ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை


Pezhai  »  2012   »  Jun 2012   »  பேழைக்கு ஒரு கடிதம் இலங்கையிலிருந்து....

பேழைக்கு ஒரு கடிதம்இலங்கையிலிருந்து....

 

 

ஞானத்தை எம் நாடி நரம்புகளிலும் ஓடும் குருதியிலும் உறையவைத்து,எம்மை ஞானிகளின் சமூகத்தில் அமர வைத்த மறை ஞானப் பேழையே நீர்!

மூன்று தசாப்தங்களாக சுமந்து வந்த கருத்துகள் அத்தனையும் விண்ணலிருந்துவந்தவைகளே! அதை எழுத்தாக்கி உருவாக்கிய எழுது கோள்களும் விண்ணுலகத்தை சார்ந்திருந்தவர்களதே!

எம் உயிரோடு உறவாடி ஆத்மாவில் கலந்து, ஆத்ம உலக அரசர்களோடு எம்மைஒன்றாக்கி வைத்த மறைஞானப் பேழையே! எம் நெஞ்சங்களில் நீர் அமர்ந்திருக்கும் சிம்மாசனமோநிரந்தரமானது! நீடூழி நிற்பது! எம் ஆத்மத் தந்தையின் அமுத மொழிகளை எங்களுக்கு அமுதமழைகளாக்கி நனைய வைக்கின்றாய்!  ஜமாலிய்யா தோட்டத்தில்கொய்த மலர்களை எம் ஆத்மங்களுக்கு மாலையாக சூடிக் கொண்டிருக்கின்றாய்!  பேழையே நீர் மாதாந்திரம் எமக்கு வரும் பத்திரிகைமட்டுமல்ல.  பட்டோலையும் ஆவாய்...

உலகத்தில் எந்த நதி ஓடினாலும் மறை ஞான நதியில் ஓடும் நீருக்குத்தாம் தித்திப்பு இருப்பதைப் புரிந்து கொண்டோம்.

உலகம் உய்யும் வரைக்கும் உன்னில் நீராடும் பக்தர்கள் இருந்து கெண்டுதானிருப்பார்கள்.உம் ஞான ஊற்றிலே (சரியாக) ஞானத்தைப் பருகிய உள்ளங்கள் என்றைக்கும் வழிதவற மாட்டார்கள்.

 

பேழையே உமக்கு எம் தாழ்மையான வேண்டுகோள்!.

எம் நாயகம் காலத்தின் உத்தமரால் அவ்வப்போது வெளியாக்கிய வைரமுத்துக்கள்ஆங்காங்கு ஞானப் பெட்டகமாக உள்ளங்களில் பட்டோலைகளாக பாதுகாத்து வைத்திருந்தாளும் பேழையே!எம்போன்ற இளைய தலைமுறையினருக்காக வேண்டி உன்னில் அதனை முழுமையாக மீண்டும், மீண்டும்,மின்னுவதை எதிர்பார்த்து இருக்கின்றோம்!

பேழையே! நீர் ஞானப் பெட்டகத்திற்கே ஓர் ஞானி, எங்களது நன்றிக் காணிக்கைஎன்றைக்கும் உமக்கு உரித்தாகட்டும்!  வாழ்க!மறை ஞானப் பேழையே!

 

இவண்

மறைதாசன்  ஹக்கிய்யுல் காதிரி
(இலங்கை முரீதின்கள் சார்பாக)