ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   »   ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்​

   ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்​

              

    முரீதுகள் தம்மை எல்லா வி­யங்களிலும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.. உணவு, நடை, உடை பாவனைகள்,நன்னடத்தைகள், நல்லெண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள் என அனைத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்.


      சுத்தமாகஇருப்பது மிக முக்கியம்.  அவ்வாறு சுத்தமாக இருந்தால், சுத்தமானவராக வாழ்ந்தால் அல்லாஹ்வை அறியலாம்.


      ஒரு முரீது தன்னையே தனக்கு ஒரு கண்ணாடியாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.  நான் எப்படி இருக்கின்றேன்? எனது தொழிலை நான் சரிவர செய்கின்றேனா?யாருக்காவது நான் அநியாயம் செய்கின்றேனா? என்பதனைதனக்குத் தானே மனதில் கேட்டு சரி செய்து கொள்ள வேண்டும்.                                   

                                                                                                          - சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -

 

                                             ஹகீகத்

  

    னதைக் கட்டுப்படுத்துதல். ஒருமுகப்படுத்துதல் ஹகீகத் எனப்படும். அலைபாயும் எண்ண அலைகளை அழித்தல் மிக முக்கியமானதாகும், கடலில் எழும் கடும் புயலைப் போல கடுமையான எண்ணம்.  பயம்.  அச்சம் அனைத்தும் உண்டாகும்,

 அவற்றைக்கட்டுப்படுத்துதல் அவ்வாறான எண்ணங்களை அகற்றி மனதை ஒருமுகப்படுத்துதல் மிகஅவசியமானது.  மனம் என்பது சிறியது; நமக்குள் இருக்கக் கூடியது தானே எனநினைக்கிறோம்.

 அப்படியல்ல ......“பரந்த வெளி” போன்றது.  பேருலகையும்தன்னுள் அடக்க வல்லது.  அந்த மனதைஅலைக்கழிக்காதவாறு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.  மனதில் பரிசுத்தமான எண்ணத்தையே பதித்து, கெட்ட எண்ணங்களை நீக்கிவிட வேண்டும்.

 

                                            ஞானம் 

 

     ஒருவர் நன்கு முயன்று கெட்டித்தனமாகப் படித்தால் வைத்தியரொருவராகலாம்.  அல்லது பொறியாளர் ஆகலாம்.  ஆனால், ஞானமில்லாத எந்தவொரு படிப்பும், அறிவும் பிரயோசனமற்றது.


      ஞானம் என்பது அல்லாஹ்வை அறிவது.  ஞானத்தின் மூலம் கலிமாவாகும்.  கலிமா என்பது நம்மிலும் நம்மிலிருந்து பரந்து விரிந்து நிலம், நீர், தாவரம், மரம், மட்டை, வானம், பூமி, அண்ட சராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது.  பரிபூரணமாக வியாபித்துள்ளது. எங்கும்பிரிவிலாதது.  பிரிக்க முடியாதது. எனவே,கலிமாவின் உட்கருத்தை உணர்ந்தவர் தாம் காணும் மிருகங்கள், பட்சிகள் அதனின் (கலிமாவின்) ஒரு பகுதிதான் என்பதனை உணர்ந்துகொள்வர்.  ஒரு மரத்தில் பல கிளைகள் இருந்தாலும் அவையனைத்தும் அம்மரத்தின் பகுதிகளே என்பதனையும் உணர்வர்.


      இவையனைத்தும்ஒன்றிலிருந்து உதயமானவை.  அது, இது எனும் வேறுபாடு இல்லை, நீ நான் எனும் பிரிவேதுமில்லை என்பதனையும் உணர்வர்.  இந்தக் கூற்றுகளையெல்லாம் நன்கு சிந்தித்தாலே போதுமானது.

 

                                                                                                    (சங்கை மிகு செய்கு நாயகம் அவர்கள்)