ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   »  ​குழந்தை வளர்ப்பு


குழந்தை வளர்ப்பு 



    ரு வயது குழந்தைக்கு மோ­ஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.... இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான்.  எடுத்ததும் ஆப்பிளும் கேரட்டும்தான் வேகவைத்துக் கொடுப்போம்.  இது போல் நம்பர் 2 போக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஆப்பிள், கேரட்டை கொஞ்சமாக கொடுப்பது நல்லது. ஆப்பிளும் கேரட்டும் மோ­ஷன் அதிகமாக போவதை கட்டுப்படுத்தும்.


      குழந்தைகளுக்கு  திட உணவு ஆரம்பித்ததும்.  அடிக்கடி தண்ணீர் அதிகமாக குடிக்க கொடுக்கவேண்டும்.  அதிகம் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கடினமாக கடித்து முழுங்கும் உணவுகளை தவிர்க்கவும்.  முதலில் வாழைப்பழம் சாப்பிடப் பழக்குங்கள்.  இல்லை வாழைப்பழத்தை ஹல்வா போல் (அ) மில்க் ஷேக் போன்ற தேங்காய் பால் சேர்த்து  மிக்சியில் அடித்துக் கொடுக்கவும்.  இதை தேங்காய் பாலில்தான் தயாரிக்க வேண்டும் என்றில்லை. காய்ச்சி ஆறிய பாலில் செய்தாலும் நன்றாக இருக்கும்.  பால், பழம், வாழை சேர்த்த மில்க் ஷேக்குகள் செய்ததும் உடனே குடிக்கவேண்டும் இல்லை என்றால் கறுத்துப் போய்விடும்.  வெயில் காலங்களில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தும் தயாரிக்கலாம்.


      பால் சாப்பாடு சாப்பிடும் குழந்தையாய் இருந்தால் பால், வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்து ஊட்டி  விடவும். ராகி (கேழ்வரகு) கூழாகவோ (அ) பானமாகவோ தயாரித்து கொடுக்கவும். இந்த உணவும் குழந்தைகள் மோ­ஷன் எளிதாகப் போக உதவும். ஆரஞ்சும், பாலும் சேர்த்து ஜூஸாக அல்லது சுளைகளாக பிரித்து அதில் லேசாக சர்க்கரை தூவிக் கொடுக்கலாம்.  இப்படி கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உணவுசாப்பிட முடியாமல், குமட்டிக் கொண்டு வரும்.  எப்போதும் காய்ச்சி ஆறிய வெந்நீரை அடிக்கடிகொடுத்து கொண்டே இருக்கவும்.


      விளக்கெண்ணையை வயிற்றில் வட்ட வடிவத்தில் நன்கு தேய்த்து விட்டு வெந்நீர் அருந்தக் கொடுக்கவும்.  குழந்தைகளுக்கு மோ­ஷன் போகும் இடத்திலும் கொஞ்சம் தடவி விடவேண்டும்.  ரெயிஸின்ஸ் (கிஸ்மிஸ் பழம்) பழத்தை நன்கு தண்ணீரில் ஊறவைத்து ஜூஸாக அடித்து கொடுத்தால் உடனே மோ­ஷன் ஆகும். இதை தினமும் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பிழிந்து குடித்தால்அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையும் கட்டுப்படும்.


      ரசம் சாதம் குழைவாக, பருப்புக் கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுக்கவும். ரசத்தில் இஞ்சி ரசம் செய்து குழைவாக சாதத்தில் போட்டு பிசைந்து ஊட்டிவிடவும்.


      சோம்பை கருகாமல் வறுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் டம்ளராக்கி குடிக்கக் கொடுக்கவும். புரூன்ஸ் பழம், அத்திப்பழம் இதையும் தொடர்ந்து கொடுக்கலாம். மெயினாக நிறைய பழம் காக்டெயில் ஜூஸ் வகைகள் அதிகமாக கொடுக்கவும், மாம்பழ சீசனில் தேங்காய் பாலுடன் மாம்பழ மில்க் ஷேக்கும் கொடுக்கலாம்.

          ( தகவல்: எஸ்.எச். எம்)

 

 

o-byKl