ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jul 2012   » வஹாபிகள் சஹாபிய வேடங்களில்... தொடர்....                                                                        தொடர் எண்-25

வஹாபிகள் சஹாபிய வேடங்களில்...

 


ஆற்றல் மனிதர்கள்

 

    ரு நாள் தினத்தில் ஹள்ரத் கெளதுல் அஃளம் (ரலி) அவர்கள் பகுதாது நகரத்துக் கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்த போது, ஒரு கிறிஸ்தவரும், ஒரு முஸ்லிமும் தர்க்கஞ்செய்து கொண்டிருப்பதைக் கண்டு, அவ்விடம் நின்று கவனித்தார்கள்.


      கிறிஸ்தவர் நபி ஈஸா (அலை) அவர்களது முஃஜிஸாத்துக்கள்.  பலவற்றைக்கூறி அவர்களே மேலானவர்கள்  என்று கூறினார்.  முஸ்லிம், நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களது முஃஜிஸாக்கள் பலவற்றைக் கூறி அவர்களே மிகவும் மேலானவர்கள் என்று கூறினார்.  கடைசியாக,அந்தக் கிறிஸ்தவர், எங்கள் ஈஸா, மரித்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்கள், உங்கள் நபி அவ்விதம் செய்திருக்கின்றார்களா? என்று கடாவினார்.  இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் அந்த முஸ்லிம் சிறிது தயங்கினார்.  உடனே தாம் ஜெயித்து விட்டதாக அந்தக் கிறிஸ்தவர் ஆரவாரம் செய்யலானார்.


      இவ்விரு மனிதர்களின் விவாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்த கெளதுல் அஃளம் (ரலி) அவர்கள் முன் வந்து அந்தக் கிறிஸ்தவரை நோக்கி, ‘நீர் கூறிய அத்தனை வி­யமும் உண்மைதான். அவற்றை நாங்களும் ஒப்புக்கொள்ளவே செய்கின்றோம்.  நான் ஒரு முஸ்லிம்; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உம்மத்துக்களில் நானுமொருவன், இறந்து போன மையித்து எதையாவது நீ காண்பி, அதை நான் உயிர் பெறச் செய்கிறேன்,என்றுரைத்தார்கள்.


      அந்தக் கிறிஸ்தவர் தமது முன்னோர்களை அடக்கம் செய்யப் பட்டிருக்கும் ஒரு மையித்துக் கொல்லை- கல்லறைக்கு அழைத்துச் சென்று, பல்லாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு புராதனப் புதைகுழியைக்காண்பித்து, ‘இதில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் ஒரு பாடகர்.  இவர் உயிர் பெற்றெழுந்து என்னுடன் பேசுவாராகில் நான் உங்களது மார்க்கத்தைத் தழுவுகின்றேன்.  இல்லாவிடில் நீங்கள் எனது மார்க்கத்தைத் தழுவ வேண்டும். சம்மதம்தானா? என்பதாய்ச் சபதம் கூறினார்.


      “அப்படியே, சம்மதம்” என்பதாக ஹள்ரத் கெளதுல் அஃளம்(ரலி) அவர்கள் உடன்பட்டு, ‘உங்கள் நபி மரித்தோரை எவ்வாறுஉயிர்ப்பித்தார்கள்?” என்று வினவினார்கள். “ஆண்டவனுடைய  உத்திரவு கொண்டு எழுந்திரு என்பார்கள்.  உடனே எழுந்திருக்கும்” என்று அவர் விடையளித்தார்.


      “அப்படியா! இப்போது நான் எனது உத்தரவுகொண்டு எழுந்திருக்கச் செய்கிறேன்! பார்’ என்று கூறி, “எனது உத்திரவு கொண்டு எழுந்திரு” (கும்-பி-இதுனீ) என்று மொழிந்தார்கள்.


       உடனே, மடிந்து மண்ணோடு மண்ணாகிக் கிடந்த அந்தப் பாடகர், வாத்தியத்தை இசைத்தவராய்ப் பாடிக்கெண்டே சவக்குழியிலிருந்து வெளியே புறப்பட்டார் அந்தச் சங்கீத வித்துவான், அந்த கிருஸ்தவரை நோக்கி, ‘திருக்கலிமாவைக் கூறி இஸ்லாத்தைத் தழுவ இன்னும் தாமதம் ஏன்?” என்றும் வினவினார்.அந்த கிறிஸ்தவர் பேராச்சிய முற்றவராய், அங்ஙனமே கலிமாவை மொழிந்து முஸ்லிமாகி விட்டார்.


      சரித்திரப் பூர்வமான இவ்வரலாற்றை தப்ரீஜூல்பாத்திர் 16 ஆவது பக்கத்திலும், மனாகிபு கெளதிய்யா 66 ஆவது பக்கத்திலும் பார்வையிடலாம்.


      “வலிமார்களுடைய கறாமத் அற்புதங்கள் ஜீவியத்திலிருப்பது போல், அவர்களது மரணத்திற்கப்பாலும் நடைபெறுமா?” என்று ஷைகுல் இஸ்லாம்.  அல்லாமா, அல்பக்கீஹ், ஷைகுமுஹம்மது ­ஷவ்பரீ (ரஹ்) அவர்களிடம் வினவப்பெற்றது.


      அதற்கு அவர்கள், “மரணத்திற்கப்பாலும் அவுலியாக்களுடைய கறாமத்து அற்புதங்கள் நடைபெற்றே வரும்; அவை எடுபட்டும் போகாது.  அன்பியாக்களுடையது  முஃஜிஸாத், அவுலியாக்களுடைய கறாமத்தாயிருக்கும்.  இதை மறுத்தால் குஃப்ரைக் கொண்டு பயப்பட வேண்டும்” என்று விடையளித்தார்கள்.


      இவ்விபரம், மிஸ்ரில் முஃப்த்தியாயிருந்த அல்லாமா ஷைகு முஹம்மது பகீத் (ரஹ்) அவர்களது ஷிஃபாஉஸ்ஸிகாம்’ என்ற நூலுடன் இணைத்து வெளியிடப்பெற்றிருக்கும் ‘­ஷவ்பரி-பத்வா’ வில், 238 ஆவது பக்கத்தில் காணப்படுகிறது.


      உவமைக்கு மற்றொரு சம்பவத்தையும் கவனியுங்கள்.


      “ஒருவன் ஹள்ரத் ஸெய்யிதுனா அலி (ரலி) அவர்களை நிந்தித்து அவதூறாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அவன் ஓரிரவு நித்திரை செய்கையில், ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் அவனது கனவில்தோன்றி அவனுடைய முகத்தில் ஓங்கி அறைந்தார்கள். அவன் பயந்து திடுக்கிட்டு விழித்துப் பார்க்கும்போது, தன்னுடைய ஸூரத் (கோலம்) மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு கை சேதப்பட்டான்”என்பதாக கிதாபுர்-ரூஹ் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.


      அவுலியாக்களையும், கராமத்துக்களையும் நம்புவதற்கில்லாமல் இன்கார் செய்யும் கூட்டத்தார்கள் பெரும்பாலும் இபுனுதைமியாவையும், அவரைச் சேர்ந்தவர்களையுமே விசே­ஷமாகக் கருதி, அவர்களது நூற்களையே மேற்கோள்களாகக் காட்டுவார்கள்.  வஹ்ஹாபி சித்தாந்தங்களுக்கு மூல குருவான இபுனுதைமிய்யாவின் பிரதான சீடர் இபுனு கையிம் என்பவரே. அவர் இயற்றிய நூல்தான் மேலே குறிப்பிடப்பட்ட ‘கிதாபுர்-ரூஹ்’என்பதாம்.  அவர் இயற்றிய ‘அல்கபாயிரு-பிஸ்-ஸூன்னத்தி-வல்-பிதுஅத்தி’ என்ற நூலிலும் மேலே சொல்லப்பட்டது போன்ற கறாமத்துஅற்புதங்கள் சிலவற்றையும் அவர் வரைத்துள்ளார்.


      ‘மஸ்னவீ-­ஷரீஃபின்’ ஆசிரிய மேதை, ஹள்ரத் மெளலானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி (ரலி) அவர்கள் குறிப்பிடும் அற்புத சம்பவமொன்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.  அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:-


      ‘காரீ ஒருவர் மத்ரஸாவில் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறார். ‘மந்திக்’ எனும் தத்துவ சாத்திரத்தைக் கற்ற ஒருவர் அப்போது அந்தப்பக்கம் செல்கிறார்.  அப்போது அந்தக்காரீ (குல்-அரஅய்த்தும்- இன் அஸ்பஹ மாஉக்கும்...)


      “உங்களுடைய(குடி) தண்ணீர் பூமிக்குள் சென்று வற்றி வரண்டு போய்விட்டால் ஓடும் ஜலத்தை உங்களுக்குக் கொண்டுவருபவர் யார்?” என்ற(67:30) திருவசனத்தை ஓதிக்கொண்டிருப்பதை அவர் காதில் கேட்டார்.


      உடனே அந்தத் தத்துவ சாஸ்திரி, “ஏன்! கடற்பாறை மண்வெட்டி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீரை நான் வெளியே கொண்டு வருவேன்!”என்று துடுக்காக உரைத்தான்.


      அன்றிரவு அவன் கனவொன்று காணுகிறான்.  அதில் ஒரு பெரியார் தோன்றி, “நீ தண்ணீர் கொண்டு வருவதிருக்கட்டும்.  உனது கண்ணொளியைக் கொண்டு வா, பார்ப்போம்” என்று கூறி அவனது முகத்தில் ஓங்கி அறைந்தார். உடனே, அவன் திடுக்கிட்டுப் பதறி விழித்தெழுந்து அமருகிறான்.  உண்மையிலேயே தனது கண்ணொளி மறைந்து, தான் அந்தகனாய்விட்டதை உணர்ந்து கை சேதமுற்றான்.

      இவ்விபரம், மஸ்னவீ ­ரீப், 2-வது பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. தப்ஸீர், ஜாஹிதியிலும் இதுபோன்றதோர் நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.


    கறாமத்தைக் கொண்டு அவுலியாவை ஜியாரத்துச் செய்வதற்காக கஃபத்துல்லா போகுமா?” என்று இமாம் நஸபீ (ரஹ்) அவர்களிடத்தில் வினவப்பட்டது.  அப்போது இமாம் அவர்கள்,“கறாமத்தால் அது போகக் கூடும். ஸூன்னத்-வல்-ஜமா அத்துக் கொள்கைப்படி அவ்வாறு போவது ஆகும்” என்பதாக விடையளித்தார்கள் என்ற விபரத்தை, ஹனபி மதுஹப், கிரந்தமாகிய துர்ருல்-முக்த்தாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதை அந்நூலின் ஹாஷியா- றத்துல்- முஹ்த்தார், 2ஆவது பாகம், 684-ஆவது பக்கத்தில் உறுதிப்படுத்தப் பெற்றிருப்பதோடு, “அவுலியாக்களிடம் கஃபத்துல்லாஹ் ஜியாரத்திற்குப் போவது 

அவர்களுடைய கறாமத்திலுள்ளதாகும்.  இத்தகைய கறாமத்தை இன்கார் செய்பவன்  வழிகெட்ட முஃத்தஸிலாக் கூட்டத்தைச் சேர்ந்தவனாவான்” என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


      “றாபிஅத்துல்-அதவிய்யா நாயகி  (ரலி) அவர்களைக் கஃபத்துல்லாஹ் ஜியாரத்துச் செய்யச் சென்றது” என்ற விபரம் ரூஹூல்-பயான், 9 ஆவது பாகம், 112-வது பக்கத்திலும், இஹ்யா-உலூமுத்தீன், 1ஆவது பாகம், 242 ஆவது  பக்கத்திலும் காணப்படுகின்றது. “ஹஜருல் அஸ்வதைவிட, இன்ஸான் காமில் (பரிபூரணத்துவம் அடைந்த அவுலியா)உடைய கை மேன்மையானது” என்றும், கஃபத்துல்லாஹ்வைப் பார்க்கினும் இன்ஸான்காமில் மேலாம்பரமானவர் என்றும் ரூஹுல் பயான், 9 ஆவது பாகம், 23-வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளன.


                                                                (தொடரும்)

 

y:�(�amx