ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jun 2012   »  தினந்தோறும் தேர்வு !

தினந்தோறும் தேர்வு !        
   


தினந்தோறும் பரீட்சை என்றவுடன் பயந்து விடாதீர்கள்.  இந்தப் பரீட்சைக்கு நீங்கள் படிக்கவேண்டியதில்லை.  வாத்தியார் இல்லை.  கொஸ்டின் பேப்பர்கூட அதிக நீளமில்லை, நான்கே நான்கு கேள்விகள்தான்.  அவை இங்கே :


      1.  ஒவ்வொரு நாளும் நான் என்னென்ன வேலைகளைச்செய்கிறேன்?

      2.  அந்த வேலைகள் ஒவ்வொன்றுக்கும் நிஜமான தேவைஉள்ளதா?

      3.  நான் அந்த வேலைகளை எவ்வளவு சிறப்பாகச்செய்கிறேன்?

      4. இந்தவேலைகளை என்னைத் தவிர  வேறு யாராவதுசெய்துவிடமுடியுமா? 

(அதாவது, இன்னொருவர்என்னைத்  தூக்கி எறிந்துவிடுவது சாத்தியமா?)


இந்த நான்குகேள்விகளையும் அடிக்கடி கேட்டுக்கொள்கிறவர்கள் வாழ்க்கையில் ஃபெயிலாக வாய்ப்பேஇல்லை.  காரணம், இவைதாம் நம்மை ஒரு விலை மதிக்க முடியாதவைரமாகப் பட்டை தீட்டுகின்றன.  வீடோ,அலுவலகமோ, தொழிற்சாலையோ, நாமின்றி அணுவும் அசையாது என்கிற அளவுக்கு நம்மை உயர்த்துகின்றன.

முக்கியமான வி­யம், இந்தக்கேள்விகள் எல்லாவற்றுக்கும் திருப்தியான பதில்களைப் பெறவேண்டும்.  ஏதாவது ஒன்று நன்றாக இருக்கிறது என்றுஇன்னொன்றை சாய்ஸில் விடக்கூடாது.  பொய்யானபதில்களைச் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது.

உதாரணமாக, நீங்கள் செய்யும் வேலையில் ஒரு குறைஇருக்கிறது என்று வையுங்கள்.  அதைஇன்னொருவர் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும்வரை காத்திருந்தால்  நீங்கள் பத்தோடு பதினொன்றுஆகிவிடுகிறீர்கள்.  அப்படியில்லாமல்நீங்களே (இந்த மினிபரீட்சையின் உதவியோடு) அதைக் கண்டுபிடித்துச்சரிப்படுத்திக்கொள்ளப் பழகினால், கொஞ்சம்கொஞ்சமாக உங்களுடையகுறைகள் மறையும்.

உங்கள் இடத்தையாராலும் பிடிக்கமுடியாது என்கிற நிலையை எட்டுவீர்கள்.

சரி, எனக்கு நானே பரீட்சைவைத்துக்கொண்டுவிட்டேன்.  நான் எதில்ஸ்ட்ராங், எங்கே வீக் என்பது புரிந்துவிட்டது.  அடுத்து என்ன செய்வது?.

 

இங்கே நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும்.  நீங்கள் எதில் கவனம் செலுத்தப்போகிறீர்கள்? உங்களுடைய பலங்களை நன்குபயன்படுத்திக்கொள்வீர்களா? அல்லது பலவீனங்களைச் சரி செய்யமெனக்கெடுவீர்களா? இந்த இரண்டில் எது உசத்தி, எது மட்டம் என்று யோசித்துக் குழம்பவேண்டாம்.  அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழ்நிலை, விருப்பு வெறுப்புகளைப் பொறுத்து மாறும். உங்களுக்கு எது சரி என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

      1.  நீங்கள் தினசரி 24 மணி நேரத்தை எப்படிச்செலவிடுகிறீர்கள் என்று யோசியுங்கள்.  அரைமணி நேரத்துக்குமேல் செலவாகிற எல்லா வேலைகளையும் பட்டியல் போடுங்கள்.  ஒவ்வொன்றும் எவ்வளவு நேரத்தைத் தின்கிறது என்றுபக்கத்திலேயே குறிப்பிடுங்கள்.

      2.  அந்த வேலை ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு மேலேநாம் பார்த்த நான்கு கேள்விகளைக் கேளுங்கள்.

      3.  உங்களது லட்சியம், திறமைகளுக்குப் பொருந்தாத வி­யங்களை என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.  வேறொருவரிடம் ஒப்படைக்கலாமா? அல்லது நாமே அந்தத் திறனைவளர்த்துக்கொள்ளலாமா?

      4.  மிச்சமிருக்கும் வி­யங்களுக்கு மட்டும் உங்களுடைய  நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டுஒதுக்குங்கள்.  மற்றதைப் பற்றிகவலைப்படாதீர்கள்.

      5.  இந்தப் பரீட்சையை குறைந்தபட்சம் மாதம்ஒருமுறையாவது நடத்துங்கள், நீங்கள்வடிகட்டித் தேர்ந்தெடுத்திருக்கிற வி­யங்கள் ஒவ்வொன்றையும் உங்களை விட்டால் வேறு யாராலும் அத்தனைசிறப்பாகச் செய்யவே முடியாது என்கிற மதிப்பு மிகுந்த உன்னதமான நிçயை எட்டும்வரை விடாதீர்கள்.  அப்புறம் உங்களை யாராலும், எதனாலும் அசைக்கமுடியாது!

தகவல் : A.M.J. ஸாதிக், BBA  திருச்சி