ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jun 2012   »  முப்பெரும் விழா

திருச்சியிள் முப்பெரும் விழா

 

 

திருச்சி மதுரஸத்துல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியில்சென்ற 26.05.2012 சனிக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உதய தின விழா, கெளதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவுவிழா, மற்றும் கோடைகாலப் பயிற்சி மாணாக்கருக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா குத்ஃபுல் ஃபரீத் ஜமாலிய்யா ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் நினைவரங்கில்சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இப்புனித விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஆலி ஜனாப் வீ.னி. மக்தூம்ஜான் னி.றீஉ., ய.சிd(ஹக்கிய்யுல் காதிரி) தலைமைதாங்கினார்.  தஹ்ஸீல் மாணவர் ஹக்கீம் பாஷா கிராஅத்ஓதினார்.  மேலும் ஜந்தாம் ஜும்ரா மாணவர்கள்வஹ்ததுல் உஜூது மற்றும் நபி புகழ் பாடினர்.

கல்லூரிப் பேராசிரியர் மெளலவி N.S.N. சயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹிவரவேற்புரை ஆற்றினார்.

கோடைகாலப் பயிற்சி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பின்னர் கோடைகாலப் பயிற்சி சிறப்பு ஆசிரியர்கள் மெளலவி உபைதுல்லா ஆலிம் பாகவி  திண்டுக்கல் ஹபீபுல்லா ஆலிம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.  கல்லூரி தலைமைப் பேராசிரியர் மெளலவி அல்ஹாஜ் மீரான்முஹிய்யுத்தீன் ஆலிம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

திருச்சி மாவட்ட அரசு காழி மெளலவி, அல்ஹாஜ், ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பஈ அவர்கள், கோடைகால பயிற்சி மாணவர்களுக்குசான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கி பேருரை ஆற்றினார்.  விழா நிகழ்ச்சிகளை மெளலவி ஹி.அப்துஸ் ஸலாம் ஆலிம்ய.ளீலிது தொகுத்து வழங்கினார்.  கல்லூரி மேலாளர்பேராசிரியர் மெளலவி N. முஹம்மது ரஃபிஉத்தீன் ஆலிம் நூரீ நன்றியுரை ஆற்றினார்.  மெளலவி H. அப்துல் கரீம் ஆலிம் B.A நிறைவு துஆ ஓதினார்.  திருச்சி கருமண்டபம் ஜனாப் பஷீர் முஹம்மது (டிரைவர்அரசு போக்குவரத்து கழகம் அவர்கள்) நினைவுப் பொருள்களை வழங்கினார்.  விழாவில் திருச்சி முரீதுகள் மாணவர்களின் குடும்பத்தினர்பெருந்திரளாக வந்து கூடி விழாவை சிறப்பித்தனர்.  விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கானஏற்பாடுகளை மதுரஸா மாணவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

- திருச்சி நிருபர் -