ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ரமளான் - முஸ்லிம்கள் நன்மைகளை அறுவடை செய்யும் மாதமாக விளங்குகிறது. ஆனால் முஸ்லிம் வேடந்தாங்கிய சிலருக்கோ நன்கொடைகளை அறுவடை செய்யும் சீசனாக மாறிவிடுகின்றது!வஹ்ஹாபி இயக்கங்கள், ரமளான் பிறந்து விட்டாலே தங்கள் வலைகளைத் தூசு தட்டி அப்பாவி முஸ்லிம்களின் பணத்தைச் சுருட்ட ஆயத்தமாகி விடுவார்கள். இணையதளம் - தொலைக்காட்சி - துண்டுப் பிரசுரம் - சந்தா புத்தகம் என பல்வேறு தளங்கள் மூலமாக கையேந்தத் தொடங்கி விடுவார்கள். ஆலிம்களை “பணம்பறிக்கும் புரோகிதர்கள்” என வசைபாடும் இவர்கள், இஸ்லாத்தின் மொத்த ஏஜெண்ட் நாங்களே, எங்களுக்கே வாரி வழங்குங்கள்! என சமுதாயத்தின் செல்வத்தை அள்ள -கொள்ளை கொள்ள தூண்டில் போடுவார்கள்.ஏழை முஸ்லிம்களுக்கு சென்று சேர வேண்டிய ஜக்காத் பணத்தை, “இரத்த தான முகாம் நடத்துகிறோம் - பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம் - இறந்தவரை அடக்குவதற்கு வேன் வாங்குகிறோம்- உரிமை மீட்கப் போராடுகிறோம்” என்ற பெயர்களில் போக்குக்காட்டி அநியாயமாக ஏழைகளின் உரிமையில் பங்கு கேட்பார்கள். அவர்கள் கேட்டு விட்டுப் போகட்டும். நாம் இவர்களுக்குக் கொடுக்கலாமா? கொடுப்பது முறைதானா? ­ரீஅத் அனுமதிக்கிறதா? என சமூகம் தான் சிந்திக்க வேண்டும்.!வஹ்ஹாபி இயக்கங்களால் தமிழக முஸ்லிம்களிடம் என்ன மாற்றம்- முன்னேற்றம் ஏற்பட்டிருகிறது? ஊருக்கு ஊர், மஹல்லாவுக்கு மஹல்லா பிளவு பட்டுப் போனதைத்தவிர! முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாமியச் சின்னமான தொப்பியை தூக்கி எறிந்ததைவிட! முஸ்லிம் பெண்கள் தங்கள் முகம் தெரிய தெருவில் நடக்கத் துணிந்ததைவிட! போஸ்டர், பேனர் - போராட்டம் - ஊர்வலம் - மாநாடு - இவைகளைத் தவிர வேறு என்ன புரட்சி ஏற்பட்டிருக்கிறது!?இந்த, மார்க்கம் கடந்த செயல்களுக்கு நாம் ஆதரவளிக்கலாமா? ஊக்கம் கொடுக்கலாமா? கஷ்டப்பட்டு நாம் சம்பாதிக்கும் பணம்,பெருமானார் மீது ஸலவாத்து ஓதத் தடைபோடும் சண்டாளர்களுக்கு, சஹாபிகளை - இமாம்களை குறைத்துப் பேசும் குறைமதியாளருக்கு, வலிமார்களை வசைபாடும் வம்பர்களுக்கு,இஸ்லாத்தின் மூல வடிவைச் சிதைக்கும் துன்மார்க்கர்களுக்குப் போய்ச் சேரலாமா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்!