ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   » உமர் (ரலி) புராணம்

 உமர் (ரலி) புராணம்

 

                                                                             ஆசிரியர்

 

                                                    ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

                                                              அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

                                                   உமரொலி  கேட்ட  ஸுப்யான்

                                                          உன்னத  உமர்த  மையே

                                                   திமிருட  னழைத்துக்  கேட்டார்

                                                          திருமிகு  நபிக  ணாதர்

                                                   சமரதின்  முடிவுற்  றாரோ

                                                          சாற்றுக  வென்று  ரைத்தார்

                                                   எமருயிர்  நபிக  ளுள்ளார்

                                                          என்றுமே  நபியு  ளாரே.


கொண்டு கூட்டு:

     

      உமர் ஒலி கேட்ட ஸுப்யான் உன்னத  உமர் த(ம்)மை ஏ திமிர் உடன் அழைத்து திருமிகு நபிகள் நாதர் சமரதில் முடிவு உற்றாரோ சாற்றுக என்று கேட்டார். எமர் உயிர் நபிகள் உள்ளார். என்றுமே நபி உள்ளார் என்று உரைத்தார்.


பொருள் : 


       உமர் (ரலி) அவர்களின் சப்தத்தைக் கேட்ட ஸுப்யான் மேன்மை பொருந்திய உமர் (ரலி) அவர்களை இறுமாப்புடன் அழைத்து மேன்மைக்குரிய நபிகணாதர் சமரதில் இறையடி சேர்ந்தாரோ சொல்லுகவென்று  கேட்டார்.  (அப்போது) எம்மனைவரதும்  உயிராகவுள்ள நபிகள் நாதர் ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம்  அவர்கள் உள்ளார்கள்.  என்றுமே நபிகள் நாயகம் இருப்பார்கள் என்று உரைத்தார்கள்.


குறிப்பு :


      உன்னதம் :உயர்ச்சி, மேன்மை.  திமிர் : இறுமாப்பு.  சமர் : யுத்தம்.  முடிவு : இறப்பு.  சாற்றுக : சொல்க.  எமர் உயிர் : எம் அனைவரதுமுயிர்.

 

 

.0001p��x