ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   »அமுத மொழிகள்


          சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்

                                                   அமுத மொழிகள்                                  


குர்ஆன்ஷ­ரீஃப்

 

  •      குர்ஆனில் உள்ள ஒவ்வொரு ஜுஸ்வும் ஒவ்வொரு சூராவும் ஒவ்வொரு ஆயத்தும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வோரெழுத்தும் அதைச் சுமந்திருக்கும் தாள்களும் அட்டைகளும் அனைத்தும் எமது பூரண உடலாகவே கருதியுள்ளோம்! ஏனெனில் எமது நகத்தில்அல்லது ஒரு விரலில் ஒரு சிறுபுண் ஏற்பட்டால் உடல் அதனை எப்படி உணர்ந்து வருத்தப்படுகிறதோ அதே போன்று குர்ஆனில் ஒரு சிறுகுறை ஏற்பட்டாலும் அது குர்ஆன்முழுவதற்கும் குறைபோல் எம்முடல் அதை அனுபவிக்கின்றது.  எம் உடலிலிருந்து ஒருசிறு உரோமம் பிடுங்கப்பட்டால் எம்முடலுக்கு எவ்வளவு நோவு உண்டாகுமோ அதேபோல் குர்ஆனில் உள்ளதாள், எழுத்துக்கள், எழுதப்படாததுஅல்லது அட்டை யிலிருந்து ஒரு சிறு துண்டு பழுதுபடுமாயின் எம்முடலில் வருத்தத்தை உண்டாக்குகின்றது.  இதனாலேயே குர்ஆனை அவர்கள் மூளை போலும் சிலர் இதயம் போலும் சிலர் கண்கள் போலும் பாதுகாக்கின்றேன் என்கிறார்கள்.  நாமோ நமது உடலை எப்படிப் பாதுகாக்கின்றோமோ அப்படியே பாதுகாக்கின்றோம்!
  •       இன்று ஒரு புதிய கூட்டம் கிளம்பியுள்ளது.  அது குர்ஆனைத் தமிழில் ஓதினால் என்ன? என்றுகேட்கிறது.  இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தைத் தாமே பாதுகாப்பதாகவும் கூறுகிறார்கள் : நீங்கள் இஸ்லாத்தைப் பாதுகாப்பது இருக்கட்டும்; முதலில் ஆபாசங்களை ஒழியுங்கள்.  பர்ளான கடமைகளை சரிவரச்செய்து, ஹராமான செயல்களை விட்டுவிட முயலுங்கள்.  இப்படிப்பட்ட (வஹ்ஹாபி) கூட்டத்தினர் தாம்அல்லாஹ்வுடைய வேலையைச் செய்வதாகக் கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றித் திரிகின்றார்கள்.
  •     ஒவ்வொரு வசனத்திற்கும் வெளிக்கருத்தும் உட்கருத்தும் உண்டு எனும் நபிகளார் கருத்தையும் நாம் சிந்தித்து வெளிக்கருத்தை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டு அனைத்தும் கற்றோம்; கரை கண்டோம்; ஜயம்கொண்டோம் என எண்ணி மருட்சி யடையாது உட்கருத்தையும் உயிரெனக் கருதி அனைத்திலும் சிந்தனை செலுத்தி உண்மை விளக்கத்தையறிய  நாம் அனைவரும் முன்வரல் வேண்டும்.  கருத்தறிந்து வணக்கம் புரியாதான் வணக்கம் மறுமையில் கலக்கத்தைக் கொணர்ந்து சேர்க்கும் என்பதனை நன்குணர்க!

 

 பதுறு சஹாபாக்களை

நினைவு கூர்வோம்!


 

    மது வயது பத்திருக்கும். எம் அருமைத் தாயார் அவர்கள் பதுறு மெளலிது எனும் நூலை வாங்கி எம் கையிற்கொடுத்து ஓதிவருமாறு கேட்டுக் கொண்டார்கள். நம் ஊர்ப் பகுதிகளில் வழக்கமாகவே யாவரும் பதுறு மெளலிது ஓதி வருதல் வழக்கம்.  இதனால் அவர்கள் இறைவனின் அதிகமான பாதுகாப்பையும் வாழ்விற் செழிப்பையும் அடைந்து வந்துள்ளனர்; அடைந்தும் வருகின்றனர்.  அல்ஹம்துலில்லாஹ்.  எம் அருமைத் தாயார் எமக்குக் கூறிய வண்ணமே ஓதிவந்தோம்.  இன்றும் ஓதிவருகின்றோம்.  யான்பெறும் இன்பம் அனைவரும் பெறுகவென்னும் நல்லெண்ணத்தால் நம் முரீத்களும் இதை ஓதி விளங்கி அவர்களும் பாதுகாப்பையும் பல நன்மைகளையும் அடைய வேண்டும் என்னும் எண்ணம் எமதுள்ளத்தை உந்தவும், ஓய்வின்மையால் தாமதப்படுத்தி வந்தோம்.  அப்போதோரிரவு கனவில் மனிதர் ஒருவர் தோன்றி இவ்வருண்மிக்க நூலை எம் கரங்களிற்றந்தார். அவர் இந்நூலை எமக்குத் தந்தமை மொழிபெயர்க்கவே என்று எம் மனம் அக்கனவின் கண்ணேயே உணர்த்திற்று.  இனிமேற்றாமதித்தல் நன்றன்று என்று அன்றே என்றனெழுத்தைத் தொடங்கலானேன்.  அஃதே, இஃதுங்கள் கரங்களிற்றாங்கியுள்ளது.                                                                           (பதுறு மவ்லிதுமொழி பெயர்ப்பு நூல் முன்னுரையில் சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள்)

 

பதுறு மவ்லிதில் வரும் அறபு                    

பைத்துக்கு தமிழ்ப்பாடல்.

 

                                                அவ்லியாக்க ளின்குதுபு

                                                        மார்களான  இரட்சகரை

                                                அவ்வலான அல்லாஹ் என்றும்

                                                        அன்புடனே  பொருந்தினனே

 

                                                வாழ்வதிலே சஞ்சலத்தில்

                                                         வாட்டும்மிடு மையழிவில்

                                                ஆழ்பவரே அழைத்திடுவீர்

                                                         அருமைபது ரீங்களென்றே

 

                                                துன்பம்துயர் நிறைந்தவரே

                                                         தூயபதுர்க ளிடத்தே

                                                 பண்பாயணுகி யழைப்பீர்

                                                         பதுருஸஹா  பாக்களென்றே.

 

                                                          அமுத மொழிகள்

 

 

                                                 சாதனைகள் உளக்கலக்கம்

                                                       தோன்றிடும்போதினிலெல்லாம்

                                                 நீதர்பது ரீங்கள்தம்மை

                                                         நித்தமழைத்துய்திடுவீர்.

 

                                                தக்கபதுர் களேஉங்கள்

                                                      தகைமையால்பாபிகளும்

                                                மிக்கதுய ருடையவரும்

                                                       மீண்டும்ஜயமடைந்தனரே.

 

                                                 பதுரீன்கள்தம் பொருட்டினாலும்

                                                       பதியுமெங்கள்நாட்டங்களைத்

                                                 துதிகூறவே நிறைவேற்றுவாய்

                                                       சோதனையும்துயர்நீக்குவாய்.

 

                                                 சஞ்சலங்கள் நீக்கிடுவாய்

                                                         தங்கடங்கள்போக்கிடுவாய்

                                                 வஞ்சமதை நீக்கிநல்ல

                                                         வாழ்வதனைத்தந்திடுவாய்.

 

                                                 எம்மிறைவா ஆசையுடன்

                                                          ஈதுன்னிடம்வந்தண்டினோம்

                                                  உம்மிடமே தேட்டமுடன்

                                                          உண்மையுடன்வந்தடுத்தோம்.

 

                                                 ஆதலாலே பேறுகெட்ட

                                                          அன்னவர்போலாக்கிடாதே

                                                  தீதுடனே விரட்டிடாதே

                                                           தேட்டமறவாக்கிடாதே.

 

                                                 மாட்சிமையே பொருந்தியநீ

                                                          மன்னுசிறப்புடையவனீ

                                                 ஈட்டமதாம் பதுரீன்களால்

                                                          இன்கருணைபொழிந்தருள்வாய்

 

                                                   நாயகத்தின் மீதுமவர்

                                                           நல்லகிளையார்கள்மீதும்

                                                   தூயபது ரீன்கள்மீதும்

                                                           சுத்தஸலவாத்துரைப்பாய்.