ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jun 2012   »  காயல் பட்டினத்தில் பெண்கள் தைக்காக்கள்

அறிவோம்!

 

காயல் பட்டினத்தில் பெண்கள் தைக்காக்கள்


இன்றைய காலத்தில் நகரங்களில் அடுத்த வீடுகளில் யார் இருக்கிறார்கள்என்றே தெரியாத நிலை.  இஸ்லாமியக் கலாச்சாரத்தைஆணிவேராகக் கொண்ட காயல்பட்டினத்தில் ஒவ்வொரு தெருவிலும் தைக்காக்கள் உண்டு.  வட்டார அமைப்புகளைக் கொண்டு தைக்காவில் பெண்கள்மட்டுமே உறுப்பினர்கள்.  ஆண் இமாம்கள் தொழ வைக்கதைக்கா முகப்பில் தனி வாசல் உண்டு. அவற்றின் பெயர்கள்:

1.  கதீஜா நாயகி பெண்கள்தைக்கா

2.  பாத்திமா நாயகி பெண்கள்தைக்கா

3.  அல் அமான் பெண்கள் தைக்கா

4.  ஹைரிய்யா பெண்கள் தைக்கா

5.  பரக்கத் பெண்கள் தைக்கா

6.  ஹலீமா பள்ளி பெண்கள்தைக்கா

7.  மஹ்பூப் சுபுஹானி பெண்கள்தைக்கா

8.  இப்னு ஹஜர் பெண்கள்தைக்கா

9.  சதக்கத்துல்லாஹ் அப்பாபெண்கள் தைக்கா

10.  ஜன்னத்துல் காதிரிய்யாபெண்கள் தைக்கா

11.  ரஹ்மத்  பெண்கள் தைக்கா

12.  செண்டு ஆலிம் பெண்கள்தைக்கா

13.  முஹ்பத்துல் முஃபினாதுபெண்கள் தைக்கா

14.  ஜன்னத்துல் பிர்தெளஸ்பெண்கள் தைக்கா

15.  அ.க. பெண்கள் தைக்கா

16.  நஹ்வி அப்பா பெண்கள்தைக்கா

17.  சின்ன மெளலானா பெண்கள்தைக்கா

18.  பெரிய கல் பெண்கள்தைக்கா

19.  கீழ்னு பெண்கள் தைக்கா

20.  அரூஸுல் ஜன்னாஹ் பெண்கள்தைக்கா

21.  மஃபத்துன் நிஸ்வான்பெண்கள் தைக்கா

22.  மன்ஸக்குன் நிஸ்வான்பெண்கள் தைக்கா

23.  ஹாபிழ் அமீர் பெண்கள்தைக்கா

24.  வாவு பெண்கள் தைக்கா

25.  ஷாஹிதிய்யா பெண்கள்தைக்கா

26.  ஜர்ரூக்குல் பாஸி பெண்கள்தைக்கா

27.  கெளது முஹிய்யதீன்பெண்கள் தைக்கா

28.  இப்னு ஹஜர் பெண்கள்தைக்கா

29.  நுஸ்கியார் பெண்கள்தைக்கா

இவ்வாறு பல தைக்காக்கள் உருவாகி சில தைக்காக்களில் ஹிப்ழு மனை பிரிவுகளும்சிறுமியர்களுக்கான மார்க்கக் கல்வி நிறுவனமாகவும், ஆலிமாக்களை உருவாக்கும்அரபிக் கல்லூரிகளாகவும் பரிணாமம் பெற்றுள்ளன.

தைக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

ரமழான் மாதம் தராவீஹ் தொழுகையில் முழுகுர்ஆன் ஓதி ஆண் இமாம்கள்தொழ வைப்பர்.  காயல்பட்டினத்தில் குர்ஆனை மனனம்செய்தபெண் ஹாபிழாக்கள் 300 பேர் வரை இருக்கிறார்கள்.  ஒவ்வொரு தைக்காவிலும் ஹாபிழாக்கள் இருக்கிறார்கள்.  அவர்களைக் கொண்டு ‘கியாமுல் லைல்’ எனப்படும் இரவுத்தொழுகை நோன்பு காலங்களில் சில அத்தியாயங்களை ஓதி தொழுவதுண்டு.  அல்லாஹ் நாடினால் விரைவில்பெண்களும் ஆண்களைப் போன்று இரு ரக்அத்துகளில் முழுகுர்ஆனையும் ஓதி தொழவைக்கக் கூடிய ஹாபிழாக்கள் காயல்பட்டினத்தில் உருவாகலாம்.

ரமலான்  மாதம் தைக்காக்களின்விசே­ மாதம், பெண்கள் தைக்காவுடன் வணக்கம் புரிதலில்ஒன்றி விடுவர்.  குர்ஆன் ஓதுவதிலும் மகான் மாதிஹுர்ரஸூல் சதக்கத்துல்லா அப்பா அவர்கள் இயற்றிய ‘வித்ரிய்யா’ என்னும் அற்புத கஸீதாவை 30 நாட்களும் ஒவ்வொரு அட்சரமாகப் படிப்பார்கள்.  தைக்காவிலுள்ள பெண் ஆலிமாக்களைக் கொண்டு சதகா (தர்மம்),ஜகாத்துகள் (ஏழைவரி) பற்றிய விழிப்புணர்வு பயான்கள் நடக்கும். ரமலானில் இரவில் தைக்காவில்பெண்கள் வணக்கம் புரிவார்கள்.  காயல்பட்டினப்பெண்கள் அநேகர் எல்லோருமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பர்.  அரபுத் தமிழ் நூலாவது வாசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர் மாதங்களில் மெளலூது ­ரீப் பதங்கள், முனாஜாத்துகள், கறாமாத்துகள்,புகழ் மாலைகள் எனப் பாடி மகிழ்வடைவார்கள். அல்லாமா ஷாம் ´ஹாபுத்தீன் புலவர் வலிய்யுல்லாஹ் அவர்கள்இயற்றிய ரஸூல் மாலை மனப்பாடமாக பாடக்கூடியவர் பலர்.  இதன் இறுதி அடியை தெரியாதவர்களே இல்லை எனலாம்.  அந்த அடி வருமாறு : பொன்னாலே குப்பாவும் பொன்னாலேகிந்தீலும் என்னாளும் மின்னொளி போல் இலங்கும் எங்கள்  - நபி கபுறு என்னுடைய பாவத்தினால் எங்கள் நபி ரவ்ழாவைஉன்னிப் போய் காணாமல் ஓஞ்சியிருக்கிறேன்.  யாயஸய்யதீ  பாவிக்கு நாடி துஆ விரவும். நோய் தோ­ம் வாராமல் நோக்கி துஆ விரவும்.

பெரும்பாலான தைக்காக்களில் வெள்ளிக்கிழமை மாலையில் ஸலவாத் மஜ்லிஸ்- திக்ர் மஜ்லிஸ் பிறை 14ல் ஜலாலிய்யா, காதிரிய்யா, ஷாதுலிய்யா திக்ர் மஜ்லிஸ்கள்,பிறை 27ல் ஸலவாத்துந் நாரிய்யா  மஜ்லிஸ் போன்றவையும்இஸ்லாமியப் புலவர்களால் இயற்றப்பட்ட முஹிய்யுத்தீன் மாலை, காதிறு மாலை, குத்பிய்யாமாலை, முஹிய்யுத்தீன் ஆண்டகை  சத்ரு சங்காரம்,மீரான் மாலை போன்ற தமிழ்க் காவியங்களையும் இறை நேசர்களான தைக்கா சாகிபு வலியுல்லாஹ்,உமர் வலியுல்லாஹ், சின்ன முத்துவாப்பா ஒலி, மஹ்மூது மஜ்தூப் ஒலி, பெரிய முத்துவாப்பாஒலி, லெப்பை அப்பா ஒலிமார்கள், காசிம் புலவர், செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா, ஜாபர்சாதிக் நாயகம், காஜா முஈனுத்தீன் ஆண்டகை, நாகூர் சாகுல்ஹமீது ஒலி, முத்துப்பேட்டை  தாவூது ஒலி போன்ற பல இறைநேசச் செல்வர்களின் நினைவுநாட்களில் அவர்கள் புகழ் மாலைகள் பாடப்படும். சேகனாப்புலவர் இயற்றிய ஹக்கு பேரில் முனாஜாத்து  ‘காவலாய் நிற்கும் வல்லோன் கத்தனாய் சீவனல்ல மாவலாய்ப்போற்றி வாழ்த்தி யதற்குண வளித்த கோமா நாவினால் வெளியோர் கேட்கு நாட்டத்தின்படியே தந்துதாவிலா ரஹ்மத்தாலே தற்காக்கும் பொருளதாமே. இறைநேசர்களின் புகழ்ப்பாக்களையும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ - அலைஹி வஸல்லம்) அவர்களின் வர்ணிப்புப் பாடல்களையும் சின்னஞ்சிறுசிறுமிகள் படிப்பது இங்குள்ள சிறப்பு.

(நன்றி : இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் 2011 ல் வெளியிட்ட ஆய்வுமாலை யில் காயல்பட்டினம் கே.எ.ஸ். பாத்திமா கலீபா அவர்களின் கட்டுரையிலிருந்து.....)