ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Jan 2012  »  எழுச்சிமிகும் விழா!


வரலாற்றுச் சிறப்புமிக்க வலிகமாவில்

எழுச்சிமிகும் விழா!


இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்  முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் முஹிய்யுத்தீன் M.A, Ex. M.P   அவர்கள்ஆற்றிய உரையிலிருந்து...


உரைத் தொகுப்பு : ஆஷிகுல் கலீல் B. Com;


 

சீனாவில், தாய்லாந்தில்ஏன் தமிழகத்தின் பலபாகங்களில் இஸ்லாமியர்கள் யாரும் ஆட்சி செய்ததில்லை.  எனினும் இஸ்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிரவி வியாபித்து இருப்பதற்குக் காரணம் சூஃபிகள் என்னும் இறை ஞானச் செல்வர்கள்தாம்.  அன்னவர்களின் தியாகங்களும்நல்அறங்களும் நல்லெண்ணங்களும் நற்செயல்களும் நற்குணங்களும் இஸ்லாத்தை எல்லாஇடங்களுக்கும் இட்டுச் சென்றன.  வெறும்பிரச்சாரங்களாலும் சட்டங்களாலும் மட்டுமே இம்மாபெரும் மார்க்கத்தை யாரும் பரப்பிஇருக்க இயலாது.


      இஸ்லாமிய உண்மை வழிமுறைகளைச் சொல்லும் தரீக்காக்கள்,  தரீக்காக்களை வழிநடத்தும் ய­ய்குமார்கள், அன்னவர்களின்சொல், செயல், எண்ணம் ஆகியவை முழுமையாகஇருந்தமையால் தாம் இஸ்லாம் எல்லா இடங்களிலும் வேரூன்ற முடிந்தது; முடிகின்றது.


      இஸ்லாம் வேரூன்றக் காரணமாயிருந்த மாபெரும் மகான்களின் வழிவந்த சங்கைமிகு இமாம் வாப்பா நாயகம் அவர்களின்அருகில் நானும் இருப்பதற்கு வாய்ப்பளித்தஇறையோனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. 


      சங்கைமிகு இமாம் வாப்பா நாயகம் அவர்கள் எழுதி அருளிய உரைகள், கவிகள்அனைத்தும் என் இதயத்தில் ஊடுருவிச் சென்று எனது ஈமானை பலப்படுத்தியுள்ளது.  அன்னவர்களின் சொல், செயல்அத்தனையும் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ,கியாஸ் அடிப்படையில் முழுமையாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.  அவைகளை சந்தேகமற்ற நிலையில் சிந்தித்தாலே இம்மை,மறுமைப் பேறுகளை நாம் பெற்றிட முடியும்.


      நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதயதின விழாவைஇங்கு இன்று உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.  1969 ஆம் ஆண்டு தமிழகத்தில் டாக்டர் கலைஞர்அவர்கள் முதல்வராயிருந்த போது முதன்முதலாக மீலாதுந் நபி தினத்தை விடுமுறை நாளாகஅறிவித்தார்.  அது இன்று வரை நல்லபடிதொடர்ந்து கொண்டிருக்கிறது.  டாக்டர்.கலைஞரைப் பின்பற்றி இந்திய அரசும் மீலாதுந்நபி தினத்தை தேசிய விடுமுறையாகஅறிவித்தது.  ஸ்ரீலங்காவிலும் மீலாதுன்னபிதினத்தை  அரசு விடுமுறை நாளாகஅறிவித்துள்ளது.  மீலாதுந்நபி விழாவைஅரசாங்க விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. தாய்லாந்திலும் பெரிய அளவில் மீலாது கொண்டாடப்படுகின்றது.  


      ஏன் அமெரிக்காவில் ஓய்ட் ஹவுஸில் கூட மீலாதுந் நபி விழா கொண்டாடப்படுகின்றது.


      நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளைநாம் கொண்டாடுவதால் அன்னவர்களுக்கு பெருமை சேர்வதில்லை.  ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைப் பற்றிப் பேசுவதாலும் சிந்திப்பதாலும் ஸலவாத்துச் சொல்வ தாலும் நமதுமனதிற்கு நிம்மதியும் சாந்தியும் ஏற்படுகின்றன. நமக்கு ஈருலகிலும் ஈடேற்றமும் நற்பேறுகளும் கிட்டுகின்றன.


      நேற்று இங்கு ஓதப்பட்ட ராத்திபு திக்ருகளைக் கேட்டு இன்புற்றுமகிழ்ந்தேன்.  அவற்றைக் கேட்கும் போதுஉள்ளத்திலிருந்த அழுக்கும் இழுக்கும் அகன்று மாசுபடிந்த உள்ளம் மணம்  பெற்றதை உணர்ந்தேன்.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு நுழையும் போதுசிறியோர்களாலும் பெரியோர் களாலும் பாடப்பட்ட பைத்துகளையும் இங்கு நேற்று இனிமையாகஅலங்காரமாகப் பாடினார்கள்.  அவற்றைக் கேட்கும் போதுபேரின்பப் பரவசம் ஏற்பட்டது.


      எதனை மனிதன் கற்பனை செய்திருக்கின்றானோ, எந்தமாசுகளைப் பாபங்களைப் பூட்டி வைத்திருக்கின்றானோ அவற்றை சங்கைமிகு இமாம் வாப்பாநாயகம் போன்ற மகான்கள் உடைத்தெறிந்து கற்பனைகளை விரட்டியடித்து விடுகின்றார்கள்.


      இதயத்திலிருக்கும் அழுக்கா றுகளை நீக்கி இதயத்தைத் திறந்துஇதயத்தில் இறையைக் காணும் ஆற்றலை உண்டுபண்ணுபவர்களே சங்கைமிகு வாப்பா நாயகம்அவர்கள்.  எனவே, ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் கண்டிப்பாக குரு ஒருவரைப் பெற்றிருக்க வேண்டும்.  தனிப்பட்ட முறையில் அறிவைப் பெற முடியுமா?என்றால் முடியும், ஆனால் முழுமையாகப் பெறமுடியாது!


      ஒரு கதை சொல்வார்கள் : ஒருவன் இரும்பைத் தங்கமாக்கும் முயற்சியில்ஈடுபட்டான்.  இரும்போடு பற்பல செடிகளையும்மூலிகைகளையும் சேர்த்து சேர்த்துப் பார்த்தான். ஆனால் இரும்பு தங்கமாகவில்லை.  அவன்மீண்டும் போராடினான்.  வெற்றிகிட்டவில்லை.  மன உளைச்சல் ஏற்பட்டு ஓரிரவுமண்டபத்தில் அயர்ந்து உறங்கி விட்டான். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும் போது இரும்பு, தங்கமாகமாறியிருந்தது.  அதனைக் கண்டுஇன்புற்றான்.  ஆனால், எந்த மூலிகையின் மூலமாக இரும்பு தங்கமாக மாறியது? என்பதனைஅவனால் அறிந்து கொள்ளஇயலவில்லை.  எனவே,உழைப்பின் மூலம் முயற்சி மூலம் ஒன்றை பெற்றிட இயலும்; ஆனால் அதில்முழுமையைக் காண இயலாது; எதார்த்தத்தைக் காண இயலாது!


      எனவேதான் எல்லாத் துறைகளுக்கும் ஒரு குரு (வழிகாட்டி) தேவை எனஉணருகின்றோம்.  நமக்கு இம்மையில் என்ன தேவை? மறுமையில்வெற்றி பெற வழிதான் என்ன? என்பனவற்றை தங்களின் சொல்லால்,செயலால், எழுத்தால், எண்ணத்தால்நம் மனதில் ஊடுருவி நம் எண்ணங்களை அழகாக, அலங்காரமாக,உயர்வாக, உன்னதமாக உயிர் பெறச் செய்யக்கூடிய  ஆற்றல் படைத்தவர்கள் தாம் சங்கைமிகுஇமாம் வாப்பா நாயகம் அவர்கள்! இவ்வாறான வழிமுறைகளை கூறக் கூடியவைதாம்தரீக்காக்கள்.  தரீக்காக்கள் தவறானவைஅல்ல.  (நல்ல) தரீக்காக்களைத் தவறு எனக்கூறுபவர்கள் தாம் தவறானவர்கள்.  ஏனெனில்நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வையும் வாக்கையும்வாழ்வியல் தத்துவத்தையும் மக்களுக்கு மத்தியில் கொண்டு சேர்த்த பெருமைதரீக்காக்களையே சாரும்.  தரீக்காக்களின்தலைவர்களான ய­ய்குமார்களையே சேரும்.


      மீலாது விழாக்கள் தேவை யில்லை எனச் சில குழப்பவாதிகள் கூறித்திரிகின்றனர் எனத் தளபதி ­பீகுர் ரஹ்மான் ஆலிம் குறிப்பிட்டார். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் உண்மை விளங்காமல் தாங்களும் குழம்பி மக்களையும்குழப்பிக் கொண்டிருக் கிறார்கள்.  இஸ்லாம்தெளிவான மார்க்கம்; அறிவார்ந்த மார்க்கம்; தூய இஸ்லாத்தைஎடுத்துரைப்பவை தரீக்காக்கள் தாம்!


      குறிப்பாக தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவைப் பலஆண்டுகளாக நான் கவனித்து வருகிறேன். கண்காணித்து வருகிறேன்.  இத்தரீக்காவைச் சேர்ந்த முரீதுகள், அஹ்பாபுகள் அவரவர்கள் சார்ந்த துறையில் தேர்ந்தவர்களாகஅறிவார்ந்தவர்களாக விளங்குகிறார்கள். ஞானத் தத்துவங்களை மட்டும் பேசிக் கொண்டிராமல் பற்பல துறைகளில் பங்காற்றிவருகிறார்கள்; பணியாற்றி வருகிறார்கள்.  அலுவலர்களாக, வணிகர்களாகவிளங்குகிறார்கள், முழுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதுதான் இந்த சமுதாயத்திற்குஇன்றைய தேவை.  இதுதான் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறை.  இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய ஓர் ஆன்மிகசமுதாயத்தை உருவாக்கிய சங்கைமிகு இமாம் வாப்பா நாயகமவர்களை உளமாற நான் போற்றிமகிழ்கிறேன்!


      சில நாட்களுக்கு முன் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ளவேளாங்கண்ணியில் கிருத்துவ பாதிரிமார்களின் மாபெரும் மாநாடு ஒன்றுநடைபெற்றது.  அதில் The christianity in the muslim point of view என்னும் தலைப்பில்என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.  நான்உரையாற்றிய பின் என்னிடம் முக்கியமான ஒரு வினாதொடுக்கப்பட்டது. ஒரு பாதிரியார்கேட்டார். உலகெங்கும் பரவலாக இஸ்லாத்தில் பயங்கரவாதம்இருப்பதாக பேசப்படுகிறது. அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? நான்கூறினேன். இஸ்லாத்தில் தீவிரவாதமோ பயங்கரவாதமோ இல்லை. அது மட்டுமல்ல, எங்கு தீவிரவாதம் பயங்கரவாதம் இருக்கின்றதோ அங்கு இஸ்லாம் இல்லை.  பிறருக்கு கையாலோ நாவாலோ கூட துன்புறுத்துபவன்முஸ்லிம் அல்ல என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறிய மார்க்கத்தில் தீவிரவாதமும்பயங்கரவாதமும் எப்படி இருக்க முடியும்? பிறருக்கு நாவால் கூடதுன்பம் தரக்கூடாதவன் துப்பாக்கியைத் தூக்கினால் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?                சாந்தியையும், சமாதானத்தையும் தனது இயற்பெயரிலேயே  வைத்திருக்கும்இஸ்லாத்தில் தீவிர வாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் என்ன அவசியம் இருக்கின்றது?எனவே, இஸ்லாத்தை அறிய வேண்டுமானால் ஒருமுஸ்லிமைப் பார்க்காதீர்கள்; இஸ்லாத்தைப் பாருங்கள்.  திருக்குர்ஆன் ­ரீஃபைப் பாருங்கள்; ஹதீதுகளைப்பாருங்கள்இஸ்லாத்தைவழிநடத்திச் செல்லும் சூஃபிகள் என்னும் ஞானிகளைப் பாருங்கள்; அன்னவர்களின் சொல் செயல் விளக்க ஞானங்களைப் பாருங்கள்; அதுதான் இஸ்லாம்! அவற்றில் தீவிரவாதம் பற்றியோ பயங்கரவாதம் பற்றியோ ஓர்எள் முனை அளவாவது இயம்பப் பட்டிருக்கின்றதா? என எண்ணிப்பாருங்கள்.  யாரோ ஓர் இஸ்லாமியப் பெயர்தாங்கி செய்யக் கூடியதவறுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது!      இஸ்லாத்தை இவ்வாறான இழிச் செயலுக்கு  உட்படுத்துவதும்  பொருத்தமாகாது என்று கூறினேன்!  அத்தகைய மகான்கள் இன்றும் கோலோட்சிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அப்பாதிரியாரிடம் கூறினேன்!


      “ஆத்துமாக்களை பரிபக்குவப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி மகான்கள்வாழ்வாங்கு வாழ்கிறார்கள்” என்பதற்கு சங்கைமிகு இமாம் வாப்பா நாயகமவர்கள் நம்முன்தோன்றிக் காட்சியளிப்பது நிச்சயமாகவே நமக்குக் கிடைத்த மகத்தான பெருமிதம்; நற்பேறு!


(பேராசிரியரின் உரைவீச்சு இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழிலும் தொடரும்)