்மத்துன் லில்ஆலமீன், நபிகள் திலகம்,யஸய்யிதுனா முஹம்மது றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஹள்ரத்கெளதுல் அஃளம் (றலி) அழைத்துக் கூப்பிட்டு....
“ஆண்டவனுடைய தோழரான அருமை ஹபீபுல்லா அவர்களே! எனது கையைப் பிடித்துக்காப்பாற்றி அருள்வீர்களாக,எனது கையைப் பிடித்துக் காப்பாற்றி அருள்வீர்களக, எனது இயலாத்தன்மைக்குத் தங்களையன்றி கார்மானம் எனக்கு யாரும் இல்லையே!” என்று கூறி பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வஸீலா தேடியுள்ளார்கள்.
சிருஷ்டிகளிலெல்லாம் மாபெரும் சிரேஷ்டமானவர்களே!பேராபத்து, இடர்கள்வந்துற்றபோது அபயந் தேடி ஒதுங்குவதற்கு தங்களையன்றி எனக்கு வேறு யாரும் இல்லையே!” என்றுஆ´க்கே றஸூல்,இமாம் முஹம்மது பூஸரீ (றஹ்) அவர்கள் ‘கஸீதத்துல் புர்தாவில்’ உதவி தேடியுள்ளார்கள்.
“என்னை இரட்சித்துக் காப்பாற்றக்கூடிய நாயகமே! என்னுடைய நாவிலுண்டானமுடிச்சின் வருத்தங்களை என்னை விட்டும் அவிழ்த்துவிடுங்கள்!
பறுலான அமல்களின் என்னுடைய கழுத்தில் எறிக் கொண்டிருக்கும் கடன்களைஎன் கழுத்தை விட்டும் நீக்குங்கள்!
மேலும் துன்பம் துயரங்கள் என்னை வந்து மோதும் போது அவற்றைத் தட்டிவிலக்க தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
எனக்காக மன்றாடிக் கரை சேர்க்கும் கருணை வள்ளலே! நான் பற்றிப் பிடிக்கும் ஆதரவுப் பொருளே!தங்களைத் தரிசிப்பதுதான் என்னுடைய நாட்டமும், தேட்டமும். இது மட்டுமா? இறுதித் தீர்ப்புநாளன்று மஹ்ர் மைதானத்தில் தங்களிடம் நான் கேட்க வேண்டிய ஹாஜாத்துக்கள் எத்தனை எத்தனையோ உண்டு!”என்பதாக மாதிஹுர் ரஸூல்,ஷைகு ஸதக்கத்துல்லாஹில் காதிரிய்யில் காஹிரிய்யி (றலி) அவர்கள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரட்சிப்பு வஸீலா தேடிய சான்று ‘வித்ரிய்யா கஸீதாவில்’காணப்படுகின்றது.
சிருஷ்டிகளிளெல்லாம் சிரேஷ்டமானவர்களே!
ஆதரவு வைப்பதற்கு மேலாம்பரமானவர்களே!
அல்லாஹ்தஆலா தங்கள் மீது கிருபை செய்தருள்வானாக!
மேலாம்பரமான கொடையளிக்கும் கொடை வள்ளலே!
கஷ்டங்களை எல்லாம் விலக்கி வைத்து உதவி செய்வதற்கு உத்தமமானவர்களே!
“மழை பொழியும் கார்முகிலின் கொடையை விட தங்களது உயர் கொடைதான் மேலாம்பரமாகிமிகைத்துவிட்டது” என்று கண்ணியமிக்க ஹள்ரத் ஷாஹ் வலிய்யுல்லாஹ், முஹத்திதுத்திஹ்லவீ(றஹ்) அவர்கள் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்அபயம் தேடியுள்ளார்கள்.
“அல்லாஹ்வுடைய திருத் தூதராகிய றஸூலவர்களே! தங்களின் திருமுகத்தை விட்டும் திரையைச்சற்று நீக்கி தங்களின் தரிசனத்தை எனக்கருளுங்கள்!
தங்களுடைய திருமுகத்தின் ஜோதி கொண்டு என்னுடைய நேத்திரங் களுக்குப் பிரகாசத்தைஅளியுங்கள்! வேற்றுமையின்இருளை விட்டும் என்னைக் காப்பாற்றுங்கள்!
நான் நல்லவனோ, கெட்டவனோ எப்படியிருப்பினும், தங்களுடையவனாகிவிட்டேனே! அதுவே போதும்! இப்போது வேண்டுமானால் ஆதரியுங்கள்; அல்லதுவெருட்டுங்கள்! (நான் தங்களை விட்டு அசைய மாட்டேன்)
கப்பலோட்டி நடுக்கடலில் வழிதவறித் திகைத்தாற்போல் நான் வாழ்க்கைப்புயலில் நிலை தவறி தத்தளிக்கிறேன். என்னைக்கரை சேருங்கள்!
நான் தகுதி யற்றவனா யிருப்பினும் தங்களுடைய கிருபையின் பேரில் எனக்குஆதரவு உண்டு. என்னை மதீனாவுக்கு அழைத்துக்கொள்ளுங்கள்!
இயலாமையுள்ள இந்த இம்தாத் என்பவனைத் தங்களுடைய காதல் வலையில் அகப்படச்செய்யுங்கள்! இத்தருணம் ஈருலகிலும் இவனை விடுதலை பெற்று ஈடேற்றம் அடையச் செய்யுங்கள்!”.
(தொடரும்)
All rights reserved.