ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jun 2012   »  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் [ரஹ்]

தமிழகத்து வலிமார்கள்


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் [ரஹ்]

 

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பாஅவர்கள் “தாமிரப்பட்டினம்” என்ற பெயரில் அவர்கள் அரபுத் தமிழில் ஒரு நவீனம் எழுதினார்கள்.  அது அரபி எழுத்தால் எழுதப்பட்டிருந்த போதிலும் அதைவாசிக்கும் போது தமிழை வாசிப்பதுபோல உச்சரிப்புகள் வரும்.  அதுவே “முதல் தமிழ் நவீனம்” எனக் கூறப்படுகிறது.

அது இப்போது கீழக்கரை எம்.கே.இ மெளலானா அவர்களால் தூய தமிழில் அச்சிடப்பட்டுள்ளது.

அப்பா அவர்கள் அரபியிலும் தமிழிலும் மொத்தம் 54 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள்.

முன்பெல்லாம் அவர்கள் அரபுத் தமிழ் நூல்களை பம்பாய் சென்று அங்கு தங்கிஅவற்றை அச்சிட்டு வருவது வழக்கமாக இருந்தது. ஒரு சமயம் மாதிஹிர் ரசூல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் பழவேற்காடு சென்றிருந்தசமயம் அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுக்கு ‘வித்ரிய்யா’ நூல் வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்களிடம்  ஒரு பிரதிகூடகையில் இல்லை. ஆதலால் நினைவில்  இருந்த வரை அவர்கள்  கூற அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டார்கள் அம்மக்கள்.  அப்படி எழுதும்போது ஒரு சிலவரிகள் முன் பின்னாகமாறி விட்டன.

இதையறிந்த மாப்பிள்ளை லெப்பை அப்பா அவர்கள் தாங்கள் பம்பாய் செல்லும்போது வித்ரியாவையும் எடுத்துச் சென்று அதன் மூலப் பிரதி போலவே ஆயிரக்கணக்கில் அச்சிட்டுவெளியிட்டார்கள்.

அப்பா அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போதும் வழியில் பம்பாயில் தங்கிதம் நூல்களை அச்சிடும் வேலையையும் பார்த்துக் கொண்டார்கள்.  அப்பா அவர்களின் நண்பர் தடிக்கம்பு ஆலிம் சஹிப்அவர்கள் அப்பா அவர்களைப் பார்த்து தாங்கள் ஹஜ் செய்யச் சென்றீர்களா? இல்லை பம்பாயில்நூல்களை அச்சடிக்கச் சென்றீர்களா? என்று விளையாட்டாகக் கேட்பார்கள்.

பின்னர் அவர்கள் ஹிஜ்ரி 130 ஆம் ஆண்டில் கீழக்கரையிலேயே ‘பரக்கத்தியாஅச்சகம்’ என்ற பெயரில் ஒரு லித்தோ அச்சகத்தை நிறுவித் தம் நூல்களையயல்லாம் அங்கேயேஆரம்பித்து விட்டார்கள்.  அப்படி அச்சிட்ட  நூல்களை வெளிநாடுகளுக்கும்அனுப்பி வைப்பார்கள்.  அப்படி ஒரு சமயம் ரங்கூனுக்குபுத்தகங்களை அனுப்பி வைத்தார்கள்.  அங்கு அந்தநூல்கள் அனைத்தும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன.


அவர்களுக்கு அரபி, பார்ஸி, உர்தூ தமிழ் ஆகியமொழிகள் தெரிந்த போதிலும் அவர்களுக்கு அரபியில் இருந்த புலமை பாண்டித்தியம் போல மற்றமொழிகளில் இல்லை என்றே கூறலாம்..  ஒரு சமயம்கீழக்கரைக்கு வந்த அரபி இவர்களது புலமையைப் சோதிக்க எண்ணி அரபியில் ஒரு கவிதை பாடும்படிகேட்டுக் கொண்டார்.  உடனே ஒரு பேனாவை எடுத்துதாளில் எழுத ஆரம்பித்து விட்டார்கள் அப்பா. 76 கண்ணிகளைத் தூய அரபியில் பாடிக் கொடுத்தார்கள்.  அதைப் படித்த அரபி அதிர்ந்து போய் விட்டார்.“வல்லாஹிஹாதா லிஸானுல் அரபில் மூபீன்” (அல்லாஹ்வின் மீது ஆணையாக இது தெளிவான அரபி மொழியாகும்)என்று வாய்விட்டுக் கூறினார்.

  

அரபியில் அவர்களுக்கு இருந்தபுலமையால் அதை விரும்பிய படியயல்லாம் கவிதை இயற்றுவதில்  பயன்படுத்தினார்கள். இலங்கையில் மாத்திரை என்னும்ஊரில் வாழ்ந்து வந்த ரைஹானா, உம்மு ஹபீபா என்ற இரு பெண்மணிகள் அப்பா அவர்களுக்குக் காணிக்கையை அனுப்பிவைத்தார்கள்.அனுப்பி வைத்து விட்டு ஒரு வேண்டுகோளையும் வைத்தனர். அதாவது “தாங்கள் இயற்றும் மெளலிதுஒன்றில் எங்கள் பெயர்களும் இடம் பெறுமாறு செய்ய வேண்டும்”என்று வேண்டிக் கொண்டார்கள்.  அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப்பா அவர்கள்.

லம் துல்ஃபிஃதரா ஃபீமாத்தராமின் அஷ்யாயீ

 லம் ­ம்மத் ரை ஹானத்து இஷ்கில் மஹ்பூபி

 அல் னும்ம ஹபீபுன்பீஃபனாயில் ஜிஸ்மானீ” 

என்று பாடினார்கள்.       

 (தொடரும்)