ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  நம்மைப் போன்ற மனிதர் அல்ல


நம்மைப் போன்ற மனிதரென

நாயகத்தை எண்ணாதே!


திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தினமும் நோன்பு நோற்றுவருவதைப் பார்த்த ஸஹாபாக்களில் சிலர், தாங்களும் தினமும் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள்.  அதனையறிந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அந்த ஸஹாபாக்களைப் பார்த்து, ‘நான்உங்களுக்கு தினமும் நோன்பு நோற்க உத்திரவோ, அனுமதியோ தரவில்லை.  அப்படியிருக்க என்னைப் பார்த்து நீங்களும் தினமும்நோன்பு நோற்றுவர உங்களில் யார் என்னைப் போன்று (சக்தி பெற்று) இருக்கிறீர்கள்.’  மற்றொரு ரிவாயத்தில், ‘நான்உங்களில் யாரைப் போன்றும் இருக்கவில்லை.  நான்எனது ரப்புவிடம் தங்குபவன்; எனக்கு என்னிறைவன் உணவு ஊட்டுகிறான்.  பானம் புகட்டுகிறான்.  (அதனால் தினமும் நான் நோன்பு நோற்கிறேன்) ஆகவே நான்உங்களில் யாரைப் போன்றுமில்லை’ (நீங்கள் தினமும் நோன்பு நோற்க சக்தி பெற மாட்டீர்கள்என்ற காரணத்தால் நீங்கள்அவ்வாறு கடைபிடிக்க வேண்டாம்) என அறிவித்தார்கள்.


      ஒரு நேரம் நன்நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருச்சமூகம் நான் சென்றிருந்தபோது அவர்கள் உட்கார்ந்துதொழுது கொண்டிருக்கக் காணுகிறேன். (அவர்கள் தொழுது முடித்த பின்பு) நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் சிரசின் மீது என் கரத்தை வைத்தேன், யா அப்தல்லாஹ் பின் அம்ருவே! என்ன? ஏன்? என நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க நான் சொன்னேன் : யா ரசூலல்லாஹ்!“நின்று தொழுவதில் பகுதி தான் உட்கார்ந்து தொழுவதாகும்” என தாங்கள் அறிவித்திருக்கிறீர்கள்.  (இப்போது தாங்கள் உட்கார்ந்து தொழுகிறீர்களே?)என.  அதற்கு, நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கம் தந்தார்கள் : ஆம்!(உம்மத்துகளான) உங்களுக்கு நான் அறிவித்தபடியே நீங்கள் செயல்பட்டு வாருங்கள்.  (என்னுடைய அமல் - செயல் - போலவும் செய்யும்படி நான்உங்களுக்கு அறிவிக்கும் வரை நீங்கள் என்னுடைய அமல்களின்பால் கவனிக்காதீர்கள்) ஏனெனில்நான் உங்களில் யாரைப் போன்றும் இல்லை.


      ­ரயீ கண்ணோட்டத்தில்வேறுபாடு


      திருக்கலிமாவில் “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹதுஅன்னமுஹம்மதற் றஸூலுல்லாஹ்” என்னும் ஏகத்துவத் திருக் கலிமாவின் பிற்பகுதியில் ‘அன்ன முஹம்மதற் றஸுலுல்லாஹ்’ - ‘முஹம்மத்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என நாம் நற்சாட்சி சொல்கிறோம்.  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்‘அன்னீ ரஸுலுல்லாஹ்’ - நான் அல்லாஹ்வின் தூதர் எனச் சொல்வார்கள்.  நாமும் அவர்கள் சொல்வது போன்று சொல்வோமானால்  காபிர் ஆகிவிடுவோம்.


      கடமைகள் ஐந்தல்ல!


      இந்த உம்மத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும், கலிமா,தொழுகை, நோன்பு, ஜகாத்,ஹஜ்ஜு இந்த ஐந்துமே கடமையாகும். ஆனால் நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான்குதான் கடமை,ஜகாத் அவர்களுக்குக்கடமையில்லை. ஏனெனில் மனிதர்கள் அனைவரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுக்குஅடிமைகளாக இருக்கி றார்கள்.  ஓர் எஜமான்,தனது ஜகாத்தை தனது அடிமைக்குக் கொடுத்தால் நிறைவேறாது என்பதுமார்க்கச் சட்டம்.


அடிமைநாம்!


      (நபியே!) நீங்கள் அறிவியுங்கள். எல்லை மீறி தவறுகள் செய்துவிட்ட என் அடியார்களே! (நீங்கள் எவ்வளவு பெரியதவறுகள் செய்து விட்டாலும்) அல்லாஹ் வின் அருட்கடாட்சத்தை விட்டும் நிராசை யாகிவிடாதீர்கள்.  (பாபமன்னிப்புத் தேடிக்கொள்ளுங்கள்.  இனி அப் பாபங்களைச்செய்யாதீர்கள்.)  ஏனென்றால் நிச்சயமாகஅல்லாஹ் பாபங்களனைத்தையும் மன்னிப்பவனா யிருக்கிறான்.  நிச்சயமாக அவன் அன்பாளனாகவும், மன்னிப்பவனாகவு மிருக்கிறான்.  (அல்குர்ஆன் 39 -53).  மனிதர்களைப் பார்த்து “என்அடியார்களே” என்றழைத்துக் கூறும்படி அறிவித்திருக்கும் இந்தவசனம்  மனிதர்கள் எல்லோருமே அம் மாமன்னர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதைநிரூபிக்கிறது.             (நூல் : ரூஹுல்பயான்)


தொழுகை ஆறு 


      தஹஜ்ஜுத் தொழுகையும் சேர்த்து ஆறுவேளை தொழுகை நன்நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கடமையாகும். உம்மத்துகளில் யாருக்கும் தஹஜ்ஜுத் தொழுகை கடமையில்லை. (நஃபில் தான்)


இடையில் வந்தாலும் இமாம்!


      ஒரு சமயம்,முஸ்லிம்களிடையே ஒரு விவகாரத்தில் பைசல் செய்ய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சென்றிருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் ஹள்ரத் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லி, ஸுன்னத் தொழுகைக்குப் பின் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைஇமாமத் செய்யும்படி வேண்டினார்கள்.  அதனையேற்று  அவர்கள் இமாமாக நின்று தொழுகைநடத்திக் கொண்டிருந்த போது நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை தந்துவிட்டார்கள்.  இதையறிந்த சித்தீக் (ரலி)அவர்கள் சற்றும் தாமதிக்காமல் பின் வாங்கிக் கொண்டார்கள்.  நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேஇமாமாக நின்று தொழவைத்தார்கள். இந்த ஹதீதில், புகாரீ ­ரீபிஃன் விரிவுரையாளர், மேதை இமாம்அய்னீ (ரஹ்) அவர்கள் கீழ்க்காணும் தீர்ப்பை  வழங்கியுள்ளார்கள்.  தொழுகை ஜமாஅத்தை இமாமாக நடத்திக் கொண்டுஇருப்பவர், அத்தொழுகையின்இடைவேளையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகபின் வாங்குவதும், நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்முன் சென்று இமாமாக தொழுகையை நடத்துவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு இருக்கும் தனித்தன்மையாகும்.


சொத்துகளில் தனிச்சட்டம்


      நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொத்துக்கள் அவர்களின்மறைவிற்குப் பின் அவர்களின் குடும்பத்தினருக்கு உரியதல்ல; இஸ்லாமியர்களின்பொது உடமையாகும்.


      திருமறை குர்ஆன் ­ரீஃபில் அனந்தரச் சொத்துக்கள்யாருக்கு எவ்வளவு என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  அப்படியிருந்தும் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இதிலிருந்து விலக்களித்திருப்பது தனிச் சிறப்பாகும்.


மஹரில்லாமல் மனைவி!


      ஒரு பெண் தம்மைத் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமனைவியாக்க முன்வந்தால்,நபியவர்களும் அப் பெண்ணை மணந்து கொள்ள விரும்பினால் மஹர் இல்லாமலும்சாட்சிகளில்லாமலும் மணந்து கொள்ளலாம்.  இது(நபியே) உமக்கு மட்டுமே உரிமையாகும். உம்மத்துகளில் - முஃமின்களில் யாருக்கும் இந்தஉரிமை யில்லை. (அல்குர்ஆன் 33 - 50) அப்படி தானாக முன்வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு  தம்மை மனைவியாகஅர்ப்பணித்த மனைவி மார்கள்,மைமூனாபின்த் ஹாரித், கவ்லா பின்த் ஹகீம்,உம்மு ­ரீக் பின்த் ஜாபிர், ஸைனப் பின்த்குஸைமா.                                                                              (நூல்: மிர்காத், தபரீ, அஹ்மதீ.)


 அன்னையரே!


      மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள்உம்மத்துகள் அனைவர்களுக்கும் தாய்மார்களாவார்கள் என்கிறது இறைமறை.           (குர்ஆன் : 33 - 6)


      உம்மத்துகளில் எந்தப் பெண்மணியும் பெற்ற பிள்ளைக்கு மட்டுமேதான்தாயாக இருப்பாள்.  மற்றெவருக்கும் தாய்என்ற பெயரில் மார்க்க விதிகள் உண்டாகப் போவதில்லை. மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் மறைவிற்குப் பின் அவர்களின் மனைவிமார்களில் யாரும் வேறு யாரையும்மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இறைமறை ஆணையாகும்.           (குர்ஆன் 33 - 53)


      உம்மத்களில் யார் மரணமாய் விட்டாலும் அவரது மனைவி மறுமணம் செய்துகொள்ள உரிமையளிக்கப் பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே!


பொது விதிகளில் விருப்பம் போல்திருத்தும் உரிமை


      கத்தாதா (ரலி) அவர்கள் மூலம் ரிவாயத் செய்யப்படுகிறது.  ஒருவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் வந்து நான்உங்களை விசுவாசம் கொள்கிறேன்.  ஆனால்நீங்கள் சொல்லும் ஐவேளை தொழுகைகளையும் தொழமாட்டேன்.  இருவேளைகள் மட்டும்தான் தொழுவேன் என்றார்.  நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனைஏற்று அவருக்கு திருக்கலிமா சொல்லிக் கொடுத்து இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார்கள்.             (நூல் : முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல்)


      முஸ்லிம்கள் மீது ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டிருக்க, மூன்றுவேளைதொழுகைகளை அவருக்கு தள்ளுபடி செய்து கொடுத்திருப்பது தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மார்க்கத்தில் தனி உரிமையளிக்கப்பட்டிருக்கும் சிறப்பைக்காட்டுகிறது.


சொல்வேனேயானால்...


      நன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமயம்அறிவித்தார்கள் : “முஃமின்களே! உங்கள் மீது ‘ஹஜ்’ கடமையாக்கப்பட்டிருக்கிறது.  ஆகையால் நீங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்” என்று.  ஒரு நபர், யா ரஸூலல்லாஹ்! ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுகடமையா? எனக் கேட்டார். அப்போது, நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்நான் ஆம் எனச் சொல்வேனேயானால் ஒவ்வோர் வருடமும் கடமையாகிவிடும்.  அப்போதுமனிதர்கள் ஆண்டு தோறும் ஹஜ்ஜு செய்யவேண்டிய  கட்டாயத்திற்கு உள்ளாகி விடுவார்கள் என அறிவித்தார்கள். 

 

    நன்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருவாயிலிருந்து எது வெளியாகுமோ அதுதான் விதி - சட்டம்.  இது தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தனிப்பெரும் சிறப்பைக் காட்டுகிறது.

இரண்டாவதுதிருமணத்திற்குத்  தடை!


      ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் தங்களின் மçவி பாத்திமா (ரலி)அவர்கள் இருக்க இரண்டாவது திருமணம் செய்ய விரும்பினார்கள்.  இதனையறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அதற்கு அனுமதியளிக்காமல் தடுத்து விட்டார்கள்.  வேண்டுமானால் பாத்திமாவை தலாக் கொடுத்துவிட்டு, நான்குமனைவிகளை திருமணம் செய்து கொள்ளும் என ஆணையிட்டார்கள்.                                  நூல் : மிர்ஷாத் - (மிஷ்காத் விரிவுரை)


      அல்லாஹ் தனது திருமறையில் “நீங்கள் விரும்புகிற பெண்களிலிருந்துஒன்றோ இரண்டோ மூன்றோ நான்கோ மணம் முடித்துக் கொள்ளுங்கள்” என அறிவித்துள்ளான்.  அப்படி இருந்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்,அலி (ரலி) அவர்களைத் தடுத்திருப்பது, ­ரயீ - மார்க்கச் சட்டவிதிகளில் அவர்களுக்குத் தனி உரிமை இருப்பதைக் காட்டுகிறது.


சொந்த மனைவியுடன்  சேர்ந்திருக்கத் தடை


      ஹள்ரத் கஃபு பின் மாலிக் (ரலி), ஹள்ரத் ஹிலால் பின் உமய்யா, ஹள்த் மீறா ரஃ பின் ரபீயா (ரலி) இம் மூவர்களும் தபூக் போர்க்களம் போகாமல்சற்று கவனமில்லாது மதீனாவிலேயே  தங்கிவிட்டார்கள்.  போர் முடிந்து வெற்றி வாகையுடன் திரும்பி வந்து, போரில் கலந்துகொள்ளாத காரணம் பற்றி அம்மூவரிடமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்விசாரித்தபோது, யுத்தத்தில் கலந்து கொள்ளாமலிருக்கும்அளவிற்கு எந்த தக்க காரணமுமில்லை என்பதை அம்மூன்று தோழர்களும் ஒப்புக்கொண்டனர்.  குற்றத்திற்காக அவர்கள்சம்பந்தமாக இறைவனிடமிருந்து தீர்ப்பு வரும் வரை யாரும் அவர்களோடு பேசுவதோ, கொடுக்கல் வாங்கல் செய்வதோ கூடாது என்று பொதுக்கட்டுப்பாடும்விதித்தார்கள்.


      இந்த ஆணைக்கிணங்க உற்றார், உறவினர், சுற்றத்தார்,நண்பர்கள் யாரும் அவர்களிடம் நெருங்கவில்லை.  இப்படி நாற்பது நாட்கள் கடந்த பின், அம்மூவரில் ஒருவரான கஃபு (ரலி) அவர்கள் தமது மனைவியுடன் சேரக்கூடாது எனஆணை பிறப்பித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தகவல்அனுப்புகிறார்கள்.  கஃபு அவர்கள், வந்த தூதுவரிடம், எனது மனைவியை தலாக் - விவாகரத்து -செய்து விடட்டுமா? எனக்கேட்க, அப்படிஇல்லை, மனçவியை விட்டும் விலகிஇருக்கத்தான் உத்திரவு பிறப்பித்தார்கள் என பதில்தருகிறார்கள்.  அப்போதே கஃபு (ரலி) அவர்கள் தமது மனçவியை தாய் வீடுசெல்லுமாறு உத்திரவிட்டு அனுப்பி விட்டார்கள்.                                         

           (நூல் : தப்ஸீர் நயீமி, ஸாவி)

 

தெளபா வாசலை அடைக்கவும் திறக்கவும் உரிமை


      வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருடைய தவ்பாவைஒப்புக்கொள்ளத் தகுதியில்லை என முடிவு செய்கிறார்களோ அவரது தவ்பாவை ஏற்க மறுத்துவிடுகிறார்கள்.


      தஃலபா பின் காதிப், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சமூகம், தாம் செல்வந்தனா வதற்கு துஆச் செய்யும்படி வேண்டிக்கொண்டார். நன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்குஇவ்விதம் கூறினார்கள் : பெரும் செல்வம் பெற்று நன்றி செய்ய முடியாமல் போவதைவிடகுறைந்த செல்வம் பெற்று நன்றியுடன் நடந்து கொள்வதே நல்லது என.   மற்றொரு முறையும் தஃலபா, தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து செல்வப் பெருக்கிற்குதுஆ செய்யும்படியும், தங்களை உண்மை நபியாக அனுப்பி வைத்தஅல்லாஹ்வின் மீது சத்தியமாக, எனக்கு செல்வப் பெருக்குஉண்டாகுமானால் அதன் அனைத்து கடமையையும் நிறைவேற்றி வருவேன் என்றும் வாக்களித்துவேண்டி நிற்கின்றார்.  கோமான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள்.  அல்லாஹ் அவனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் துஆவை ஏற்று தஃலபாவிற்கு பாக்கியம் செய்தான்.  அதனால் அவரது ஆடுகள் மந்தை மந்தையாகப்பெருகிற்று.  மதீனா நகருக்குள் அவற்றைவைத்துப் பராமரிக்க முடியாமல் இடவசதியில்லாமல் காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றார்.  மந்தை மந்தையாக பெருகிக்கொண்டிருக்கும் ஆடுகளை கண்காணித்து வரவேண்டிய காரணத்தால் அவர் ஜமாஅத் தொழுகையில்கலந்து கொள்ளவில்லை.  பிறகு கடமையான ஜும்ஆதொழுகைக்கும் வரமுடியாமல் ஆகிவிட்டது.


      ஜமாஅத் தொழுகைக்கும் ஜும்ஆவிற்கும் கூட தஃலபா வரக் காணவில்லையே, காரணமென்னஎனக் கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களிடம் வினவ, அவருக்கு ஆட்டுச் செல்வம் அதிகரித்துவிட்டது.  தற்போது அவரது ஆட்டு மந்தைக்கு மதீனாநகருக்குள் இட நெருக்கடி ஏற்பட்டது போல் காட்டுப் பகுதியிலும்கூட இட நெருக்கடிஏற்பட் டிருக்கிறது எனத் தோழர்கள் கூறினார்கள். இச்செய்தியை செவியேற்ற செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “தஃலபாவிற்குநேர்ந்த கைசேதமே” என வருந்தி அனுதாபம் தெரிவித்தார்கள்.


      ஆட்சி நியதிப்படி, ஏழை வரி - ஜகாத் வசூலிக்க தஃலபாவிடம்சென்றவர்கள் வரி செலுத்தும்படிக் கேட்ட போது அவர் இப்படி பதிலளித்தார்; இது என்ன கெடுபிடியான வரி வசூலாக இருக்கிறது.  நீங்கள் செல்லுங்கள், நான்யோசனை செய்து கொள்ளட்டும் என. அந்த வசூல்காரர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் வந்து தஃலபாவின்செய்தியைச் சொல்வதற்கு முன்பே “தஃலபாவிற்கு நேர்ந்து விட்ட கைசேதமே” என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  இருமுறை கூறினார்கள்.   வந்தவர்கள், தஃலபா  சொன்ன செய்தியைச் சொல்லிக் காட்ட, தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுவர்களாக ஜகாத்வசூலிக்கச் சென்றவர்களை தஃலபா உதாசீனம் செய்து விட்டாரே என்று வருந்தி“தஃலபாவிற்கு நேர்ந்த கைசேதமே” என அவர்கள் திருவாய் மொழிந்த உடனே அதனை உறுதிப்படுத்தும்வகையில் இறைவசனம் இறங்கிவிட்டது.


      அல்லாஹ் தனது அருளினால் தனக்கு (செல்வத்தைத்) தந்தருள்வா னானால், நிச்சயமாகநாங்கள் தருமம் கொடுத்து வருவோம், நேர்மை யானவர்களின்கூட்டத்தில் ஆகிவிடுவோம் என அல்லாஹ்விடத்தில் வாக்களித்தான். அல்லாஹ் தனது அருளால்(அவனுக்கு செல்வத்தை)க் கொடுத்தபோது அவன் கஞ்சனாக - உலோபியாக ஆகிவிட்டான்.  இத்தகையவர்கள் (இறைவனை விட்டும், ரஸூலை விட்டும்) அலட்சியமாகப் புறமுதுகு காட்டுகிறார்கள்.  இதன் காரணத்தால் அத்தகைய உலோபிகளின்உள்ளங்களில் நயவஞ்சகக் குணத்தை அல்லாஹ் இடம் பிடிக்கச் செய்து விட்டான்.  (இந்தத் தீயகுணம்) அல்லாஹ்வைச் சந்திக்கும்காலம் வரை (அவர்களின் உள்ளங்களை விட்டும் நீங்காமல்) இருந்தே வரும்.                (அல்குர்ஆன் : 9 - 75, 76, 77)


      பிறகு தஃலபா, ஜகாத்தை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சமூகம் வருகிறார்.  அப்போது “உமது ஜகாத் இனி ஏற்கப்படுவதற்கில்லை”என அறிவித்து திருப்பி அனுப்பி விட்டார்கள்.  வந்த  தஃலபா தமது தலையில் மண்ணைவாரிப்போட்டுக் கொண்டு “எனக்கு ஏற்பட்டகைசேதமே” எனக்கூறிக் கொண்டே சென்று விடுகிறார். இதன்பின் அமீருல் முஃமினீன்அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது அவர் தமது ஜகாத்தைக் கொண்டுவந்தார்.


      உத்தம நபியே உம்முடைய ஜகாதை ஏற்கவில்லை யாதலால் நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனக் கூறி திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.  பிறகு கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின்ஆட்சியின் போதும் கொண்டு வந்தார். முன்போலவே இவர்களும் கூறி விடுகிறார்கள்.அல்லாஹ் அறிவித்ததுபோல தஃலபாவிற்குஅபகீர்த்தியாகவே அவரது காலம் கடந்து கலீபா உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் மரணமடைந்தார். (நூல் : தப்ஸீர் ரூஹுல் பயான், மதரிக்,கபீர், நயீமி.)


      தஃலபா ஹயாத்தாக இருந்து அவரும் திரும்பத் திரும்ப ஜகாத்தைக்கொண்டு வந்தும்,தவ்பா செய்ததுபோல் ஆகியிருந்தும் அவரது தவ்பாவை ஏற்க மறுத்ததன்மூலம் அவருடைய தவ்பாவின் கதவு அடைக்கப்பட்டு விட்டது.  இது தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு மார்க்கச் சட்டப் பிரயோகத்தில் உள்ள தனி உரிமையைக் காட்டுகிறது.


ஒருவருக்கு இருவரின் தரம்


      நன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸவார் பின் ஹாரித்என்பவரிடம் இருந்து ஓர் குதிரையை கிரயத்திற்கு வாங்கினார்கள். இந்த  வியாபாரம் நடந்தபின் அந்த ஸவார் பின் ஹாரித்இதனை மறுக்கின்றார்.  இந்த  என்னுடைய குதிரையை உமக்கு நான்விற்கவில்லை என்றும் அப்படி நீர் என்னிடமிருந்து கிரயமாக வாங்கிக் கொண்டீர்என்றிருந்தால் அதற்கு அத்தாட்சி கொண்டு வாரும் என வாதாடுகிறார்.  உண்மையில் அந்த ஒப்பந்தம் இவ்விருவருக்குமிடையேதனியாகவே நடந்ததாகும்.  யாரும் அப்போதுஅங்கிருக்கவில்லை.


      இப்படி அவர் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கும் சமயம் அங்குகுஸைமா (ரலி) அவர்கள்,யா ரஸூலல்லாஹ்! இந்தக் குதிரையை, தாங்கள்அவரிடமிருந்து கிரயத்திற்கு வாங்கிவிட்டீர்கள். இவ்வி­யத்தில் தாங்கள் மெய்யானவர்கள். அந்தக் காட்டரபி பொய் சொல்கிறார் என நான் சாட்சி சொல்கிறேன்என்றார்கள்.  இதைக் கேட்ட அண்ணல் அவர்கள்குஸைமாவிடம், ‘நீர்எப்படி சாட்சி சொல்ல முடியும்? அந்த வியாபார ஒப்பந்தம்நடக்கும் போது நீர் இருக்கவில்லையே!’ என வினவியபோது, குஸைமா(ரலி) அவர்கள் சொன்னார்கள் : யா ரசூலல்லாஹ்! நான் தங்களின் திருவாயினால்மொழிந்ததைக் கேட்டு, அல்லாஹ் ஒருவன் என்றும், தாங்கள் அவனது திருத்தூதர் என்றும், சுவர்க்கம்,நரகம், கியாமத் போன்றவை களையயல்லாம் நம்பிவிசுவாசம் கொண்டு சாட்சி சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன்.  அப்படிஇருக்க ஒரு குதிரை அவைகளையயல்லாம் விடப் பெரிதாய் விட்டதா? என.இந்த விளக்கத்தைக் கேட்ட நன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த குஸைமா (ரலி) அவர்களுக்கு இரு சாட்சிகளின் அந்தஸ்து கொடுத்து இவரின்சாட்சியே தீர்ப்பு  கூறப் போதுமானதாகும் என அறிவித்துவிட்டார்கள். (நூல் : புகாரீ ­ரீப்)


      அல்லாஹ் தனது திருமறையில் “உங்களிலிருந்து இரு நீதஸ்தர்களைசாட்சியாக்கி வையுங்கள்” என அறிவித்துள்ளான். இந்தப் பொது விதியிலிருந்து ஓர் தனி நபருக்கு விதி விலக்களித்திருப்பதுதாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருக்கும் தனிச்சிறப்பைக்காட்டுகிறது.


ஐந்து சிறப்புக்கள்


      “எனக்கு முன் சென்றவர்களில் யாருக்கும் கொடுக்கப்பட்டிருக்காதஐந்து காரியங்களால் நான் சிறப்பிக்கப்பட்டிருக்கறேன்.


      1.  எல்லா நபிமார்களும்அவரவர் கெளமுகளுக்குத் தான் நபியாக அனுப்பப்பட்டார்கள்.  நான் வெளுப்பா னவர், கருப்பானவர்,அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்.  முஸ்லிம் ­ரீப் நூலில் இப்படியும்வந்திருக்கிறது. “நான் எல்லா படைப்புகளுக்கும் தூதுவராக அனுப்பப்பட்டுள்ளேன்.  என்னோடு நபிமார்களின் பட்டியல்முடிக்கப்பட்டுவிட்டது.”


      2.  எதிரிகளை  வெற்றி கொண்டு கைப்பற்றப்படும் கனீமத் பொருள்கள்எல்லாம் எனக்கும் என் உம்மத்துகளுக்கும் ஹலாலாக்கப்பட்டிருக்கின்றன.  எனக்கு முன் சென்ற யாருக்கும் அவைகள்ஹலாலாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அப்பொருள்களை யயல்லாம் நெருப்பிட்டுக்கொளுத்தப்பட வேண்டும் என்பதே அந்தச் சட்டமாகும். 

    

     3.  பூமி முழுவதும் எனக்குத் தொழுது கொள்வதற்குத்தகுந்ததாக ஆக்கித்தரப்பட்டுள்ளது. தண்ணீரில்லாத போதும், தண்ணீரை உபயோகிக்க முடியாதிருக்கும் போதும், தயம்மும் செய்து கொள்ளத் தகுந்த பொருளாகவும் அதை எனக்கு ஆக்கித்தரப்பட்டுள்ளது.


      4.  பகைவர்கள் போருக்குஆயத்தமாவார்களானால்,அவர்கள் போர்க்களத்திலிருந்து ஒரு மாத கால தொலைதூரத்திலிருக்கும்போதே என்னைப்பற்றிய அச்சமும் பயமும் அவர்களின் உள்ளத்தில்ஏற்படுத்தப் படுகின்றன.  அவற்றின் மூலமும்இறைவன் எனக்கு உதவியளிக்கிறான்.


 5.  உம்மத்தார்களுக்காகநான் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் - ­பாஅத் உரிமைகொடுக்கப்பட்டுள்ளேன்.                           (நூல் : புகாரி, முஸ்லிம்)


      மேதைகாலி இயாழ் (ரஹ்) அவர்கள் கீழ்க்காணும் விளக்கம் தருவதாக ­ரஹ் முஸ்லிம் நூலில்கிடைக்கிறது.


      அதாவது பரிந்துரைக்கும் ­பாஅத் 5 வகைப்படும். 1) மஹ்­ர் மைதான நிலைக்களத்தில் நிலவி நிற்கும் குலை நடுக்க பயங்கரத்தை அகற்றுவ தற்காகவும்,  விசாரணையைத் துரிதப்படுத்தி(அனுப்பு)வதற்காகவும்,                        2)நல்லடியார்களை விசாரணை யில்லாது சுவனம் அனுப்புவதற்காகவும், நன்நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ­பாஅத் செய்வார்கள்.                                   3)  நரகவாசிகள் எனத் தீர்ப்பு வழங்கப் பட்டவர்கள்அந்தத் தண்டனையை அடையாமல் இருப்பதற்காகவும் நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி      வஸல்லம் அவர்கள் ­பாஅத் செய்வார்கள்.  அல்லாஹு தஆலாவும் அத் தீர்ப்பிலிருந்து, தான் நாடுபவர்களைவிடுவிப்பான். 4) நரகம் சென்று விட்ட பாவிகள் அவர்களின்விடுதலைக்காக, நன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மலக்குகளும் முஃமினான அவர்களின்சகோதரர்களும் சிபாரிசு -   ­பாஅத்  செய்வார்கள். அல்லாஹுவும் அவர்களிலிருந்து தான் நாடுபவர்களை விடுதலையளிப்பான். 5)நற்பதவி யாளர்களின் பதவிகளை உயர்த்துவதற் காகவும் ­பாஅத் செய்வார்கள்.    (நூல் : மிஷ்காத்)

 

நன்றி: மெளலவி,அப்துல் காதர்பாகவீ, பைஜீ  அவர்கள் எழுதிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிப்பெரும்சிறப்புகள்.